From poo@... Sun Feb 17 11:01:56 2002
Return-Path: X-Sender: poo@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 2); 17 Feb 2002 19:01:56 -0000
Received: (qmail 80195 invoked from network); 17 Feb 2002 19:01:56 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 17 Feb 2002 19:01:56 -0000
Received: from unknown (HELO backupsrv.nesma.net.sa) (212.71.32.151) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 17 Feb 2002 19:01:55 -0000
Received: from mail.nesma.net.sa ([192.168.1.18]) by backupsrv.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.197.19); Sun, 17 Feb 2002 21:58:02 +0000
Received: from s0024156401.giasmd01.vsnl.net.in ([213.181.167.78]) by mail.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.537.53); Sun, 17 Feb 2002 22:01:26 +0300
Message-Id: <4.3.0.20020217222635.027858f0@...>
X-Sender: poo/giasmd01.vsnl.net.in@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Sun, 17 Feb 2002 22:26:52 +0300
To: tamil-ulagam@yahoogroups.com,agathiyar@yahoogroups.com
Subject: Fwd: [tamil] FW: [kuviyam] kaNNagi vazipAdu in ilangkai
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
Return-Path: poo@...
From: Krishnan Ramasamy X-Yahoo-Group-Post: member; u=23389931
X-Yahoo-Profile: iramaki
X-Yahoo-Message-Num: 15965
>Delivered-To: poo@...
>Mailing-List: contact tamil-help@...; run by ezmlm
>Delivered-To: mailing list tamil@...
>Date: Sun, 17 Feb 2002 10:19:37 -0800 (PST)
>From: "K. Ramanitharan" >To: tamil@...
>Subject: [tamil] FW: [kuviyam] kaNNagi vazipAdu in ilangkai
>
>நட்பின் தமிழிணையர்களுக்கு,
>
>கீழ்க்காணும் கட்டுரை, 'இலங்கையிற் கண்ணகியம்மன் வழிபாடு', 'குவியம்'
>எனும் இணைய இதழிலே காணப்படுகின்றது.
>http://www.kuviyam.com/b001r02/articles_t.htm#article1
>
>அதன் குறைநிறை பற்றிக் கருத்துச் சொல்ல எனக்கு அறிவும் விபரமும் பற்றாது;
>ஆனால், மேற்படிக்கட்டுரையிலே ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்
>என்பதால், அனுப்பி வைக்கின்றேன்.
>[அது பாமினி எழுத்துருவிலே இருக்கின்றது; கீழே தகுதாம் 1.6
>எழுத்துருவிலே பெயர்த்திருக்கின்றேன்.ஆயினும், சில பகுதிகள் முறையாக
>மாற்றப்படவில்லை என்று நினைக்கின்றேன்; மூலக்கட்டுரையையே காண்க]
>
>---
>இலங்கையில் கண்ணகியம்மன் வழிபாடு
>பொன். குலேந்திரன்
>முன்னுரை
>கற்புக்கனலாம் தமிழிச்சி கண்ணகியம்மன்னின் சிலை சென்னையில் மர்மமாக
>வாகனம் மோதி சிதைக்கப்பட்டது பலருக்குத் தொந்ததே. திரும்பவும் அதே
>இடத்தில் அச்சிலையை அமைக்க பல அரசியல் போராடங்கள் நடைபெறுகின்றன.
>கண்னகியம்மன் சிலை அவ்விடத்தில் இருந்தால் அரசு நிலைக்காது என்று யாரோ
>சொன்னதுக்காக திட்டம் இட்டு இடிக்கப்பட்டதாக எதிர்கட்சிகள் வாதம்.
