From arull@... Sun Feb 03 18:33:58 2002
Return-Path:
X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 4 Feb 2002 02:33:58 -0000
Received: (qmail 99140 invoked from network); 4 Feb 2002 02:33:57 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 4 Feb 2002 02:33:57 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 4 Feb 2002 02:33:57 -0000
Received: from tm.net.my (kmr-211-207.tm.net.my [203.106.211.207]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GQZ0071RLSJDM@...> for agathiyar@yahoogroups.com; Mon, 04 Feb 2002 10:33:56 +0800 (SGT)
Date: Mon, 04 Feb 2002 10:33:41 +0800
Subject: திருமுறத் தியானம்
To: "agathiyar@yahoogroups.com"
Message-id: <3C5DF305.95F1EE28@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: 8BIT
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார்
X-Yahoo-Group-Post: member; u=21400202
X-Yahoo-Message-Num: 15585

திருச்சிற்றம்பலம்

திருமுறைத்தியானம்

ஸ்ரீமடம் ஆஸ்தான வித்வான் புலவர்.
பு.மா.ஜய செந்தில்நாதன்

பிப்ரவரி 3

திருஞானசம்பந்தர்

கண்ணார் கோயில்
(குறுமாணக்குடி)

கண்ணாயிரமுடையார் - சுகந்த குந்தளாம்பிகை

"கண்ணார் கோயில் வாழ் கனியே போற்றி"

விண்ணவருக்காய் வேலையுள் நஞ்சம் விருப்பாக
உண்ணவனைத் தேவர்க்கு அமுது ஈந்து எவ்வுலகிற்கும்
கண்ணவனைக் கண்ணார் திகழ் கோயிற் கனி தன்னை
நண்ண வல்லோர்கட்கு இல்லை நமன்பால் நடலையே.

தேவர்களைக் காத்தற்பொருட்டுப் பாற்கடலில்
தோன்றிய ஆலகால விஷத்தினைத் தான் விருப்பத்துடன்
உண்டு, அமுதினைத் தேவர்க்கருளி அவர்களைக் காத்தவரை,

எல்லாவுலகங்களுக்கும் கண்போன்றவரை,
திருக்கண்ணார் கோயில் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள
வரை, கண்ணாயிரமுடையாரைக் கண்டு தொழுது பரவ
வல்லவர்களுக்கு எமனிடத்துச் செல்லுதல் இல்லையாம்.

கண்ணார் கோயில் கற்பகக் கனியைக்
கசிந்துருகித் தொழுதிடுவோம்

மண்மேல் விண்ணவர் போல்
மேலோங்கி வாழ்ந்திடுவோம்.

திருச்சிற்றம்பலம்

ஓதுவார்
பினாங்கு