From perichandra@... Mon Jan 28 17:56:02 2002
Return-Path: X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 29 Jan 2002 01:56:02 -0000
Received: (qmail 74091 invoked from network); 29 Jan 2002 01:56:02 -0000
Received: from unknown (216.115.97.172) by m11.grp.snv.yahoo.com with QMQP; 29 Jan 2002 01:56:02 -0000
Received: from unknown (HELO n9.groups.yahoo.com) (216.115.96.59) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 29 Jan 2002 01:56:01 -0000
Received: from [216.115.96.133] by n9.groups.yahoo.com with NNFMP; 29 Jan 2002 01:56:01 -0000
Date: Tue, 29 Jan 2002 01:56:00 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: muruganukku uriya malargaL
Message-ID: In-Reply-To: <005801c1a85f$28813380$adf0c7cb@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3969
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra" X-Originating-IP: 66.56.78.233
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 15346
--- In agathiyar@y..., "Hari Krishnan" wrote:
> வசமாகச் சிக்கினீர் நண்பரே!
>
ஐயா உங்களிடமெல்லாம் சிக்கினால் வேறென்பம் வேண்டும்?!
ஆனால் நீங்கள் தாம் கடன்காரனிடம் மாட்டிக்கொண்டுவிட்டீர்கள்...
சில நிலுவைகள் உள்ளன. வருகிறேன் பிறகு. :-)
...
>
> அருணரையும் குராவையும் ஒன்றாகப் பார்த்தவுடன் பலநாட்களாக உடைக்க முடியாமல் நான்
திண்டாடிக் கொண்டிருக்கும் இந்த அடி நினைவுக்கு வந்தது.
>
> சீர்பாத வகுப்பு
>
> மொகுமொகென மதுபமுரல் குரவுவிள வினதுகுறு
> முறியுமலர் வகுளதள முழுநீல தீவரமும்
>
> மொகுமொகு என்று வண்டு ஒலித்துக்கொண்டிருக்கும் குரா, விளா, மகிழம் (வகுள தளம்)
>ஆகிய பூக்களின் 'முழு நீல தீவரம்?'
மகிழம் வெண்மை நிறத்தோடு தொடர்புடையதா?
பூவோ, மற்ற பகுதிகளோ வெண்மை?
பார்த்த நினைவு இல்லை.
>
> அதென்ன முழுநீல தீவரம்? ஏதாவது தட்டுப்படுகிறதா?
காணோம். ஆனால் கொலோன் அகராதி சொல்வது திவரம்:
otl tivaram tivaram country of rural tract
சந்த
Entry
tIvara
m. a hunter (offspring of a Ra1japutri1 by a Kshatriya) BrahmaP. i ;
a fisher (for %{dhIv-}) L. ; the ocean L. ; (%{I}) f. a hunter's wife
, i.
>
...
...
>கரிய வண்டு.... (கணினியிலேயே தமிழ்க்கவிதை முழுதும் கிடைக்கும்போது மனப்பாடம்
>செய்துகொள்வது அவசியமா என்று மரபைக் கேலிபேசுபவர்கள் மனப்பாடம் செய்துகொண்டு
அவர்களும் மதுரைத்திட்டம் போன்றவற்றில் இட்டால் எல்லாம் சரியென்று நினைப்பவர்களும்
நினைக்கவேண்டியது:
சிந்துவெளிப்பொறிப்பும் இருக்குவேத வாய்வழியும்.
கல்லிலும் செப்பிலும் கிறுக்கினதெல்லாம் இன்று யாருக்கும் தெரிவதில்லை.
அந்த நாகரிகம் முடிந்த பல நூற்றாண்டுகளிலேயே அது மறந்துபோனது.
ஆனால் 3000 ஆண்டுகள் பழைய இருக்குவேதம் வெறும் வாய்வழி மட்டுமே
வந்து இன்று வரை உவிட்சல் எழுதியதுபோல் கல்வெட்டுக்கிணையான திருத்தத்துடன்
எழுத்தும் சொல்லும் அழுத்தமும் பிசகாமல் நிற்கிறது.