>கண்ணகிக்கு சார்பாக வாதம் செய்யும் கட்சித் தலைவர், ஈ.வ.ரா பொயார்
>கண்ணகியை இழிவுபடுத்திய போது எங்கே சென்றார் என்பது இன்னொரு சாரார்
>வாதம். வாதம் யாரை பீடித்திருப்பினும் தமிழர்களின் மனதில் தமிழ்
>இலக்கியங்களில் ஒன்றான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் அழியாது இடம்
>பிடித்துவிட்டன என்பது மறுக்கமுடியாததொன்று. கண்ணகியின் சிலையை
>அழித்தாலும் அக்கதையையும் வழிபாட்டினையும் பலர் மனதில் இருந்து அழிக்க
>முடியாது. சிங்களவர் பெரும்பானமையாக வாழும் இலங்கையில் பல்லாண்டு
>காலமாக தமிழ் தெய்வமாகிய கண்ணகிக்கு சிலை வைத்து வணங்கும் போது
>தமிழர்கள் பெருமான்மையாக வாழும் தமிழகத்தில் இச்சிலைக்கு ஒரு நாலடி
>நிலம் இல்லையே என நினைக்கும் போது நெஞ்சுபொறுக்குதில்லையே. இந்தச்
>சந்தர்பத்தில் இச் சிறப்புக்கட்டுரை தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளி
>வருகிறது . 0
>கண்ணகியம்மன் கதை
>
>கண்ணகி அம்மன் வழிபாடு
>கண்ணகி அம்மன் வழிபாடு கி.பி 171 முதல கி.பி 193வரை
>அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி புந்த கஜபாகு என்ற அரசனால் இலங்கைக்கு
>கொண்டுவரப்பட்டதென இராஜவாளி என்ற சிங்கள நுல் கூறுகிறது. கஜபாகு
>ஆட்சி காலத்தில் சேரமன்னன் செங்குட்டுவன் தனது தலைநகராகிய வஞ்சியில்
>இமயமலையில் இருந்து கொண்டுவந்த கல்லில் கண்ணகிக்கு சிலை செய்து கோயில்
>அமைத்து பெருவிழா எடுத்தான் . கபே 178ல் நடந்த அவ்விழாவிற்கு
>செங்குட்டுவனின் அழைப்பையேற்று அவன் நண்பணாகிய கஜபாகு விழாவில் கலந்து
>கொண்டான். இவ்விழாவில் பாண்டிய மன்னன் வெற்றிவேற் செழியனும் , சோழ
>அரசன் பெருநற்கிள்ளியும் , கொங்குதெச அரசன் இளங்கோ அடிகளும் ,
>மகததேச மன்னரும் கலந்துகொண்டாதாகதுரைஜெயநாதன் டனடிடஙரழவந
>ஆதிதிராவிடரும் அழிந்துபொன சங்கங்களும் டனடிடஙரழவந என்ற
>கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். விழாவில் கலந்த கஜபாகு கண்ணகியின்
>அற்பதங்களைக் கண்டு வியந்தான். கஜபாகு , கண்ணகியை செங்குட்டுவனைப்போல்
>நித்தியபூசை செய்து வலம் வந்து தன் நாட்டிலும் எழுந்தருளி அருள்புய வேண்டும்
>என்று அவன் கேட்டு பிரார்த்தித்தான். அவன் விரும்பியபடி எல்லாம் நடக்குமென
>அசி கேட்டு கஜபாகு உள்ளம் நெகிழ்ந்து கண்ணகிமேல் கூடிய நம்பிக்கை
>கொண்டான். இலங்கையில் கண்ணகி வழிபாட்டினை பரப்ப தன் விருப்பததை
>செங்குட்டுவனிடம் கஜபாகு தொவித்தான்.
>செங்குட்டுவன் சந்தன மரத்தால் செய்த கண்ணகி சிலையையும் ஒரு
>காற்சிலம்பையும் சந்தனமரப்பேழையில் வைத்து கஜபாகுவிடம் கையளித்தான.
>கஜபாகு கண்ணகி விக்கிரகத்துடன் இலங்கைக்குத் திரும்பும்போது தன்னுடன்
>பன்னிரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பல்குடிமக்களையும் அழைத்துச்சென்றான். அவன்
>வந்திறங்கிய சிலையுடன் வந்திறங்கியது மாதகலுக்கருகேயுள்ள சம்புகோள
>துறைமுகம். யானை மேல் சிலையைவைத்து பல யானைகள் பின்னே வர ஊர்வலமாய்
>பல இடங்களுக்கு எடுத்துச்சென்றான். ஊர்வலம் நின்றயிடமெல்லாம் கண்ணகி
>வழிபாடு தோன்றிற்று.
>யாழ்குடாநாட்டில் கண்ணகியம்மன் வழிபாடு
>இம்மன்னனால் யாழ்ப்பாணத்தில் முதலாவது கண்ணகி கோயில் ஸ்தாபிக்கப்பட்ட
>இடம் அங்பணாகடவை எனப்படும். அங்கனா என்பது அம்மனை குறிக்கும்.
>சிங்களநாட்டல் பத்தினி தெய்யோ என கண்ணகி அம்மனை அழைத்தனர்.
>ஒல்லாந்தர் காலத்தில் அக்கோயிலும் சிலையும் யானையால் சிதைக்கப்பட்டது.
>யாழ்ப்பாண குடாநாட்டல் இருந்த பல கண்ணகி அம்மன் கோயில்கள் நாளடைவில்
>நாக அம்பாள் , இராஜேஸ்வா அம்பாள் , முத்துமா அம்பாள் என்ற பெயால்
>வணங்கப்பட்டது. இன்று இளவாலை, மண்டதீவு , பளை , வீமன்காமம்
>தெல்லிப்பளை , மசியப்பிட்டி , கச்சாய் , பருத்தித்துறை , புலோலி ,
>காரைநகர் ஆகிய இடங்களில் கண்ணகி அம்மனுக்கு கோயில்களுண்டு.
>மூததம்பியின் யாழ்ப்பாண சாத்திரம்என்ற புத்தகத்தில் முதற் கண்ணகி அம்மன்
>கோயில் நாவற்குளியில் உள்ள வேளம்பாயில் தோன்றியதென
>குறிப்பிட்டுள்ளார். எங்கு முதலில் கண்ணகி அம்மனுக்கு கோயில்
>தோன்றியதேன்பதற்கு தக்க ஆதாரங்கள்கிடையாது. முல்லைத்தீவில் உள்ள
>பிரசித்தம்பெற்ற வற்றாப்பளை கண்ணகியம்மன் கோயில் கஜபாகுவினால்
>ஸ்தாபிக்கப்பட்ட பத்தாவது கண்ணகி ஆலயம். அனுராதபுரத்தில் இசுருமுனிய
>விகாரகவிற்கு அருகேயுள்ள தடாகத்துக்கு முன்னால் கண்ணகி ஆலயம் அமைத்தான்.
