From jaybee@... Mon Jan 28 05:54:55 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 28 Jan 2002 13:54:55 -0000
Received: (qmail 22909 invoked from network); 28 Jan 2002 13:54:54 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 28 Jan 2002 13:54:54 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 28 Jan 2002 13:54:49 -0000
Received: from user (sp-103-16.tm.net.my [210.186.103.16]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GQN0081KINAE4@...> for agathiyar@yahoogroups.com; Mon, 28 Jan 2002 21:54:49 +0800 (SGT)
Date: Mon, 28 Jan 2002 22:00:40 +0800
Subject: Launching of Naadi JOdhidam Book
X-Sender: jaybee@... (Unverified)
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020128220040.007824d8@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 15316
அன்பர்களே,
இன்று காலை குடும்பத்துடன் பால்குடத்துடன் சுங்கை பட்டாணி
சுப்பிரமணியர் தேவஸ்தானத்துக் கோயிலுக்குச் சென்றேன்.
தோளில் ஒரு ஜோல்னாப் பையைத் தொங்கவிட்டுக்கொண்டேன்.
அதில் 5 பிரதிகள் 'நாடி ஜோதிடம்' புத்தகங்களை எடுத்துவைத்துக்கொண்டேன்.
எப்போதும் காலையில் கூட்டம் நெருக்கியடித்துக் கொண்டிருக்கும்.
30000 பால்குடங்களில் பாதிக்குமேல் தைப்பூசத்தன்று காலையில் 3-00 மணியிலிருந்து
வந்துகொண்டிருக்கும். சென்ற ஆண்டு 4 மணி நேரம் காத்திருந்தேன்.
ஆனால் இன்று என்னவோ, நான் போய்ச்சேரும்போது கூட்டத்தையே
காணோம். வியப்பாக இருந்தது. முதல்நாளே பெருங்கூட்டம் வந்து பால்குடம்
எடுத்துவந்துவிட்டதாகச் சொன்னார்கள். விடிவதற்கு முன்பாகவும் கூட்டம் வந்து
சென்றிருக்கவேண்டும்.
கோயில் வாசலுக்கு அருகில் கோயில் தலைவரும் பொருளாளரும்
நின்று எதையோ பார்த்துக்கொண்டிருந்தனர்.
கோயில் தலைவர் நந்தகோபாலின் கையைப் பிடித்துக்கொண்டு
சொன்னேன்:
"ஒரு புதிய புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறேன். முருகனின் பாதங்களில்
வைத்து எடுக்கவேண்டும்" என்றேன். ஜோல்னாப் பையிலிருந்து ஒரு புத்தகத்தை
எடுத்துக்கொடுத்தேன். மிகவும் பயபக்தியுடன் வாங்கிக்கொண்டார்.
"நாடி ஜோதிடம் என்பது ரிஷிகளாலும் சித்தர்களாலும் முனிவர்களாலும்
எழுதப்பட்டது. மிகவும் மர்மமானது. அந்த சாத்திரத்தைப் பற்றிய ஆய்வுநூல் இது.
ஆகவேதான் மனிதர்களைத் தலைமையாக வைத்து இதனை வெளியீடு
செய்யவில்லை. சித்தர்களுக்கெல்லாம் தலைவன் முருகன். முருகனையே
தலைவனாக வைத்து இந்த நூலை வெளியிடுகிறேன்", என்றேன்.
நந்தகோபாலின் பயமும் பக்தியும் இன்னும் அதிகரித்ததை அவருடைய
கண்களின் விரிசலை வைத்து அனுமானிக்கமுடிந்தது. இன்னும் ஜாக்கிரதையாக
அந்த புத்தகத்தை இரண்டு கைகளாலும் ஏந்தித் தாங்கிப் பிடித்துக்கொண்டார்.
பேசக்கூட முடியவில்லை அவரால். கையை அலைத்து,
'உள்ளே செல்வோம்', என்று சைகை காட்டினார். அழைத்துச்சென்றார்.
"சுற்றி வந்து விடுவோம். அபிஷேக டிக்கெட்டையும் எடுத்துவரச்
செய்கிறேன்", என்று சொல்லி வழக்கம்போல் டிக்கெட்டை எடுத்துவர
மனைவியை அனுப்பினேன். அவரும் பேசாமல் இருந்தார். பலர் அங்கு
நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். கோயில் தலைவர் தனிப்பட ஒருவரை
மட்டும் டிக்கெட் இல்லாமல் அழைத்துச் செல்வது பேச்சுக்கு இடமாகும்
அல்லவா?
அப்படியே கைகளில் ஏந்திக்கொண்டு நந்தகோபால் வர நான்
அவருடன் சேர்ந்து சுற்றிவந்து கோயிலுக்குள் நுழைத்து சன்னிதானத்துக்குச்
சென்றோம்.
