From arull@... Mon Jan 28 04:25:07 2002
Return-Path:
X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 28 Jan 2002 12:25:07 -0000
Received: (qmail 12592 invoked from network); 28 Jan 2002 12:25:07 -0000
Received: from unknown (216.115.97.171) by m10.grp.snv.yahoo.com with QMQP; 28 Jan 2002 12:25:07 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 28 Jan 2002 12:25:07 -0000
Received: from tm.net.my (kmr-183-223.tm.net.my [202.188.183.223]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GQN008G8EHTTQ@...> for agathiyar@yahoogroups.com; Mon, 28 Jan 2002 20:25:06 +0800 (SGT)
Date: Mon, 28 Jan 2002 20:24:19 +0800
Subject: திருமுறைத் தியானம்
To: "agathiyar@yahoogroups.com"
Message-id: <3C5542F3.480C315@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: 8BIT
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார்
X-Yahoo-Group-Post: member; u=21400202
X-Yahoo-Message-Num: 15305
திருச்சிற்றம்பலம்
திருமுறைத்தியானம்
ஸ்ரீமடம் ஆஸ்தான வித்வான் புலவர்.
பு.மா.ஜய செந்தில்நாதன்
ஜனவரி 28
சுந்தரர்
சுவேத ரிஷபேஸ்வரர் - நீலோற்பல விசாலாட்சி
குருகாவூர்(திருக்கடாவூர்)
"குருகாவூர் உறை குணமே போற்றி"
பண்ணிடைத் தமிழ் ஒப்பாய், பழத்தினில் சுவை ஒப்பாய்,
கண்ணிடை மணி ஒப்பாய், கடு இருட் சுடர் ஒப்பாய்,
மண்ணிடை அடியார்கள் மனத்து இடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
திருக்குருகாவூர்த் தலத்தில் வெள்ளடை எனப்படும்
திருக்கொயிலில் வீற்றிருக்கும் பெருமானே! நீ பண்களில்
தமிழாக விளங்குகிறாய் - பழங்களில் சுவையாகவும் -
கண்ணுள் கண்மணியாகவும் - மிக்க இருளில் ஒளிவீசும்
சுடராகவும் திகழ்கின்றாய். உன்னை உளமார வழிபடும் அடி
யார்களின் மனத்தில் துன்பம் சிறிதும் வாராதபடிக் காக்கும்
விண்ணோர் தலைவன் நீயன்றோ? வழிபடும் என் துயர்
போக்கி அருள் வளத்தை வழங்குவாய்.
திருச்சிற்றம்பலம்
ஓதுவார்
பினாங்கு.