>வருடாவருடம் ஆடிமாத பூரணையில் கண்ணகிக்கு விழா எடுத்தான். இதனை
>சிங்களவர் எசல பெரஹரா என அழைத்தனர். கண்ணகி வருகையால் இலங்கையிலட
>மழைவளம் பொழிந்து விளைச்சல் பெருகி செழிப்புள்ள நாடாகியது.
>இக்கதைக்கு மாறாக சிங்கள சாத்திர நுல்கள் கஜபாகு தெனிந்தியாவுக்கு
>படையெடுத்துச் சென்று 24000 சிங்களவரை சிறைமீட்டி வரும்போது
>கண்ணகியின் விக்கிரகத்தையும் சிலம்பினையும் இலங்கைக்கு கொண்டுவந்ததாக்
>கூறுகின்றன. சோழ அரசன் செங்குட்டுவன் கஸபாகுவை வரவேற்று 24.000
>சிங்களவரை விடுதலை செய்யும் போது 24.000 சோழநாட்டவர்களையும்
>கூட்டிச்செல்ல ஒப்புதல் கொடுத்ததாக மஹாவம்சத்தில் குறிப்பிடபடவில்லை.
>கண்ணகியின் காற்சிலம்பிற்கு சின்னம்மை, பொயம்மை , சின்ன முத்து ,
>கூவக்கட்டு , குக்கல் போன்ற தொற்று வியாதிகளைக் குணப்படுத்தும் அதிசயமான
>சக்தியுண்டு என்பது மக்கள் நம்பிககை.
>சிங்களப் பகுதிகளில் கண்ணகி வழிபாடு
>சீதாவக்கை காலத்தில் (கி.பி 1530 - 1592)பத்தினி வழிபாடு
>பிரபல்யமானது. டிக்கி பண்டார என்ற இளவரசன் சீதாவக்கையை ஆண்ட
>மாயதுன்னை என்ற தன் தந்தையை நஞ்சு வைத்து கொலைசெய்து சீதாவாக்கைக்கு
>1582ல் முதலாம் இராஜசிங்க என்ற நாமத்துடன் அயாசனம் ஏறினான்.
>பெளத்த தர்மத்தின்படி தகப்பனைக் கொன்ற பாவம் அவனைவிட்டு பல
>ஜென்மங்களுக்குப் போகாது என பெளத்த பிக்குமார் சொல்லியதைக்கேட்டு அவன்
>பொருமாள் என்ற பிராமணன் அல்லாத நண்பணின் உபதேசத்தின் போல்
>இந்துமதத்தை தழுவினான். கற்புக்கரசியான கண்ணகிக்கு களனி கங்கை ஓரத்தில்
>கொழும்பு அவிசாவலை பதையில் உள்ள கடுவலை எனும் ஊல் கோயில்
>கட்டினான். இக்கோயில் போர்த்தகேயர் காலத்தில் (1505-1658)
>கட்டியதென கோயிலுக்கு அருகேயுள்ள கற்துணில் உள்ள கல்வெட்டில் காணக்
>கூடியதாகயிருக்கிறது என காலம் சென்ற கலாநிதி செனரத் பரனவித்தாரன
>குறிப்பிட்டுள்ளார். மலபாரைச் சேர்ந்த நாயக்கர் பரம்பரை கண்டி
>இராச்சியத்தை 17ஜ9 முதல் 1815 வரை ஆண்டபோது கண்ணகி வழிபாட்டுக்கு
>கண்டி இராச்சியத்தில் முக்கிய இடம் கொடுக்கப்பட்டது. சமன் என
>அழைக்கப்கட்ட சமனலகந்த என்ற மலையின் காவல் தெய்வ வழிபாட்டுக்கு
>பதிலாக பத்தினி தெய்வம் வழிபாடு ஆரம்பிக்கப் பட்டது.
>கஜபாகு அரசன் நடத்தி வந்த கண்ணகி அம்மன் விழாவின் தொடர்ச்சியே
>கண்டியில் நடக்கும் எசல பெரஹராவாகும். தலதா மாளிகை எசல பெரஹராவில்
>கீழ்கண்ட பெரஹராக்கள் இடம்பெறுமஜ தலதா மாளிகை பெரஹரா, நாத
>தேவாலய பெரஹரா , மஹாவிஇணு தேவாலய பெரஹரா , கதிர்காம
>பெரஹரா , பத்தினி தேவாலய பெரஹரா. உடகம என்ற கண்டிப்பகுதியில்
>இரண்டாம் இராஜசிங்கனால் (16ஜ5-1687) பத்தினி கோயில் கட்டப்பட்டது.