"அடுத்து கொஞ்சநேரம் பால்குடங்களை அங்கேயே இருக்கவையுங்கள்"
என்று அங்கிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு, பூசகரிடம் தாம்பாளத்தில் புத்தகத்தை
வைத்துக் கொடுத்தார். அவர் அபிஷேகத்தைச் செய்துவிட்டு, உடன் ஒரு
தீபாராதனையைக் காட்டினார். புத்தகத்தை முருகனின் பாதங்களுக்கு அருகில்
வைத்து எடுத்தார். அவ்வாறு தீபாராதனையை அவர்கள் காட்டுவதில்லை.
ஆயிரக்கணக்கில் பால்குடங்கள் அபிஷேகம் ஆன பின்னரேயே தீபாராதனை
காட்டுவார்கள்.
பின்னர் தீபத்தட்டைக் கொண்டுவந்து கொடுத்து திருநீறு தந்த பின்னர்
புத்தகத்தைக் கொடுத்தார். அதனை நந்தகோபாலிடம் கொடுத்து, "இது உங்களுக்கு;
கோயிலுக்கு; முதல் காப்பி" என்றேன். உடனே அலங்கார உற்சவரிடம்
இட்டுச்சென்று அங்கே காளாஞ்சி தயார்செய்து கையில் கொடுத்தார்.
வெளியே வந்ததும் கோயில் வாசலில் மஞ்சள் நிற பனியன், வேட்டியை
அணிந்துகொண்டு என்னுடைய மாணாக்கர்களில் ஒருவனாகிய குமரவேல்
நின்றிருந்தான். சிங்கப்பூரில் கணினித்துறையில் வேலை செய்துவரும் அவன்,
தைப்பூசத்தில் பால்குடம் எடுப்பதற்காகவே வந்திருந்தான்.
விரலை உயர்த்திக் காட்டினேன். வேகமாக அருகில் வந்து வஸ்தாது
பாணியில் குனிந்து, ஒரு கையால் தரையைத் தொட்டு 'சலாமிட்டு' நிமிர்ந்தான்.
"காசு ஒரு பத்து வெளி வைத்திருக்கிறாயா?" என்று கேட்டேன்.
"இருக்கு; ஒவ்வொரு வெள்ளியா வேணுமா; எப்படி?" என்று கேட்டான்.
மடிப்பிச்சை எடுப்போர்க்குப் போடுவதற்காகத்தான் கேட்கிறேன் என்று
எண்ணியிருப்பான் போலும்.
"புத்தகம் போட்டிருக்கிறேன். வாங்கிக்கொள்", என்று நூலை
எடுத்துக்கொடுத்தேன்.
பணத்தை அவன் கொடுத்தபின்னர் "முதல் பிரதியை விலைக்கு
வாங்கும்முதல் ஆள் நீ", என்றேன்.
மிகப் பெரிய கௌரமாகக்கருதி, அப்படியே ஒன்றும் பேசமுடியாமற்
திக்கி நின்றான்.
நான் நினைத்தால் இம்மாதிரியான நூலை ஒரு பெரிய அரங்கில் பெரிய
கூட்டத்தில் பெரிய வீ.ஐ.பி.யை வைத்துச்செய்யமுடியும். நடப்பிலேயே உரைகள்
நிகழ்த்துவதைக்கூட சாதாரணமாக பினாங்கு கோம்டார் அரங்கு, ஸ்ரீபினாங்,
ஸ்ரீமலேசியா, எஸ்பி இண் என்று நிகழ்த்துபவன் நான்.
சுவாமி சன்னிதியில் அவனை முதல் புத்தகத்தை வாங்கச்செய்ததை
அவன் நினத்து மகிழ்ந்தான்.
நந்தகோபாலிடம் சொன்ன அதே காரணத்தை அவனிடமும் சொன்னேன்.
எடுத்துச் சென்ற ஐந்து நூல்களில் இரண்டில் ஒன்று கோயிலுக்கு; இன்னொன்று
தகவல் மையத்தில் இருந்தவரிடம் கொடுத்துவிட்டேன். மூன்று நூல்கள் விற்பனை.
கோயிலுக்கு வரும்போது ஒரு கடையில் செருப்புகளைக் கழற்றிப்போட்டுவிட்டு
வந்தோம். அந்த கடைக்கார அம்மாள் காஞ்சி காமாட்சி போலத் தோற்றமளித்தார்கள்.
நல்ல சுமங்கலி. திரும்பி வரும்போது அவர்களிடம் ஒரு பிரதியைக் கொடுத்தேன்.
அவர்கள் "எவ்வளவு ஐயா?' என்று கேட்டு காசை எடுக்கப்போனார்கள்.
கொடுக்கும்போது வேண்டாம் என்று இந்த தருணத்தில் சொல்லக்கூடாது.
சாத்திர விரோதம். ஆகவே வாங்கிக்கொண்டு அந்த ராஜராஜேஸ்வரிக்கு நன்றியை
நாத்தழுதழுக்கச் சொல்லிவிட்டு வந்தேன்.
இப்படித்தான் நூல் அரங்கேற்றம் இன்று சுங்கை பட்டாணியில்
இனிது நடந்தது.