From poo@... Fri Feb 01 21:37:40 2002
Return-Path:
X-Sender: poo@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 2 Feb 2002 05:37:40 -0000
Received: (qmail 3274 invoked from network); 2 Feb 2002 05:37:40 -0000
Received: from unknown (216.115.97.172) by m8.grp.snv.yahoo.com with QMQP; 2 Feb 2002 05:37:40 -0000
Received: from unknown (HELO backupsrv.nesma.net.sa) (212.71.32.151) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 2 Feb 2002 05:37:39 -0000
Received: from mail.nesma.net.sa ([192.168.1.18]) by backupsrv.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.197.19); Sat, 2 Feb 2002 03:46:51 +0000
Received: from s0024156401.giasmd01.vsnl.net.in ([212.71.59.196]) by mail.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.537.53); Sat, 2 Feb 2002 03:50:07 +0300
Message-Id: <4.3.0.20020201095131.02b35990@...>
X-Sender: poo/202.54.6.1@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Sat, 02 Feb 2002 04:10:31 +0300
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] cirai
In-Reply-To: <00d601c1a9ad$8fe88060$7682d6d2@...>
References:
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
Return-Path: poo@...
From: Krishnan Ramasamy
X-Yahoo-Group-Post: member; u=23389931
X-Yahoo-Profile: iramaki
X-Yahoo-Message-Num: 15522

At 10:13 PM 01/30/2002 +0530, you wrote:
>அன்புள்ள கணேசன் அவர்களுக்கு,
>
>கவிதை என்னுடையதுதானே! தேடித்தர வேண்டாம். நானே தருகிறேன்.
>
>தரைக்குள்ளே தலைபுதைக்கும் தனிநெருப்புக் கோழிக்கும்
>சிரைவிரித்து மயில்போலத் திரியும்வான் கோழிக்கும்
>
>(தரையறியும் மீன் கூட்டம்)
>
>மேற்கண்ட அடிகளைத்தானே சொல்கிறீர்கள்? இதோ என் விளக்கம்.
>
>சிறை என்பதே சரியானது. அகராதியைப் பார்த்தால் (கழகத் தமிழ் அகராதி)அடிமை, அழகுள்ளவள்,
>இiடம், iஇலகு, கட்டுப்பாடு, காவல், சிறைச்சாலைஇ தடைஇ நீர்க்கரை, பக்கம், மதில், வரம்பு, அணை,
>நீர்நிலை என்பன தரப்பட்டிருக்கின்றன. சிறகு என்ற பொருள் இல்லை.
>
>என் அகராதி, என் பைபிள், என் வழிகாட்டி எல்லாம் மூவர். முதல்வன் பாரதி. அடுத்தவன்
>கம்பன். அடுத்தவன் வள்ளுவன். (அருணகிரி எல்லாம் இவர்களுக்குப் பிறகுதான்.) ஆரணிய காண்டம், சடாயு
>காண் படலத்திலிருந்து இந்தப் பாடலைத் தருகிறேன்.
>
>உருக்கிய சுவனம் ஒத்து உதயத்து உச்சி சேர்
>அருக்கன் iவ்அகல் iடத்து அலங்கு திக்கு எல்லாம்
>தெரிப்புறு செறிசுடர்ச் சிகையினால்**சிறை**
>விரித்து iருந்தனன் என விளங்குவான் தனை.....
>
>சடாயு சிறகு விரித்து இருந்த நிலையைச் சொல்கிறான்.
>
>சிரை என்று எழுதியது அறியாமையால் அன்று. ஒரு கவிஞனுக்கு ஒரு சொல்லை மாற்றவோ, சிதைக்கவோ,
>இரண்டு சொற்களை ஒன்று சேர்த்துப் புதுச் சொல்லைப் படைக்கவோ, புதுப் பொருளைக் கொடுக்கவோ உரிமை
>உண்டு. நாராயணனை நராயணன் என்று சொல்ல முடியும் என்றால், ஓட்டம் தந்தாள் என்ற இரண்டு சொற்களை
>ஓட்டந்தாள் என்று சிதைத்துப் புதுக்க முடியும் என்றால், நெய்த்து என்பதை நெச்சு என்று சொல்ல முடியும்
>என்றால், பாதகி என்பதைப் பதகி என்றுசொல்ல முடியும் என்றால் (பாரதி மற்றும்கம்பன் இருவரும்
>செய்திருக்கிறார்கள்) மேலே இருக்கும் பாட்டில் சுவர்ணம் என்பதைச் சுவனம் என்று ணகர னகர மாற்றம் செய்ய
>முடியும் என்றால் சிரை என்று எதுகை நோக்கி எழுதியதும் சரிதான். அதாவது நான் கவிஞன் என்பது ஏற்றுக்
>கொள்ளப்படுமானால். :-)

அன்பிற்குரிய அரி,

"சிரை" என்ற சொல் பற்றிய மடலாடல் கண்டேன்.