>15 நாட்கள் இக்கோயிலில் திருவிழாக்கள் நடைபெறும். பத்தினிக்கு பதுளை
>, ஹங்குரன்கெட்ட என்ற சிங்களப் பகுதிகளிலும் கோயில்களுண்டு.
>கதிகாமத்திலும் பத்தினிதெய்வத்துக்கு கோயிலுண்டு. சிங்களவாடையே
>பத்தினி வழிபாட்டுடன் கொம்பு விளையாட்டு , தோடம்பழம் அடிக்கும்
>விளையாட்டு , தேங்காய் உடைக்கும் விளையாட்டு , பூ விளையாட்டு போன்ற
>விளையாட்டுகளுக்கு முக்கியத்துவமுண்டு. கண்ணகியின் கணவன் கோவலனை
>சிங்களவர் டனடிடஙரழவந பலங்கசனடிடஙரழவந என்பர். 11ம் நுற்றாண்டு
>கண்ணகி , பலங்க சிலைகள் நிக்காவெவஎன்ற சிங்களப்பகுதியில் உள்ள
>குகையொன்றில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த சிலையில கண்ணகி சாதாரண
>சிலம்புடனும் வேலைப்பாடுகள் நிறைந்தகாப்புகளுடனும் காணப்படுகிறாள்.
>கண்ணகி கோயில்களில் தீ மிதித்தல் தீயில் பழிகொடுத்தல் போன்றவை
>இடம்பெறும். கொம்பு விளையாட்டுக்கும் கண்ணகி கோவலன் கதைக்கும்
>சம்பந்தப்பட்ட கதை ஒன்றுண்டு. கண்ணகியும் கோவலனும் மரம் ஒன்றிலிருந்து
>பூப்பறிக்க கொழுக்கிகள் உள்ள இரு தடிளைப் பாவித்த போது கொழுக்கிகள்
>மாட்டிக்கொண்டன. அதனைக் கலட்ட முடியாமல் போனபோது ஆண்கள் ஒரு பக்கமும்
>பெண்கள் ஒரு பக்கமும் சேர்ந்து கலட்ட முயன்றபோது ஆண்கள் பக்கத்து தடி
>முறிந்ததாக கதையுண்டு.
>கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாடு
>அனுராதபுர மன்னன் கஜபாகு காலத்தில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட
>கண்ணகி வழிபாடு கிழக்கிழங்கைக்கும்பரவி இருக்காலம் என்பது பலர் கருத்து.
>கஜபாகு விக்கிரகத்துடன் இலங்கை திரும்பிவந்து அனுராதபுரத்திலிருற்து 15
>வருடகாலமே ஆட்சி புந்த படியால் அந்தச் சொற்ப காலத்துக்குள் கண்ணகி
>வழிபாட்டினை கிழக்கிழங்கையில் பரப்பியிருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள்
>இல்லையென்னபது ஒரு சாரார் கருத்து. கண்ணகி வழிபாடு கி.பி 16ம்
>நுற்றாண்டில் மட்டக்களப்பு பகுதிகளில்அறிமுகமானதென மட்டகளப்பு மான்மியம்
>குறிப்பிட்டுள்ளது. கிழக்கு பிரதேசத்தில் வாழ்ந்த தமிழ் சிற்றரசர்களே
>கண்ணகி வழிபாடு பரவலுக்கு முக்கிய பங்களித்துள்ளார்கள் என்பதக்கு பல
>சான்றுகளுண்டு. முல்லைத்தீவில் உள்ள வற்றாப்பளை கண்ணகியம்மன் கோயில்
>வழிபாட்டிலிருந்து இவ்வழிபாடு கிழக்கிழங்கைக்கு பரவியிருக்கலாம் என்பதும்
>ஏற்றுக்கொள்ளக் கூடிய வாதம். போர்த்துக் கேயர் காலத்தில்
>யாழ்குடாநாட்டிலிருந்து மட்டக்களப்பிற்கு நாடார் குடியேற்றம் ஒன்று நிகழ்ந்தது.
>கந்தப்பர் என்பவர் தலைமையில் புலம்பெயர்ந்தவர்கள் தங்களுடன் கொண்டுவந்த ஏழு
>கண்ணகியம்மன் சிலைகளை ஏழு கிராமங்களில் பிரதிஇடை செய்து கோயில்
>கட்டி வணங்கியதாகவும் அவர்கள் மண்முனைக்கு அருகாமையில் குடியேறி
>வாழ்ந்ததாக மட்டகளப்பு மான்மீயம் குறிப்பிட்டுள்ளது.
