From ramnrom@... Sun Feb 17 12:39:43 2002
Return-Path: X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 2); 17 Feb 2002 20:39:42 -0000
Received: (qmail 18679 invoked from network); 17 Feb 2002 20:39:42 -0000
Received: from unknown (216.115.97.172) by m8.grp.snv.yahoo.com with QMQP; 17 Feb 2002 20:39:42 -0000
Received: from unknown (HELO web14208.mail.yahoo.com) (216.136.173.72) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 17 Feb 2002 20:39:42 -0000
Message-ID: <20020217203942.94341.qmail@...>
Received: from [4.35.187.102] by web14208.mail.yahoo.com via HTTP; Sun, 17 Feb 2002 12:39:42 PST
Date: Sun, 17 Feb 2002 12:39:42 -0800 (PST)
Subject: "Trash Disposal"- Excerpts from LA Ram Dt.D
To: agathiyar@yahoogroups.com, tamil-ulagam@yahoogroups.com
In-Reply-To: <20020217083350.85792.qmail@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Message-Num: 15966
'குப்பை கொட்டுவதில்' பெரிய டெக்னிக்கே iருக்கிறது. அதில்
முனைவர் பட்டம் தரப்பட்டவன் என்கிற முறையில் குப்பை கொட்டும் மற்ற சின்னஞ்
சிறார்க்குச் சில அறிவுரைகள்:
Ph.D மாதிரி Dt.D என்பது ஒரு சிறப்பு முதுகலைப் பட்டம்.
(Doctor of Trash Disposal).
முதற்கண், 'Each To His Own'- அதாவது, 'ஒவ்வொரு
ஸ்வானத்திற்கும் ஒரு தனி ஒளிக்கம்பம்' என்கிற விதியினைப்போல,
குப்பைத் தொட்டிப் பக்கம் நம்மைத் தவிர யாரும் போகாமல் பார்த்துக்கொள்ள
வேண்டியது மிக அவசியம். குப்பைத்தொட்டி என்பது ஒரு ரகசியக் காப்பகப்
பெட்டகப் பேழை. (பல நேரங்களில் நைஸாக பியர் பாட்டில்களை யார்
கண்ணிலும் படாமல் அந்தர்தியானமாக்குவது அவசியம் என்பது அனுப()வப்பட்ட
குடும்பஸ்தர்கள் அடி வாங்கிக் கண்டறிந்த பேருண்மை.)
குடும்பத் தலைவியிடம் "உனக்கெதுக்கும்மா சிரமம்? நீ பாட்டுக்குக்
குப்பையை அங்கேயே சமையலறை ஓரமாகவே கொட்டு. நான் எதற்காக ஜென்மம்
எடுத்திருக்கிறேன்? அப்புறம் நானே என் கையால் எடுத்துப் போட்டுக்
கொள்கிறேன்' என்று அடிக்கடி சொல்வதால் விளையும் நேரடிப் பலன்களான
உடனடி சமாதானப் போர் நிறுத்தம், அலர்ஜி வந்த பூசணிக்காய் அளவில்
அம்மணியின் வதன பூரிப்பு போன்றவை தவிர, உப பலன்களும் எண்ணில-
(a) 'அய்யோ பாவம், iந்த ஆளுக்கு நம்ப் கிட்ட எத்தனை கரிசனம்,
பாவம்' என்கிற அபூர்வ மதன 'பாவ'த்தால் விளயும் நன்மைகள் பல மணி
நேரத்துக்குப் பின்னரும் கட்டிலறை வரை தொடருமென்பர் மூதறிஞர் பலர்.
நடைமுறையில் iஃது சாத்தியமில்லை, அதிக பட்சப் பலன் சில மணித்
துகள்களே என்று கண்டாய்ந்தாரும் உண்டு. உங்களுக்குண்டான உண்மைநிலை உங்கள்
நடிப்பாற்றல், வசன உச்சரிப்பு, முக 'பாவம்', ராகு காலம், எம கண்டம்-
iவற்றைப் பொறுத்தது.
(b) குப்பை அதிகமாக சேரச்சேர பொறுமையிழக்கும் iல்லாள்,
"என்னவோ ஜம்பமாச் சொன்னீங்களே ஹெல்ப் பண்ணப் போறேன்னு, iப்பப்
பாருங்க ஒரே குப்பை ..." என்று முகாரியில் ஆரம்பிக்கும்போது, T. N.
