From arull@... Mon Jan 28 16:43:10 2002
Return-Path:
X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 29 Jan 2002 00:43:10 -0000
Received: (qmail 29035 invoked from network); 29 Jan 2002 00:43:09 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 29 Jan 2002 00:43:09 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 29 Jan 2002 00:43:09 -0000
Received: from tm.net.my (sja-179-60.tm.net.my [202.188.179.60]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GQO004LJCNVYU@...> for agathiyar@yahoogroups.com; Tue, 29 Jan 2002 08:43:08 +0800 (SGT)
Date: Tue, 29 Jan 2002 08:43:15 +0800
Subject: திருமுறைத் தியானம்
To: "agathiyar@yahoogroups.com"
Message-id: <3C55F023.7F7198D1@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: 8BIT
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார்
X-Yahoo-Group-Post: member; u=21400202
X-Yahoo-Message-Num: 15342
திருச்சிற்றம்பலம்
திருமுறைத்தியானம்
ஸ்ரீமடம் ஆஸ்தான வித்வான் புலவர்.
பு.மா.ஜய செந்தில்நாதன்
ஜனவரி 29
திருஞானசம்பந்தர்
சீகாழி
பிரமபுரீசுவரர் - பெரியநாயகி
"காழியுள் மேய கடலே போற்றி"
மறைகொளும் திறலினார் ஆகுதிப் புகைகள் வான் அண்ட(ம்) மிண்டிச்
சிறைகொளும் புனலணி செழும்பதி திகழ் மதில் கொச்சை தன்பால்
உறைவிடம் என் மனமது கொளும் பிரமனார் சிரமறுத்த
இறைவனது அடியிணை இறைஞ்சி வாழ் நெஞ்சமே அஞ்சல் நீயே.
வேள்வியினின்றும் எழும் ஆகுதிப்புகை விண்ணைத்
தொடுமாறு உயர்ந்த மதில் சூழ்ந்த 'கொச்சை' என்றழைக்
கப்பெறும் சீகாழித் தலத்தில் மகிழ்வுடன் வீற்றிருக்கும், பிரமன்
தன் சிரமறுத்த பெரியோனாகிய பிரமபுரீசுவரப் பெருமானின்
திருவடிகளை, நெஞ்சமே! பணிந்து போற்றி வாழ்வாயாக!
அங்ஙனம் வாழ்ந்தால் அப்பெருமான் 'அஞ்சேல்' என்று
அபயந்தந்து அருகிருந்து காத்து உன்னை ஆட்கொள்வான்.
திருச்சிற்றம்பலம்
ஓதுவார்
பினாங்கு.