>மட்டக்கிளப்பின் வெருகல் ஆற்றுக்குக் கிழக்கே உள்ள துறைமுகத்தில்
>மதுரையிலிருந்து செண்பகநாச்சியம்மன் , பத்திரகாளியம்மன் , கண்ணகியம்மன்
>சிலைகளைக் கொண்டு வந்ததாகவும் அதில் கண்ணகியம்மன் சிலையை
>மட்டக்கிளப்புக்கு தெற்கேயுள்ள ஊர் ஒன்றில் பிரதிஇடை செய்து வழிபட்டதாக
>வரலாற்றுச் செய்தியுண்டு. கி.பி 2ம் நுற்றாண்டில் மதுரையிலிருந்து
>கொண்டுவரப்பட்ட செண்பகச்செல்வி என்ற கண்ணகி விக்கிரகம் தம்பிலுவில்லைச்
>சேர்ந்த ஊராக்க என்ற இடத்தில் ஆலயம் அமைத்து பிரதிடைசெய்து
>வழிபடப்பட்டது. பெளத்த சிங்கள அரசர்களினதும் , தமிழ் அரசர்கள் ,
>சிற்றரசர்களினதும் ஆதரவில் கி.பி 2ம் நுற்றாண்டு தொடக்கம் 12ம்
>நுற்றாண்டு வரை கண்ணகி வழிபாடு செழித்து வளர்ந்தது.
>திருக்கோயில் சித்திரவேலாயுதர் ஆலயத்தில் அர்ச்சகர்களாக பணிபுய
>வீரசைவககுருமார்கள் அக்காலத்தில் வரவழைக்கப்பட்டனர். இவர்கள் தம் பட்டர்
>என வாழ்த்தி குடியேற்றி அவ்வூருக்கு தம்பட்டை என நாமம் சூட்டப்பட்டது.மேலும்
>இவர்களது வழிபாட்டுக்காக மல்லிகார்ச்சுன புரத்திலிருந்து கணெஇ
>விக்கிரகம் ஒன்று பெறப்பட்டு பிரதிஇடை செய்யப்பட்டதாகவும் மேலும்
>மேகவண்ணன் தனது தாயார் தம்பதிநள்ளாள் பெயால் வாவியொன்றையும்
>வெட்டுவித்து அவ்வாவிக்கு தம்பதிவில்எனப்பெயர் இட்டான். வில் என்ற சொல்
>வில்லைப் போன்ற குளத்தைக் குறிக்கும்.
>மழைபொழிய வேண்டி கொம்பு விளையாடல் என்ற வழிபாட்டின் மூலம்
>கண்ணகியம்மனை வழிபடுவார்கள். தம்பிலுவில கண்ணகியம்மன் கோயிலில்
>இவ்விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுகிறது. பொதுவாக கண்ணகி
>கோயிற்கதவுகள் ஆண்டுக்கொரு முறை திறக்கப்பட்டு பதத்தி என்ற முறைப்படி 10
>நாட்கள் வரை பூஜஜகள் செய்யப்பட்டு பின் கதவுகள் மூடப்படும். மக்கள்
>பெருதளவில் கூடி பயபக்தியுடன் வணங்குவர். கள்ளங்குடா , ஆரையம்பதி ,
>செட்டிப்பாளையம் , களுவாஞ்சிக்குடி , துறைநீலாவணை ஆகிய இடங்களில் உள்ள
>கண்ணகி கோயில்களில் நடைபெறும் வழிபாட்டு முறைகள் , சடங்குகள் ,
>சம்பிரதாயங்களில் வேறுபாடுகளுண்டு.
> ஈழத்தில் பிரசித்தம் பெற்ற கண்ணகியம்மன் கோயில்கள்
> கண்ணகி அம்மன் கோயில் வலந்தலை காரைநகர்
>1725ல் ஸ்தாபிக்கப்பட் ட பழம் பெருமை வாய்ந்த கோயிலிது.
>சந்தனமரத்திலான கண்ணகி அம்மனும் , வைரவருமுண்டு. வருடாவருடம் சித்திரை
>வருடப்பிறப்பை அடுத்துவரும் முதல் வெள்ளிக்கிமை கும்பம்வைத்து ஒன்பது
>நாட்களுக்கு திருவிழாநடைபெறும்.
> கண்ணகியம்மன் கோயில் , இத்தியடிபுலம் , புங்குடுதீவு
>சுமார் 130 வருடங்கள் பழமையான ஆலயமிது. பல வருடங்களுக்குமுன் இரை
>தேடிச்சென்ற தனது தனது கால்வடைகள் திரும்பாதறிந்த இடையன் ஒருவன்
>அவைற்றை தேடிச்சென்றான். தனது காலநடைகள் ஒரு பேழையைச் சுற்றி
>படுத்திருப்பதைக் கண்டு ஆச்சாயப்பட்டு, பேழையைத் திறந்து பார்த்த போது
>அதனுள் கண்ணகி விக்கிரகம் இருப்பதைக் கண்டதாக கதையொன்றுண்டு. ஆடிப்பூரம்
>இங்கு விசேமான தினமாகும். வருடாந்த உற்சவம் சித்திரை மாதத்தில்
>தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெற்று சித்திரைப் பெளர்ணமியன்று
>தேர்திருத்விழாநடைபெறும். மூலமூர்த்தி கண்ணகி. பாவாரமூர்த்திகள்
>இராஜஇராஜேஸ்வா , பிள்ளையார் , முருகன் பத்திரகாளி. நடராஜர்,
>வைரவர் ஆகியோர் உளர். பொய இராஜகோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
>இக்கோயிலின் பெயரை இராஜஇராஜேஸ்வா அம்மன் கோயிலென்றும் அழைப்பர்.