சேஷகோபாலன் ஸ்டைலில் "ஓடோடி வந்தேன் கண்ணே ..." (ராகம்-
தர்மாவதி) தாண்டிக் குதித்து மாடியிருந்து ஓடி வந்து சேவை செய்வதால்,
"பரவாயில்லையே, நம்ப சொல்றதை iந்தாளு iத்தினி வருஷத்துக்கு அப்புறமும்
ஒழுங்காத்தான் செய்யுறாரு" என்று பெண்மை மகிழும். பொங்கலும் ஒழுங்காகக்
கிளறப்படும். காரம், மணம், குணம் ஒழுங்குபடும். வயிறு சமனப்படும்.
(c) மூன்றாவதாக, "அப்பாவே எல்லா(!) வேலையும் செய்யுறாரு,
போயி எதுனாச்சியும் உதவி பண்ணுங்கடா மூதே..." என்று சிறுவர்கள்
ஏ(ச்)வப்படுவதால், மேற்சொன்ன 'எல்லா வேலையும்' மீண்டும் மீண்டும் நாமே
செய்வதென்கிற பிரமை மீண்டும் நிலை நாட்டப்படும். சென்னைத் தமிழில்
'நம்ப பொசிஷன் ஷ்ட்ராங்காகும்'. (c-i) பசங்களிடமிருந்து மிக மிக
லேசான மரியாதை கலந்த எரிச்சல் வெளிப்படலாம்.
(d) குப்பையைத் தரம் பிரித்துக் கண்ணாடி, ப்ளாஸ்டிக் வகையறா,
பேப்பர், கறிகாய் மிச்ச மீதங்கள் என்று பாகுபடுத்தித் தனித்தனியே
ஆராய்ந்து, 'குப்பை நாடி அதன் குணம் நாடி', 'iதனை iதனால் iத்தொட்டியில்
என்றாய்ந்து' போடுதல் சாலச் சிறந்தது. 'மாசுக் கட்டுப்பாட்டு மாமணி' என்ற
பட்டம் கிடைக்க வழியுண்டு.
(e) சென்னை போன்ற வசதி படைத்த நல்லூர்க்குடிகட்கான சிறப்புப்
பலன்- பேப்பர்க் குப்பையைத் தரம் பிரித்துக் காசாக்குவதால் கரித்த கண்கள்
மிளிரும். குறைந்த பட்சம் சினிமா, பீச் தேறும்.
அதிக பட்சம்- கவனிக்க, iதற்கு Dt.D க்குப்பின்னரும் பல ஆண்டுகள்
கடின உழைப்பு தேவை- வாசலில் பேப்பர் போட்டு ஆறு கஜம் வாங்கப்பட்டால்,
பஞ்சகச்சம் பலப்படும், 'சினமாறிய பங்கஜத்தின் வலி போகுமே, கலி
பாருமே, புவி ஏகுமே' என்கிறார் சிறுகுடித்தொண்டர்.
சில நேரங்களில், த்ரேதா யுகத்தில் காணாமற்போன காதணி,
கையுறை, பாதி பப்புள் கம், பேனா மூடி, பென்சில் மீதி, பழந்தமிழர்
பொற்கழஞ்சு, நாய்க்குடை, பல்செட்டு போன்றவை உங்களால்
கண்டுபிடிக்கப்படுமானால், குடும்பத்தினர் உங்களை அகழ்வாராய்ச்சித்
தமிழறிஞர் நாகசாமி ரேஞ்சுக்குத் தூக்கிச் சென்று விடவும் கூடும்.
எனக்குத் தெரிந்த Dt.D ஒருவர் வேண்டுமென்றே மனையாளின் தோட்டுத்
துளைப்பானை அடிக்கடி 'ஸ்வாஹா' செய்து, அவளை 'மேட்சிங்' சங்கடத்தில்
ஆழ்த்தி விட்டுச் சில திங்கள்கள் கழிந்த பிறகு, தாம் ஏதாவது iக்கட்டான
மனப் பிராந்தி நிலையில் காணப்படும்போது அல்லது கண்டுபிடிக்கப்படும்போது,
திடீரென்று மேற்சொன்ன அணிகலனை மறு அவதாரம் செய்யவைத்து சகஜ
நிலைக்குத் திரும்புவார். எல்லோரிடமும் மகிழ்ச்சி பொங்கும். மற்றுமொரு
போத்தலுக்கும் வழி பிறக்கும்.
ஆதலால் "ஜகத்துளோரே, ஒழுங்காய்க் குப்பை கொட்டுவீரே!"
அன்புடன்
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் Dt.D
__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! Sports - Coverage of the 2002 Olympic Games
http://sports.yahoo.com