From perichandra@... Mon Jan 28 18:39:19 2002
Return-Path: X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 29 Jan 2002 02:39:19 -0000
Received: (qmail 48153 invoked from network); 29 Jan 2002 02:39:18 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 29 Jan 2002 02:39:18 -0000
Received: from unknown (HELO n15.groups.yahoo.com) (216.115.96.65) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 29 Jan 2002 02:39:18 -0000
Received: from [216.115.96.165] by n15.groups.yahoo.com with NNFMP; 29 Jan 2002 02:38:41 -0000
Date: Tue, 29 Jan 2002 02:39:13 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Earliest mention of Shiva
Message-ID: In-Reply-To: <005a01c1a85f$2f375740$adf0c7cb@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1602
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra" X-Originating-IP: 66.56.78.233
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 15347
--- In agathiyar@y..., "Hari Krishnan" wrote:
> கண்ணி கார்நறுங் கொன்றை காமர்
> வண்ண மார்பிற் றாரும் கொன்றை
> ஊர்தி வால்வெள் ளேறே.....
>
> என்று புறத்தின் முதல் பாட்டே சிவனுக்குத்தானே!
அன்புள்ள அரி
அந்தக் கடவுள் வாழ்த்துப் பாடல் பாடல்களைப் பின்னாளில் தொகுத்தோர் சேர்த்ததென்று
பொதுவான கருத்துண்டு.
ஆனால் கலித்தொகை அதன் நெய்தற்கலி ஆசிரியர் நவ்வந்துவனார்/நல்லந்துவனார்
தொகுப்பென்று சொல்லுவர். அப்படிப்பார்த்தால் அதன் கடவுள் வாழ்த்தும் சிவனைப்பாடுவது.
ஆனால் தேவனார்போல் அல்லாமல் கொஞ்சம் சுவையாகச் செய்திகள் உள்ளதாக உள்ளது.
மூவகைக்கூத்துகளைக் கூறுகிறது: கொடுகொட்டி, பாண்டரங்கம், காபாலம்.
கலித்தொகைபுராணங்களைப்பற்றிச் சொல்வதென்பதால் அது பின்னதென்பது
பழைய காலத்து அணுகுமுறை. அது இந்நாளில் பொருளற்றது.
அப்போதே கூடப் பொருளற்றதுதான்.
புறநானூற்றின் பழைய பாடல்களிலேயே பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் பற்றிப்
பாரதப்போரோடு தொடர்பு காண்கிறோம். ஆனால் கலைத்தொகையில் பயிலும்
பாரதச் செய்திகள் மட்டும் அதனைப் பின்னதாக்குவதென்பது முரண்.
திருதராட்டிரம் பற்றிய மொழிநோக்கில் மட்டும் அது சொல்லும் குறிப்புச் சுவையானது.
வடமொழியில் இல்லாத பல புராணச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உண்டு.
மதுரைக் காஞ்சியில் வாணன் என்பவன் தென்மலைகளில் விழுநிதி அடுக்கினான்
என்றுள்ளது. "தென்றிசை மருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழுநிதி"
[விண்டு = மலை]
மேலும் சிவன் முதல் இந்திராணி ஈறாக ஆடிய பதினொரு கூத்துகள் வடமொழிப்
புராணங்களில் இருப்பதாகத் தெரியவில்லை.
எனவே புராணம் என்றால் தமிழர்களுடையதல்லாததென்று சொல்லிவிடமுடியாது.