சிறை என்ற சொல்லாட்சிக்குக் கம்பனைமீறிய யாத்துரியை (யாத்து+ உரி= யாத்துரி = authority=
அதிகாரம், அதிகாரி; யாத்தோர் = author; யாத்தவர்தானே சட்டம் போட்டவர்; அதனால் அதிகாரம்
உடையவர்) நாம் தேட இயலுமோ? தவிரவும் கழகத் தமிழ் அகராதி அவ்வளவு விரிந்து அகன்ற அகரமுதலி
அல்ல. பெரும்பாலான தமிழ் அகரமுதலிகள் குறைபாடுள்ளவையே. ஆங்கில ஆக்சுபோர்டு அகரமுதலி போலத்
தெளிவானது இன்னும் தமிழில் வெளிவரவில்லை. என்னிடத்தில் உள்ள தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்
வெளியிட்ட சண்முகம்பிள்ளை தமிழ்-தமிழ் அகரமுதலியில் (இதுவும் குறைபட்டதுதான்),

சிறை - காவல், காவலில் அடைக்கை, சிறைச்சாலை, அடிமைத்தனம், அடிமையாள், பெண்டாகச்
சிறைப்பிடிக்கப்பட்ட இளம்பெண், அழகுள்ளவள், அணை, நீர்நிலை, இடம், பக்கம், கரை, மதில், வரம்பு,
இறகு, யாழ் நரம்புக் குற்ற வகைகளில் ஒன்று

சிறகு - இறகு, மீன்சிறகு, படை முதலியவற்றின் உறுப்பு, தெருவின் பக்கம், தெரு, கிளை வாய்க்கால்,
பனையோலையில் பாதி, கதவு முதலியவற்றின் இலை

இறகு - சிறகு, பறவையிறகு, மயிற்பீலி

என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இதன்படி, சிறை என்பது மயிற்பீலியைக் குறிக்கும் தான்.

இருப்பினும் சிறகு, சிறை என்ற சொற்கள் எப்படிப் பிறந்திருக்க முடியும் என்று இங்கே பார்ப்போம்.

மேலே கூறிய சொற்களில், காவல், காவலில் அடைக்கை, சிறைச்சாலை, அடிமைத்தனம், அடிமையாள்,
பெண்டாகச் சிறைப்பிடிக்கப்பட்ட இளம்பெண், அணை, நீர்நிலை, இடம், பக்கம், கரை, மதில்,
வரம்பு,தெருவின் பக்கம், தெரு, கிளை வாய்க்கால், பனையோலையில் பாதி போன்றவை ஒரு தொகுதி

பறவையிறகு, மயிற்பீலி, மீன்சிறகு, படை முதலியவற்றின் உறுப்பு என்பவை இன்னொரு தொகுதி.

"அழகுள்ளவள், யாழ் நரம்புக் குற்ற வகைகளில் ஒன்று" என்ற இரண்டும் தனித்து நிற்கின்றன இந்த மடலில்
அவற்றைப் பற்றி நான் பேசவில்லை.

முதல் தொகுதியின் உள் இழை அடைத்தலே. அதாவது செறுத்தல்.

செறி(த்)தல், செறு(த்)தல் எல்லாமே தொடர்புடைய சொற்கள் தாம்.