மனிதர்கள் மனத்தில் தொடர்வதுதான் நிற்கும்.
கல்வியின் அழியாமை பற்றிய பாடலில்
வெந்தணலால் வேகாது என்பது பொருளில் கிறுக்கிய எழுத்தில்லாமல்
மனத்தில் பொறித்த எழுத்துகள்தாம்.
மதுரைத் திட்டத்தின் முகப்பில் அந்த முழக்கம் அவ்வளவு பொருந்தாது :-).
அதற்கென்று பொருள்மேல் பொறிக்கவேண்டாமென்று சொல்லவில்லை.
எகிப்தியம் சுமேரியம் ஆகியவை ஒருவழியாக இன்று விளங்குகின்றன.
ஆனால் அவை மக்கள் மனித்தில் தொடராததால் அவை வெறும் வரலாற்று
ஆவணங்களே தவிர இடைப்பட்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகளில்
வாழ்க்கையைப் பதித்த/பாதிக்கும் சொற்களல்ல.
தேவாரத்தைச் செப்பேட்டில் சோழர்கள் பொறித்தது ஏதேனும் கிட்டியுள்ளதா?
>இருந்தும், கிடந்தும், நடந்தும் ஒவ்வொரு சீராக அனுபவிக்கும் சுகத்தை அறிவார்களா?
>சீர்பாத வகுப்பையோ, தேவேந்திர சங்க வகுப்பையோ, 160 சீர்களும் ஒவ்வொறு எண்சீருக்கும்
>மாறும் 20 வேறுவேறு சந்தங்களுமாக நடக்கும் பூதவேதாள வகுப்பையோ வெறுமனே - பொருள்
>கூடப் புரியவேண்டாம் - வெறுமனே சொல்லிப் பார்க்கும் சுகத்தை அறிவார்களா?)
அறியார்கள். தூங்கும்போதும் துக்கத்தில் உழலும்போதும் சடீரென்று அந்த மந்திரச் சொற்கள்
அமுதத்துளிபோல் சுரந்து உய்விப்பதை அறியார்கள்.
அவர்களின் மனப்பாங்கின் அடிப்படை என்னவென்றால் அவரவர்கள் தமிழைக் காக்க வந்த
அவதாரங்களாகத் தம்மை நினைத்துச் செயல்படுவதுதான்.
தமிழ் நம்மைக் காக்க இருக்கிறது. ஆகவே அதை கணினித்தட்டில் பொறிப்பதோடு
நிற்காமல் மனத்திலும் முக்கியமாகப் பொறித்துத் தங்கள் குடும்பத்திற்குப் புண்ணியம் சேர்க்க
முயலவேண்டும்.
நாடோறும் இல்லாவிட்டலும் மாதம் ஒரு குறளோ சிலம்பின் இரண்டு அடிகளோ
சங்க இலக்கியத்திலோ கம்பனிலோ மற்ற தெரிந்த தெரியாத நூல்களில் உள்ள பாடல்களின்
நல்ல ஓரிரண்டு அடிகளையாவது மனனம் செய்யலாம்.
தமிழில் எதுகை மோனை இருப்பதால் அது மிகவும் சுளுவான வேலைதான்.
>
> அன்புடன்,
> ஹரி கிருஷ்ணன்.
.
ஆமாம். முன்பு நித்தியசிரீ பற்றி நீங்கள் எழுதியபோது உங்களிடம் இலயம் சந்தம் பற்றி
எழுதச் சொல்லிக் கேட்டிருந்தேன்....தயவுசெய்து எழுதவும்.
அடுத்துப் பெரிய புதிர்:
அருணர் ஏன் ஒவ்வொரு வகை நூலுக்கும் வெவ்வேறு யாப்புகளைப் புழங்குகிறார்?
அனுபூதிக்குக் கலிவிருத்தம், அலங்காரத்திற்குக் கட்டளைக் கலித்துறை ...என்று
அதன் காரணம் என்ன?