From arull@... Mon Feb 18 07:18:11 2002
Return-Path: X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 2); 18 Feb 2002 15:18:10 -0000
Received: (qmail 79603 invoked from network); 18 Feb 2002 15:17:27 -0000
Received: from unknown (216.115.97.167) by m4.grp.snv.yahoo.com with QMQP; 18 Feb 2002 15:17:27 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 18 Feb 2002 15:17:26 -0000
Received: from tm.net.my ([210.186.86.231]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GRQ004GJIGTCS@...> for agathiyar@yahoogroups.com; Mon, 18 Feb 2002 23:17:26 +0800 (SGT)
Date: Mon, 18 Feb 2002 23:16:30 +0800
Subject: திருமுறைத் தியானம்
To: "agathiyar@yahoogroups.com" Message-id: <3C711ACE.5AF25F78@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: 8BIT
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார் X-Yahoo-Group-Post: member; u=21400202
X-Yahoo-Message-Num: 15980
முன்னவன் எங்கள் பிரான் முதல் காண்பரிதாய பிரான்
சென்னியில் எங்கள் பிரான் திருநீல மிடற்று எம்பிரான்
மன்னிய எங்கள் பிரான் மறைநான்கும் கல்லால் நிழற்கீழ்ப்
பன்னிய எங்கள் பிரான் பழ மண்ணிப் படிக்கரையே.
தம் அடியவர்களை என்றும் விட்டகலாத பிரானாகிய
எம்தலைவன்; பிறரால் காண்பதற்கு அரியவன்; வணங்குவார்
சென்னியில் மன்னி அருள்பவன்; விஷமுண்ட நீலநிறக்
கழுத்தினையுடையவன்; இப்பெருமான் கல்லால மரத்தின்
நிழலில் அமர்ந்து சனகர் முதலிய முனிவர்கள் நால்வருக்கும்
வேதத் தெளிவை உபதேசித்தவராவார்.
இவர் எழுந்தருளி அருள் செய்யும் தலம் பழமண்ணிப்
படிக்கரையே.