From jaybee@... Tue Jan 29 07:33:37 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 29 Jan 2002 15:33:37 -0000
Received: (qmail 64541 invoked from network); 29 Jan 2002 15:33:37 -0000
Received: from unknown (216.115.97.167) by m3.grp.snv.yahoo.com with QMQP; 29 Jan 2002 15:33:37 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 29 Jan 2002 15:33:37 -0000
Received: from user (sp-103-131.tm.net.my [210.186.103.131]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GQP0033ZHVRL9@...> for agathiyar@yahoogroups.com; Tue, 29 Jan 2002 23:33:28 +0800 (SGT)
Date: Tue, 29 Jan 2002 23:39:26 +0800
Subject: Karunggaali and Blackleg - RE: Paip and pumpu-Re: [agathiyar] Re: Kacchi and Kalinggam
In-reply-to: <9DB6357440BAD411A6A00050BA8CA56B0A98496F@... ys.com>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020129233926.007699a4@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 15376
At 01:40 PM 1/29/02 +0530, you wrote:
>
>>>>கருங்காலிப்பயல்கள் ஏடாகூடமாகப் பற்றவைப்பான்கள்.
>
>>>>fயபாரதி
>
>
>கருங்காலிப் பைன்கள் --களுக்கு etymology சொல்லுங்களேன்....?
:-)
இந்தச்சொல் ஆங்கில மூலத்தையுடையது. சூதாட்டத்தில் பயன்
படுத்தப்பட்டது.
சூதாட்டத்தில் நம்பவைத்து ஏமாற்றி தோற்கச்செய்பவர்கள்
இருப்பார்கள். அவர்கள் அந்த சூது விளையாட்டில் சேர்ந்து
விளையாடுபவர்களாகவும் இருக்கலாம்; ஆனால் கயமையுடன்
விளையாடுகிறவர்களாகவும் இருக்கலாம். அல்லது நம் பக்கத்தில்
இருந்துகொண்டு எதிராளிக்குச் சைகை கொடுப்பனாகவும் இருக்கலாம்.
இந்தச்செயலை Black-legging என்று சொல்வார்கள்.
இவ்வாறு செய்பவர்களை Black-legs என்றும் அழைத்தார்கள்.
பிற்காலத்தில், தொழிற்சாலைகளில்வேலைநிறுத்தம் நடைபெறும்போது,
அந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கொடுப்பதுபோல் இருந்துவிட்டு,
முதலாளிகளுடன் சந்து செய்துகொண்டு, வேலைக்குச்சென்று,
வேலைநிறுத்தத்தைக் கீழறுப்புச்செய்பவர்களை Black-legs என்று
அழைத்தார்கள்.
இதனை பொதுவுடமைக்காரர்களோ அறிஞர் அண்ணாவோ
'கருங்காலி'கள் என்று தமிழாக்கம் செய்து பயன்படுத்தினர்.
இதுதான் அச்சொல்லின் கதை.