>
> கண்ணகி அம்மன் கோயில் அங்கணாக்கடவை சண்டிலிப்பாய
>இலங்கை மன்னன் கஜபாகு கண்ணகி சிலைகளையும் காற்சிலம்புகளையும் சேரன்
>செக்குட்டுவனிடமிருந்து பெற்றுக் கொண்டு தனது பாவாரங்களடன்
>யாழ்ப்பாணத்தின் மாதகலுக்கு அருகேயுள்ள சம்புகோளம் என்ற பிரசித்தம்பெற்ற
>துறைமுகத்தில் வந்திறங்கினான். இலங்கையில் இம்மன்னனால் ஸ்தாபிக்கப்பட்ட
>முதலாவது கண்ணகி ஆலயம் யாழ்ப்பாணம் திருவடிநிலைக்கு அருகாமையில் உள்ள
>அங்காணாக்கடவையில் அமைக்கப்பட்டது.அதன் பின்னர் அங்கிருந்து
>அனுராதபுரத்துக்கு பூநகா வழியாகச் செல்லும் பாதைகளில் உள்ள ஊர்களில்
>கண்ணகிக்கு ஆலயங்கள் அமைத்தான் என யாழ்ப்பாணச் சாத்திரத்தில் முதலியார்
>செ இராசநாயகம் குறிப்பிட்டுள்ளார். அடையளாம் காணமுடியாத
>அங்காணாக்கடவை கண்ணகி கோயில் தற்போது கந்தரோடையில் உள்ள
>கதிரமலைக்கருகாமையில் இருந்ததாகவும் சாத்திர வல்லுனர்கள் கூற்று.
>கண்னகியம்மன் கோயிலுக்கு எதிர்புறத்திலிருந்து கல்லாலான கஜபாகு மன்னனின்
>சிலை சில நுற்றாண்டுகளுக்கு முன் யானையொன்றினால் சிதைக்கப்பட்டு பின்
>சிலையின் கால் பகுதியும் தலையும் கலாநிதி பீஸ் என்பவரால்
>கண்டுபிடிக்கப்பட்டு யாழ்ப்பாண நுதனசாலையில் வைக்கப்பட்டது. இக்கோயில்
>இப்போது சிறுதளவில் இயங்குகிநது. வைகாசி விசாகப் பொங்கல் சிறப்பாக
>நடைபெறும். பக்கத்து ஊர்களான நவாலி , மாதகல் ஞகிய கிராமங்களிலும்
>கண்ணகிக்கு கோயில்கள் உண்டு. மாதகல்என்ற பெயர் மாதா என
>அழைக்கப்படும் கண்ணகியம்மனின் கல்லினாலான விக்கிரகம்
>வந்திறங்கியபடியால் வந்ததென ஒரு கதையுண்டு.
> வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் , முல்லைத்தீவு
>தமிழ்நாட்டில் கண்ணகி அம்மனுக்கு கோயில் அமைத்த காலம் தொடக்கம் இத்தலம்
>இருந்து வருகிறது. கஜபாகு அரசனால் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட
>பழமைவாய்ந்த பத்தாவது கண்ணகியம்மாள் கோயிலிது எனகருதப்படுகிறது.
>கண்ணகியம்மாள் வந்தமர்ந்த இடமாகியபத்தாம்பளை. என்பது மருவி
>வற்றாப்பளையாயிற்று என்பது வரலாறு. மூலமூர்த்தியாக கண்ணகியம்பாள
>வீற்றிருக்க , விநாயகர் , நாகதம்பிரான் , ஆகிய மூர்த்திகள்
>பாவாரத்தில் உள்ளனர். கடல் நீல் கோயில் விளக்கு எற்றுவதாக மக்கள்
>கருத்து. கொக்கிளாயிலும் கண்ணகி அம்மனுக்கு கோயிலுண்டு.
> யாழ்குடாநாட்டிலும் வன்னிப்பகுதிகளிலும் மற்றைய கண்ணகி கோயில்கள்
>கண்ணகியம்மன் கோயில் , மண்டைதீவு - 1942ல் ஸ்தாபிக்கப்பட்ட
>கோயிலிது.
>கண்ணகியம்மன் கோயில் ஏழாலை
>கண்ணகியம்மன் கோயில் மேளாய் , நல்லுர் , பூநகா .
>கண்ணகியம்மன் கோயில் , காங்கேசன்துறை
>துர்துலிடைக்க கண்ணகியம்மன் கோயில், தையிட்டி, காங்கேசன்துறை. 182:
>ஸ்தாபிக்கப்பட்டது.
>கண்ணகியம்மன் கோயில் , வீரமாணிக்கதேவன் துறை, மயிலிட்டி.
>கண்கியம்மன் கோயில் , நாகர்கோயில் - இது மிகப்புராதன ஆலயம்.
>தலவிருட்சம் ஆல். பழமைவாய்ந்த கோவலன் கண்ணகி கதை ஏடு ஒன்றுண்டு.