செறு + ஐ = செறை>சிறை. (நான் பல முறை சொல்லுவது போல் கல்லாதார் நடுவில் தான் சொற்களின்
வேர்கள் இருக்கின்றன. பொத்தகம்>புத்தகம் போலச் செறை, சிறையாயிருக்கிறது. " அவனைப் போட்டுச்
செறையிலே அடை" என்று நாட்டுப் புறத்தார் வழங்குவார். ஆற்று நீரைச் செறுக்குவதால் அணை செறையாயிற்று.
கரை, மதில் பக்கம் எல்லாமே இப்படித்தான். பகுக்கப் பட்ட பின் பாத்தியின் கரைகள் பக்கம் எனப் பட்டன.
ஆறு கிடந்தன்ன அகல்நெடுந் தெருக்கள் என்பது தெரிந்த உருவகம் தானே? அதனால் அதுவும் சிறைதான். (பக்கத்
தெருவைச் சிறை என்று நெல்லை மாவட்டத்திலும் யாழ்ப்பாணத்திலும் பயிலுவர். இந்தச் சொல்லாட்சி.
குமரியிலும் இருக்கும் என்றே எண்ணுகிறேன் தெரிந்தவர் உறுதி செய்யலாம்.) கிளை வாய்க்கால் அதே
பொருள்வழி கொள்ள இயலும். பனையோலை பிரித்துப் பார்த்தால் ஈர்க்குதான் ஆற்றைப் போன்றது. இரு
ஒலைத்தாள்களும் அதன் சிறகுகள்.

இரண்டாவது தொகுதிதான் நமக்கு இப்பொழுது ஆய வேண்டிய ஒன்று.

"கான மயிலாட கண்டிருந்த வான்கோழித் தானும் அதுவாகப் பாவித்துத் தன் பொல்லாச் சிறகை விரித்து"
என்ற தனிப்பாடல் நமக்கெல்லாம் தெரிந்ததுதான். எந்த ஒரு பறவையும் தன் சிறகை விரித்துத்தான் பறக்க
முடியும். ஆடமுடியும்; மயக்க முடியும்.

விரிக்காத நிலை என்பது சுருக்கிய நிலை.

பறவையின் சிறகு பறவாத நிலையில் மடிப்பு விழுந்து சுருங்கியிருக்கும். அது சிறகைப் பரவும் போது
(விரிக்கும் போது) தானே பறக்க முடிகிறது?

பர>பற>பறவை (இங்கே எழுத்து மாற்றத்தால் பொருள் விரிவும் கிடைக்கிறது. மொழி இப்படித்தான்
வளர்கிறது.பரத்தலும் பறத்தலும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளனவானாலும், அவை ஒன்றில் இருந்து இன்னொன்றாகக்
கிளைத்தவை. மொழி வளர்ச்சியைச் சட்டம் போட்டுத் தடுத்து நிறுத்த இயலாது. எதனால் என்று சொல்ல
முடியாத மாற்றம் படைப்பாளியால் ஏற்படலாம். மரை என்ற சொல்லாட்சி அப்படித்தானே ஏற்பட்டது? எல்லாம்
சிறு அள்வில் ஏற்பட்டால், நாளடைவில் ஏற்றுக் கொண்டால் சரிதான். மொழிக் கலப்பும் மொழி
வளர்ச்சியும் அதே பொழுது ஒன்றல்ல.)

சுல்>சுள் என்ற வேர்ச் சொல் வளைவுப் பொருளைக் குறிக்கும் வேர்ச்சொல். இதிலிருந்து கிளைத்த சொற்கள்
ஏராளம்.

சுள்>சுர்>சுரி>சுரிதல் = மடிதல், மடிப்பு விழுதல்
சுரித்தல் = திரைதல், சுருங்குதல்
சுரித்த மூஞ்சி = மூப்பினால் திரைந்த முகம்
சுரிதகம் = கலிப்பாவில் பிறவுறுப்புக்களில் கூறப்பட்ட பொருளைச் சுருக்கி அல்லது தன்னுள் அடக்கிக் கூறும்
முடிவுறுப்பு. சுரிதம், தரவு, தாழிசை முதலியவற்றில் கூறப்படும் பொருளை அடக்கிக் கூறுவதனாலேயே
அடக்கியல் எனப்பட்டது என்று அறிக

சுள்>சுர்>சுரு>சுருங்கு>சுருக்கு>சுருக்கம்

சுருகு தான் சிறகுக்கான வளர்ச்சி பெருகிறது

சுரு>சுருகு>(சிருகு)>சிறுகு>சிறகு

சிறகு என்பது மடிப்பு விழுந்து சுருங்கி பறவையின் பக்கலில் இருக்கும்.ஒரு உறுப்பு. சிறை என்பது இன்னொரு
ஈறு கொண்ட சொல். வேர்ப்பொருள் விரிந்த வகையில் சிரை என்ற புதிய புடைப்புக் கொடுப்பது தவறில்லை
என்றே நினைக்கிறேன்.

கழகம் என்ற பொருளைக் கம்பன் மாற்றவில்லையா?

அன்புடன்,
இராம.கி.