From harikris@... Mon Jan 28 16:52:17 2002
Return-Path: X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 29 Jan 2002 00:52:16 -0000
Received: (qmail 30550 invoked from network); 29 Jan 2002 00:52:16 -0000
Received: from unknown (216.115.97.167) by m3.grp.snv.yahoo.com with QMQP; 29 Jan 2002 00:52:16 -0000
Received: from unknown (HELO smtp01.vsnl.net) (203.197.12.7) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 29 Jan 2002 00:52:16 -0000
Received: from harikris ([203.199.240.173]) by smtp01.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GQOD2L01.9EF for ; Tue, 29 Jan 2002 06:21:57 +0530
Message-ID: <005801c1a85f$28813380$adf0c7cb@...>
To: References: Subject: Re: [agathiyar] Re: muruganukku uriya malargaL
Date: Tue, 29 Jan 2002 06:06:43 +0530
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-eGroups-From: "Hari Krishnan" From: "Hari Krishnan" X-Yahoo-Group-Post: member; u=35460435
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 15344
வசமாகச் சிக்கினீர் நண்பரே!
முதலில் இந்த இழையை இழுத்த கனடாக் கவிஞருக்கு வணக்கம். (தனியஞ்சல் தனியே. :-))
அருணரையும் குராவையும் ஒன்றாகப் பார்த்தவுடன் பலநாட்களாக உடைக்க முடியாமல்நான் திண்டாடிக் கொண்டிருக்கும் இந்த அடி நினைவுக்கு வந்தது.
மொகுமொகு என்று வண்டு ஒலித்துக்கொண்டிருக்கும் குரா, விளா, மகிழம் (வகுள தளம்) ஆகிய பூக்களின் 'முழு நீல தீவரம்?'
ஓரடிக்கு 64 சீர்கள், ஒற்றொழித்து ஒவ்வொரு எண்சீர் மடக்கிலும் 39 எழுத்துக்கள் (மொத்தம் 256 சீர்கள்; 1248 எழுத்துக்கள்) என்று நடக்கும் சீர்பாத வகுப்பு மொத்தமும் ஒரே ஒரு வாக்கியம். சீரடியே என்று எழுவாய் கடைசிச்சீராக வரும். இந்த 'முழு நீல தீவரத்தை' அந்த எழுவாயுடன் கொண்டு கூட்டிக் கொள்ள வேண்டும். அதென்ன முழுநீல தீவரம்? ஏதாவது தட்டுப்படுகிறதா?
சீர்பாத வகுப்பைப் பற்றி ஆரம்பித்து விட்டால் நிறுத்திக்கொள்ள முடியாது. மொகுமொகென மதுபமுரல்.... மனத்துக்குள்பெரிய கரிய வண்டு பொன் மினுமினுக்கும் முதுகோடு ஒலிக்கவில்லை? அந்த ஒலியை எத்தனை அழகாகப் பிடித்திருக்கிறார் பாருஞ்கள்... மொகுமொகுமொகுமொகு....... அதுவும் வண்ண வண்ண மலர்க் குவியலில் துதைந்தலையும் கரிய வண்டு.... (கணினியிலேயே தமிழ்க்கவிதை முழுதும் கிடைக்கும்போது மனப்பாடம் செய்துகொள்வது அவசியமா என்று மரபைக் கேலிபேசுபவர்கள் மனப்பாடம் செய்துகொண்டு இருந்தும், கிடந்தும், நடந்தும் ஒவ்வொரு சீராக அனுபவிக்கும் சுகத்தை அறிவார்களா? சீர்பாத வகுப்பையோ, தேவேந்திர சங்க வகுப்பையோ, 160 சீர்களும் ஒவ்வொறு எண்சீருக்கும் மாறும் 20 வேறுவேறு சந்தங்களுமாக நடக்கும் பூதவேதாள வகுப்பையோ வெறுமனே - பொருள் கூடப் புரியவேண்டாம் - வெறுமனே சொல்லிப் பார்க்கும் சுகத்தை அறிவார்களா?)
அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.
மொழியிலும் குரங்குத்தனம்..... குயில் பாட்டில் வரும் மாடு செக்குமாட்டைப் போல சுழன்று கொண்டிருக்கும் பண்டிதர்களையும், குரங்கு, கண்ணை மூடிக்கொண்டு aping the West என்றலையும் பெரிய புதுமையாளர்களையும் குறிக்கும். இவர்களுக்கு நடுவே, தமிழைக் கரம்பற்றும் காதலனாகத் தன்னைச் சொல்கிறான் பாரதி என்று என் ஆசிரியர் 'குயில் தமிழே' என்ற கோணத்தில் சொல்லுவார்.
----- Original Message -----
From: perichandra
To: agathiyar@yahoogroups.com
Sent: Tuesday, January 29, 2002 2:45 AM
Subject: [agathiyar] Re: muruganukku uriya malargaL
--- In agathiyar@y..., "anbudan_ananth" wrote:
அன்புள்ள அனந்தன்
செந்தமிழ்ப் பூப்பெயர்களை ஒலித்தாலே உள்ளத்திற்கு இனந்தெரியாத இன்பம்.
குரா/குரவு என்ற சொல்லில் என்ன இருக்கிறதென்றே தெரியவில்லை!
அருணர் நிரைத்துள்ள பூப்பெயர்களைப் படித்தால் இன்னும் மகிழ்ச்சி.
ஆகவே செடியியல் என்பதற்கு என்ன குறைச்சல் என்றுதெரியவில்லை.
இந்தக் கடுமையைத் தம்கட்டுரையின் செம்மையில் காட்டியிருந்தால் நல்லது!
மொழிக்கு மட்டுமே முதன்மை கொடுத்து மற்ற பண்பாட்டுக் கூறுகளை ஒழித்தார்கள்.
பிறகு மொழியிலும் குரங்குத்தனம். மொழியியலிலும் குரங்குத்தனம்.
அனுமான் தான் இவர்களிடமிருந்து நம்மைக் காக்கவேண்டும்!
அன்புடன்
பெ.சந்திரசேகரன்.
[Non-text portions of this message have been removed]