>1978ல் கோயில் கல்லினால் கட்டப்பட்டது.
>கண்ணகியம்மன் கோயில் , புத்துர்.
>கண்ணகியம்மன் கோயில் , கோப்பாய் வடக்கு.
>கண்ணகியம்மன் கோயில் , அச்செழு , நீர்வேலி.
>கண்ணகியம்மன் கோயில் , கைதடி.
>இக்கோயில்கள் சிவன், முருகன் , பிள்ளையார், சக்தி கோயில்களைக் போல்
>பிரசித்தமானவையல்ல . ஆனால் எவ்வளவுக்கு கண்ணகி வழிபாடு கிராமங்களில்
>பரவியிருந்ததை எடுத்துக்காட்டுகிறது.தீவகத்தில் சில கண்ணகி கோயில்கள
>இராஜஇராஜேஸ்வா கோயிலாக பெயர் மாற்றம் செய்யப்பட்டன. இத்தியடிப்புல
>கண்ணகியம்மன் கோயில் இதற்கு சான்று. மண்டைதீவில் உள்ள கண்ணகியம்மன்
>கோயில் பூசாகள் பிராமணரல்லாதோர்.
> ஸ்ரீ கண்ணகி அம்பாள் கோயில் காரைதீவு , நிந்தாவூர்
>500 வருடங்களுக்கு முன் காரேறு மூதுர் என்ற பெயர் வழக்கிலிருந்த போது
>ஸ்தாபிக்கப்பட்டது. இப்பெயர் திந்து காரைதீவாயிற்று.
>கதிர்காமம்செல்லும் யாத்திகர்கள் இக்கோயிலில் தங்கிச் செல்வது
>வழக்கம். கோயிலின் தலவிருட்சம் வயது முதிர்ந்த வேப்ப மரம். இப்பகுதியை
>அரசாண்ட வன்னிய மன்னன் நிலபுலன்களை பார்வையிட வந்த சமயம் அரசனின்
>யானை கீழே விழுந்து மயங்கி படுத்ததாகவும்ஈ அப்போது கோயில் மணி
>ஒலிக்க அங்கு வந்த ஏவலாளர்கள் கோயிலின் மகிமையை அரசனுக்கு எடுத்துச்
>சொன்னார்கள். கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்த தேவந்தி என்ற பெண்
>விவரம் அறிந்து வேப்பமிலை அரைத்து குளிகைசெய்து யானைக்கு கொடுத்து
>தீர்த்தம் பருக்கியபின் யானை எழுந்ததாகவும் ஒரு கர்ணபரம்பரை கதையுண்டு.
>அதற்கு கைமாறாக அரசன் ஆலயம் அமைத்து கொடுத்தானாம். அரசனுடைய இரு
>மனைவியர்களில் ஒருவாரான சிறிய பூற்கோதைக்கு இழந்த கண்பார்வை அம்மனை
>வணங்கியதால் கிட்டியதாகவும் கதையுண்டு. ஆலயம் தொடர்பான வழக்குலை என்னும்
>என்ற ஏடு ஒன்றுண்டு. வருடா வருடம் 7 நாட்கள் நடக்கும் உற்சவத்தில் இது
>தினமும் பாடப்பெற்று நிறைவு பெறும். 1976 ல் கோயில் புனருத்தாரணம்
>செய்யப்பட்டு கும்பாபிகம் நடந்தது.
> தம்பிலுவில் கண்ணகி அம்மன் கோயில்.
>கி.மு 5ம் நுற்றாண்டில், விஜயன் காலத்தில் திருக்கோவில் தம்பிலுவில்
>பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள் ஆதித்திராவிடர்களான நாகர் குடி மக்கள்.
>கி,மு 600ம் நுற்றாண் டில் இப்பிரதேசம் நாகர் முனை எனப்பெயர் பெற்றதாக
>மட்டகிளப்பு மானமீயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.மு 1ம் 2ம்
>நுற்றாண்டில் திருக்கோயில் துறைமுகம்பிரபல்யமடைந்திருந்தது.
>இத்துறையினுடாக தமிழ்நாட்டின் கிழக்குக் கரையிலிருந்த
>காவிப்பூம்பட்டனத்துடன் வர்த்தகத் தொடர்பு இருந்ததாக டனடிடஙரழவந
>கண்ணகி வழக்குரைடனடிடஙரழவந என்ற கிராமீய இலக்கியம்
>குறிப்பிட்டுள்ளது.
>கஜபாகு மன்னன் அனுராதபுரத்தை ஆட்சி செய்த காலத்தில் (கி.பி 171 -
>193) மட்டக்கிளப்பு பகுதிகளுக்கு கண்ணகி வழிபாடுவந்ததாகவும் அதன்ட பின்
>கிழக்கு இலங்கையின் வெவ்வேறு ஊர்களை ஆட்சிசெய்த சிற்றரசர்கள் தங்கள்
>ஆட்சி பிரதேசங்களில் கண்ணகி வழிபாட்டினை பரப்பியதாக வரலாற்று
>குறிப்புகளுண்டு. மேலும் இவ்வழிபாடு முல்லைத்தீவிலிருந்து கடல்மார்க்கமாக
>மட்டக்கிளப்பு பகுதிகளுக்கு வந்திருக்கக் கூடிய சாத்தியக் கூறுகளுண்டு.
