From cbose@... Sat Feb 02 07:57:57 2002
Return-Path:
X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 2 Feb 2002 15:57:57 -0000
Received: (qmail 61833 invoked from network); 2 Feb 2002 15:57:56 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 2 Feb 2002 15:57:56 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 2 Feb 2002 15:57:55 -0000
Received: from vsnl (unknown [203.199.230.240]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id 4F7DBE6B3 for ; Sat, 2 Feb 2002 21:32:40 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20020202190123.007a8dd0@...>
X-Sender: cbose@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sat, 02 Feb 2002 19:01:23 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: to upgrade Murasu Anjal
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose"
X-Yahoo-Group-Post: member; u=24653376
X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 15537

அன்புள்ள லாவண்யா,

முரசு அஞ்சல் தொகுப்பின் புதிய பதிப்பிற்கு எப்படி மாறிக் கொள்வது என்று கேட்டீர்கள் அல்லவா? இது
தாமதத்துடனான பதில்.

இதற்கான விளக்கங்களும் இறக்கிக் கொள்ள வேண்டிய கோப்பும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத் தளத்தில்
தரப்பட்டுள்ளன. அதன் முகவரி :
http://www.murasu.com/se. இதில் பெறப்படும் கோப்பு கீழ்க்காணும் முகவரியிலும் பெறலாம்.
http://groups.yahoo.com/group/anjal/files ஆனால் நீங்கள் அஞ்சல் மடலாடல் குழுவில்
உறுப்பினராகி இருக்க வேண்டும். அதற்காகத் தயங்க வேண்டாம். அது மிக எளிது. சாலையோரம் சென்று
வருவது மாதிரி அப்போதே உறுப்பினர்ஆகிவிடலாம்.
நீங்கள் இறக்கிக் கொள்ள வேண்டிய கோப்பின் பெயர் a2kse_upg.exe.

இந்த தளத்திலேயே ' ஏன் டிஸ்கி 1.7 பதிப்பிற்கு மாறிக் கொள்ள வேண்டும் ' என்றஒரு கோப்பு பிடிஎப்
வடிவில் ஆங்கிலத்திலும் தமிழிலும் தரப்பட்டுள்ளது. அதனையும் இறக்கி அக்ரோபட் ரீடர் என்னும் தொகுப்பின்
மூலம் படித்துத் தெரிந்து கொள்ளவும். உங்கள் கணிப்பொறியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் படம் காட்டி
விளக்கப்பட்டுள்ளது.

இதனை இறக்க சிறிது நேரமே பிடிக்கும் என்றாலும் காலையில் இணையச் சாலையில் போக்குவரத்து குறைவாக
இருக்கும்போது விரைவாக இறக்கிக் கொள்ளலாம்.

இதனை இறக்கிய பின்னர் ஏற்கனவே உள்ள அஞ்சல் தொகுப்பை வலுக் கட்டாயமாக மூடிவிடுங்கள். இல்லையென்றால்
இரண்டு பொண்டாட்டிக் காரன் கதை ஆகி எல்லாம் கந்தல் ஆகிவிடும். மற்ற பயன்பாட்டு மென்தொகுப்புகளையும்
மூடிவிடுங்கள். இப்போது a2kse.exe தொகுப்பை இயக்குங்கள். அழகான தமிழில் விளக்கங்களுடன் திரை
ஓடும். கேட்பதற்கேற்றபடி அடுத்து அடுத்து என்ற பொத்தானை அழுத்த உங்கள் கணிப்பொறியில் முரசு அஞ்சல்
புதிய இரண்டாம் பதிப்பிற்கு மாறிவிடும். இப்போது உங்கள் மின்னஞ்சல்களை நீங்கள் பயன்படுத்தும்
தொகுப்பைத் திறந்து அதில் எழுத்துவகைஅமைப்பில் ( Font settings) அதில் TSCu_Inaimathi,
TSC_Arulmathi ஆகிய எழுத்துக்களை அமைத்துவிடுங்கள். இந்த மாற்றத்தை முரசு அஞ்சல் Setup
திரையிலும் மேற்கொள்ளுங்கள். இதன்பின் அஞ்சலில் ஆவணங்களை அமைத்திட தொட்டச்சு செய்யும்போது TSCu
எனத் தொடங்கும் எழுத்துவகையிலேயே செயல்படவும்.

இந்த பதிப்பில் மைக்ரோசாப்ட் தொகுப்புகளில் பழைய 'இ' தகராறு வராது. நீங்கள் ஏதேனும் மாற்றல்
வசதிகளைத் தரும் கோப்புகள் வைத்திருந்தால் அவையும் சிறப்பாக இயங்கும்.

நீங்கள் விண்டோஸ் 2000 அல்லது விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்களாக இருந்தால் இதில் உள்ள அஞ்சல்
இண்டிக் விசைப்பலகையைப் பயன்படுத்தி இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் யூனிகோட் தமிழ்
ஆகியவற்றிலும் தொட்டச்சு ( தட்டாமல் பூப்போல தொட்டுச் செய்வதால் தொட்டச்சு ) செய்யலாம்.

புதிய பதிப்பை இயக்கிப் பார்த்து நன்றாக இருந்தால் இதன் படைப்பாளர் நண்பர் திரு முத்து அவர்களுக்கு
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். அல்லது என்னும்
முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் விபரங்கள் தேவைப்பட்டால் வரும் 06-02-02 புதன் கிழமை பெங்களூர் பதிப்பு காலைக்கதிர்
தினசரியில் ' கம்ப்யூட்டர் கதிர் ' என்னும் பகுதியில் வர இருக்கும் சிறிய கட்டுரையைப் படித்துத்
தெரிந்து கொள்ளவும். அல்லது தினமலர் நாளிதழ் கோவை மட்டும் மதுரை பதிப்பின் 01-02-2002
வெள்ளிக்கிழமை பதிப்பில் கம்ப்யூட்டர் மலர் என்னும் பகுதியில் படித்துத் தெரிந்து கொள்ளவும்.

வணக்கம்.

மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை.










* New "Anjal-Indic" keyboard that supports Hindi, Telugu, Malayalam and
Tamil in Unicode (Windows2000 and WindowsXp only)
* Unicode version of all Murasu Fonts
* Better support for WindowsXp and WindowsMe
* More character sets in converter
* More user guides and documentation
* Fixes to problems with certain software support (such as Excel)


Anjal2000-Pro users will enjoy the Pro features of Anjal2000-SE
automatically - no new license keys are required.

If you experience problems with downloading from the Murasu.Com site (we do
expect a heavy traffic), you may download from
http://groups.yahoo.com/group/anjal/files as well. The name of the file to
download is a2kse_upg.exe

We take this opportunity to thank all the members of the a2k_se group.
Special thanks to Murthy Raju, Sivaguru, Sameem, Sethu and Dr. P. Chandra
Bose for their valuable feedback in making this another stable release from
Murasu.Com. We also thank Dr. K. Kalyanasundaram for testing this on a
WinPC/MacOS platform.

We hope you find the new features useful and look forward to hearing your
comments - send them to grm@...