From perichandra@... Mon Feb 04 15:05:46 2002
Return-Path:
X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 4 Feb 2002 23:05:46 -0000
Received: (qmail 55655 invoked from network); 4 Feb 2002 23:05:46 -0000
Received: from unknown (216.115.97.172) by m4.grp.snv.yahoo.com with QMQP; 4 Feb 2002 23:05:46 -0000
Received: from unknown (HELO n8.groups.yahoo.com) (216.115.96.58) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 4 Feb 2002 23:05:46 -0000
Received: from [216.115.96.166] by n8.groups.yahoo.com with NNFMP; 04 Feb 2002 23:05:46 -0000
Date: Mon, 04 Feb 2002 23:05:42 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: "telepathy" (Re: [agathiyar]Ramanar)
Message-ID:
In-Reply-To: <20020204195431.98183.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3997
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra"
X-Originating-IP: 66.56.78.233
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 15605

--- In agathiyar@y..., Los Angeles Ram wrote:
> iரண்டு நாட்களாக மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது, என்னடா அந்த ரமணர்
> தொடர் பாதியிலே நிற்கிறதே, மதுரபாரதிக்கு எழுதிக் கேட்க
> வேண்டுமென்று. மனத்தளவில் நான் வடித்த கோரிக்கைக் கடிதம் உங்களுக்கு ESP

telepathy = தொலையுணர்த்தி, தொலையுணர்வு

அன்புடன்
பெ.சந்திரசேகரன்


> மூலம் வந்து சேர்ந்திருக்க வேண்டும். மீண்டும் தொடர்ந்து விட்டதில் மிக்க
> மகிழ்ச்சி.
>
> தொடருங்கள்.
>
> அன்புடன்,
>
> லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
>
> --- Madhurabarathi wrote:
> >
> >
> > "சத்துவத்தின் தூய்மையிலிருந்து மனதில் ஆனந்தமும், புலன்களின்மீது
> > வெற்றியும், ஆன்மஞானத்துக்கான தகுதியும் பிறக்கின்றன."
> > ---பதஞ்சலி யோக சூத்திரம் (II-41)
> >
> > "மௌனவிரதம் என்பது ஒரு விரதமே. அது தியானத்திற்கு ஓரளவு உதவும்.
> > ஆனால் வாயை மட்டும் மூடிக்கொண்டு மனம் அலைபாய்வதில் என்ன பயன்?"
> > ---பகவான் ரமணர்.
> >
> > ரமண மகரிஷி - 6
> > -------------------
> >
> >
> > பார்வளர் கயிலைப் பருப்பத நீங்கி
> > பண்ணவர் சூழலை விட்டு
> > வாரொளி மணிபோல் வாசகர் வாக்கை
> > வளர்செவி மடுத்திட விரும்பி
> > ஏர்வளர் பெருந்தண் துறை அடைந்தாற்போல்
> > இழிசினேன் புன்சொலும் வேட்டுச்
> > சீர்வளர் அருணைச் செழும்பதி சேர்ந்தாய்
> > தேசிக ரமணமா தேவே"
> >
> > ---முருகனார் எழுதிய தேசிகப் பதிகம்.
> >
> > தேசிகன் என்ற சொல் திசை என்பதிலிருந்து பிறந்தது. திசை (வழி)
> > காட்டுகிறவன் தேசிகன். அப்படி நம் போன்ற சாதாரணருக்கு வழிகாட்டும்
> > பொருட்டாக வந்த ரமணர் பாதாளலிங்கச் சன்னதியிலே புழுவும் கறையானும்
> > அரித்தது போதாதென்று, சிறுவர் எறிந்த சில்லிகளின் காயம் பட்டும்கூடத்
> > தன்வயமற்றவராய் நிஷ்டையில் iருந்தார். பொல்லாச் சிறுவரை
> > விரட்டிவிட்டு வேதாசல முதலியார் iன்னும் சிலரை உதவிக்கு
> > அழைத்துக்கொண்டு யுவமுனியைக் குண்டுக்கட்டாகத் தூக்கிக்கொண்டு வந்தார்.
> >
> > சில மாதங்கள் அதற்குப்பின் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் iருந்தார்
> > ரமணர். அதே கோவிலில் iருந்த மௌனி சுவாமிகள் என்பவன் ரமணரைக்
> > கவனித்துக்கொள்ளத் தொடங்கினார். பால், மஞ்சள், தேன், வாழைப்பழம்
> > போன்றவை கலந்து உமாதேவிக்கு அபிடேகம் செய்யப்பட்ட நீரை
> > எடுத்துக்கொண்டு வந்து ரமணருக்குப் புகட்டுவார் மௌனி. சுவையையோ
> > மணத்தையோ பாராட்டாது குடித்துவைப்பார் ரமணர். iதைக் கவனித்த
> > கோவில் குருக்கள் ரமணருக்குத் தரும்பொருட்டு நல்ல பாலை மௌனியாருக்குத்
> > தினமும் கொடுக்குமாறு மடைப்பள்ளியில் உத்தரவிட்டார்.
> >
> > ரமணரின் இந்த யோக நிலையைத் தவம் என்று சாதாரணமாகக் குறிப்பதுண்டு.
> > ஆனால் இது தன்னை (பிரம்மத்தை) அறிவதற்காக மற்ற தவசிகள் செய்ததைப்
> > போன்றதல்ல. தன்னையறிந்துகொண்டுவிட்டதனால் ஏற்பட்டுவிட்ட தனிமை
> > நிலை. பின்னாளில் அவர் ஒருமுறை சொன்னார்:"நான் சாப்பிடாவிட்டால்
> > உபவாசம் என்று சொன்னார்கள். நான் பேசாவிட்டால் மௌனவிரதம் என்று
> > சொன்னார்கள்." பெற்றுவிட்ட ஞானத்தின் காரணமாக உடல்மேல் கொண்ட
> > பற்றுவிட்டதனாலே அவ்வாறிருந்தார் ரமணர். மதுரையில் பதினேழு வயதில்
> > ஏற்பட்ட 'மரண' அனுபவத்திற்குப் பிறகு தனக்கு வேறு சாதனை
> > (தன்னையுணர்தலுக்கான முயற்சி) தேவைப்பட்டதில்லை என்று ரமணர்
> > கூறியிருக்கிறார்.
> >
> > ஞானியாகிவிட்ட ரமணர் யோக சாதகர்களை, iறை நாட்டம்
> > கொண்டவர்களை ஒரு காந்தம்போலக் கவர்ந்தார். அவ்வப்போது அந்த
> > ஞானக்கடலின் அருள்தேனைச் சில சம்பவங்கள் மூலம் பார்ப்போம் பின்னால்.
> > போதனைகளையும் படிப்போம். சிந்திப்போம். பகிர்வோம். மகிழ்வோம்.
> > கடைப்பிடிக்க முயல்வோம்.
> >
> > "சத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்" - நல்லார் குழுவிலிருந்து குழுசாராத்
> > தனிமையை அடையவேண்டும்.
> >
> > அன்புடன்
> >
> > மதுரபாரதி.
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
>
>
> __________________________________________________
> Do You Yahoo!?
> Great stuff seeking new owners in Yahoo! Auctions!
> http://auctions.yahoo.com