From cbose@... Mon Jan 28 01:23:15 2002
Return-Path: X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 28 Jan 2002 09:23:15 -0000
Received: (qmail 31453 invoked from network); 28 Jan 2002 09:23:13 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 28 Jan 2002 09:23:13 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 28 Jan 2002 09:23:13 -0000
Received: from vsnl (unknown [203.199.230.42]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id 2D65A6C for ; Mon, 28 Jan 2002 14:57:47 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20020127194452.00823e20@...>
X-Sender: cbose@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sun, 27 Jan 2002 19:44:52 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: RE: [agathiyar] parotta & ilakkiyam
In-Reply-To: References: <3.0.6.32.20020127103621.0081fe70@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose" X-Yahoo-Group-Post: member; u=24653376
X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 15290
அன்பு முருகன்,
இலக்கியச் சிந்தனை நடக்கும் தெருவின்முனையில் ஒரு தற்காலிக கடை. புரோட்டா கடை அல்ல. அங்கே
சிக்கன், பீப் ஸ்பெஷல் மற்றும் ப்ரைட் ரைஸ் கிடைக்கும். ப்ரைட் ரைஸ் அங்கு நல்ல ருசியுடன் இருக்கும் என என்
மகள்கள் இருவரும் விரும்புவார்கள். எக் ப்ரைட் ரைஸ் ஒரு பிளெட் ரூ.18, சிக்கன் மற்றும் மட்டன் ப்ரைட் ரைஸ்
ரூ. 22. மற்ற அயிட்டங்கள் விலை நினைவில் இல்லை. பகலெல்லாம் மூடி மாலையில் போதாகி இரவு
முழுவதும் மலர்ந்திருக்கும் இந்த கடையில்வாங்குவதற்கு சிலர் யோசிப்பார்கள். நிறைய *குடிமக்கள்* வந்து
போகும் இடம். காரில் சென்றால் வாங்கி வைத்து காருக்குள் அமர்ந்து சாப்பிட்டுச் செல்லலாம். அல்லது
வீட்டுக்கு வாங்கி வந்து சாப்பிட வேண்டும். சுத்தமாக இருக்கும்.
வேறு தகவல் இருந்தால் தருகிறேன்.
அவசியம் நாம் எங்காவது சந்திக்க வேண்டும். முடிந்தால் என் இல்லத்திலேயே கூட சந்திக்கலாம். ஒரு சிறு
விருந்துடன். அடுத்த மாதம் இலக்கிய சிந்தனைக் கூட்டத்திற்கு வரவும். நானும் வருகிறேன்.
நண்பர் பழனியை நான் அங்கும் சந்தித்திருக்கிறேன். இங்கும் சந்தித்திருக்கிறேன். இல்லம் வந்திருந்தார்.
மணியை 99ல் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2000ல் சென்னையில் இருக்கும்போது பேசும் வாய்ப்பு கிடைத்தது.
நீலாங்கரை, நங்கநல்லூர், போரூர் எல்லாம் சென்னையிலா
இருக்கின்றன !.
மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை
At 12:16 PM 1/27/02 +0530, you wrote:
>போஸ் சாரே,
>
>அட ஆண்டவா .. லாவண்யா பொண்ணு, அதுவும்சிங்கப்பூர் பொண்ணுன்னு நினைச்சீங்களா? (கூடவே 'என்ன
>நம்ம இரா.மு வழியறாரேன்னு வேறே நினைப்பு..) சொக்கன் நாகன் நம்ம பக்கத்துப் புள்ளாண்டன் தான் பரந்த
>பார்வை உடைய அவர் பெண்களூரில் 'பிராட்விஷன்' நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
>
>நிச்சயம் சந்திப்போம். இரண்டு முறை நண்பர் வாஞ்சி வீட்டில் சந்தித்து விருந்து சாப்பிட்டிருக்கிறோம்.
>கனடா வெங்கட், ப்ரீமாண்ட் மணிவண்ணன்,அட்லாண்டா சந்திரா வந்தபோது.. சிங்கை பழனியைத் தான் இங்கே
>சந்திக்க முடியாமல் அங்கே போய்ப் பார்த்தேன். எங்க பேட்டை அண்ணாச்சி சாபுவை ஒரு பத்து நிமிட்
>பார்த்தேன் - அடுத்த தடவை உக்கார்ந்து விலாவாரியாப் பேசணும்..
>
>ஹரியும் வீராவும் நங்கநல்லூரார்கள். யோகியார் நீலாங்கரை. அவரை இன்று ஒரு திருமண விழாவில்
>எதிர்பார்த்து அவருடைய மற்றைய ரிசர்வ் வங்கி நண்பர்களுடன் காத்திருந்தேன்.. வரக் காணோம். இளங்கோவன்
>எங்கே இருக்கிறார்?
>
>ஆழ்வார்ப்பேட்டையில் எந்தப் புரட்டாக்கடையைச் சொல்கிறீர்கள்? அம்புஜம்மாள் தெரு முனை ஓட்டலா? அங்கே
>சைவப் புரட்டா தானே கிட்டும்? (அதை எல்லாம் புரட்டா என்று சொல்வதை விடப் புரட்டு என்று தான் சொல்ல
>வேண்டும் :-)
>
>எனக்குத் தெரியாமல் சாப்பாட்டுக் கடையா? 'ஜாரிக்கணும்'
>
>அன்புடன்,
>
>இரா.முருகன்
>
>
>anbudan,
>EraMurukan
>
> -----Original Message-----
> From: Dr.P.Chandra Bose [mailto:cbose@...]
> Sent: Sunday, January 27, 2002 11:06 AM
> To: agathiyar@yahoogroups.com
> Subject: [agathiyar] parotta & ilakkiyam
>
>
> அன்புள்ள முருகன்,
>
> உங்கள் கடிதத்தினைப் படித்துவிட்டு பசி எடுத்ததால் புரோட்டா வாங்க ஒரு சாலையோரக் கடைக்குச்
> சென்றேன். (மனைவி ஊரில் இல்லை)
>
> 1) குழுக்களில் பங்கேற்கும் நண்பர்கள் தங்கள் பெயரை எழுதும்போது தங்களின் ஊர்ப் பெயரையும் எழுதினால்
> என்ன? எழுதினால் லாவண்யாவைச் சிங்கப்பூரியாக எண்ணி இருக்கமாட்டேனே.
>
> 2) இப்படி கணிப்பொறி வழியே மட்டும்சந்தித்து நேரில் பார்க்காமல் இருக்க வேண்டுமா? அதுவும் ஓர்
> ஊர்க்காரர்கள். இன்னும் இரா முருகனும், யோகியாரும் எப்படி இருப்பார்கள் என்று கற்பனையில் தான் பார்த்துக்
> கொண்டிருக்கிறேன். ( Those unheard are always sweeter) அகத்தியத்தின் சென்னை குழு
> ஏதாவது ஒரு நாளில் கூடக் கூடாதா?
>
> முடிவெடுங்கள் பெரியவர்களே.
>
>
>
>
>[Non-text portions of this message have been removed]
>
>
>
>---------------------------------------------------------------------------
------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------
------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>
>