>கி.பி 1626ல் கண்டி மன்னன் செனரதன மலேய வீரர்களின் உதவியுடன்
>போர்த்துக்கேயரை மட்டக்கிளப்பில் இருந்து அகற்றி மலாய வீரர்களை
>காவலுக்கு வைத்தான். அக்காலப்பகுதியில் மட்டக்கிளப்பில் நாடார் குடியேற்றம்
>நடந்தது. யாழ்குடாநாட்டிலிருந்து கந்தப்பர் என்பவரது தலைமையில் புலம்
>பெயர்ந்து வந்த குடும்பங்கள் ஏழு கண்ணகி விக்கிரகங்களையும் தங்களுடன் எடுத்து
>வந்து பிரதிஇடை செய்து வணங்கத் தொடங்கினரென மட்டகிளப்பு மான்மியம்
>கூறுகின்றது.
>கி.பி 159ஜ -180ஜ வரையுள்ள கண்டி மன்னர்களினது காலத்தில் தம்பிலுவில்
>பிரதேசத்தில் கண்ணகி வழிபாடு சிறப்புற்றிருந்ததுக்கு இலக்கிய தொல்லியல்
>சான்றுகள் உண்டு. சிங்கள அரசர்களும் நாயக்கர் வம்ச கண்டி மன்னர்களும் கண்ணகி
>வழிபாட்டனை ஆதாத்து மானியங்கள் பல வழங்கிவந்துள்ளனர்.
> கிழக்கு ஈழக் கிராமங்களில் மற்றும் பல கண்ணகியம்மன் கோயில்கள்
>கிழக்குப் பகுதி கிராமங்களில் பின் வரும் கண்ணகியம்மன் கோயில்கள்
>குறிப்பிடப்படவேண்டியவை.
>பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் கோயில் , பனங்காடு , அக்கரைப்பற்று.
>* கண்ணகி அம்மன் கோயில் சம்மாந்துறை.
>* கண்ணகி அம்மன் கோயில் , வீரமுனை, சம்மாந்துறை.
>* கண்ணகி அம்பாள் கோயில் களுவாஞ்சிக்குடி. இது 200 வருடங்களுக்கு முற்பட்ட
>புராதான ஆலயம். வைகாசி பெளர்ணமிக்கு மன் 7 றாட்களுக்கு கதவு
>திறக்கப்பட்டு விசேட வழிபாடு நடைபெறும்.
>கடற்கரை கண்ணகி அம்பாள் கோயில , கல்முனை.
>* கண்ணகி அம்மன் கோயில், துறைநீலாவணை. மட்டக்கிளப்பு மான்மியத்தில்
>இக்கோயிலைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
>* கண்ணகி அம்மன் கோயில் விடத்தல்முனை , புளியந்தீவு.
>* கண்ணகி அம்மன் கோயில் தாளங்குடா , காத்தான்குடி.
>* கண்ணகி அம்மன் கோயில் புன்னைச்சோலை , அமிர்தகழி , மட்டக்கிளப்பு.
>
>* கண்ணகி அம்மன் கோயில் , சத்துருக்கொண்டான், மட்டக்கிளப்பு . 100
>வருடங்களுக்கு முற்பட்ட கோயிலிது.
>* கண்ணகி அம்மன் கோயில், கல்குடா , வாளைச்சேனை.
>* கண்ணகி அம்மன் கோயில், கல்குடா , சித்தாண்டி
>* கண்ணகி அம்மன் கோயில், கல்குடா , கிரான்.
>* கண்ணகி அம்மன் கோயில், கல்குடா , முறக்கொட்டாஞ்சேனை
>கண்ணகியம்மன் கோயில்களின் எண்ணிக்கையிலிருந்து யாழ்குடா நாட்டைவிட
>கிழக்கு ஈழத்தில் எவ்வளவு துரத்திற்கு கண்ணகியம்மன் வழிபாடு
>கிராமங்களில் இயல் இசை நாடகங்களுடன் ஒன்று கலந்து பரவியிருந்ததை
>அறியக் கூடியதாகயிருக்கிறது.
>- அடிக்குறிப்புகள்.
>1. யாழ்பாண சாத்திரம் - முதலியார் செ இராசநாயகம்.
>2. மட்டக்கிளப்பு மான்மீயம் - F X C நடராஜா
>3. தம்பிலுவில் கண்ணகி வழிபாடு -நா நவநாயகமூத்தி
>4. பத்தினி வழிபாடு - தொகுப்பாசியர் தீரு சி கணபதிப்பிள்ளை
>5. மட்டக்கிளப்பு தமிழகம் - வித்துவான் பண்டிதர் வி.சி.கந்தையா.
>
>
>
>__________________________________________________
>Do You Yahoo!?
>Yahoo! Sports - Coverage of the 2002 Olympic Games
>http://sports.yahoo.com