மன்னிக்க வேண்டும். சும்மா இவ்வளவு காலம் இருப்பதற்கு. சமீப காலமாக நான் எந்த
குழுவிலும் இல்லை. அப்ப அப்ப போய் தபால் பெட்டியை சுத்தப்படுத்துவதோடு சரி. கன்னா பின்னா
என்று வேலைப் பளு சேர்ந்து போயிருக்கிறது. ஒன்னே ஒன்னு (மதுரைத் திட்டம்) மட்டும் இன்னும்
ஈடுபாடு. அதனாலதான் சேர்ந்து உங்களுடைய அஞ்சலுக்கு பதில் தரவில்லை.
பார்த்தா நிறைய நல்ல (அல்வா மாதிரி) விஷயங்களை miss பண்ணிவிட்டேன்.
அல்வாகடை என்றதும் நான் சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது
ஒரு ஆங்கில ஆசிரியர் சரியான படி punctuation விடவேண்டும் என்பதற்காக சொன்ன
சிரிப்பு சம்பவம்.
ஆதி காலத்து ஒரிஜனல் நெய் மிட்டாய்க் கடை என்பதில் கடை பழசா இல்லை நெய் பழசா
என்பதாக தப்பாக அர்த்தம் கொள்ள முடியும் என்பார்.
மேலசித்திரை வீதியில் இருக்கும் திருநெல்வேலி அல்வாக் கடையில் எங்களுடைய குடும்ப நண்பர்
அல்வா, கார வகைகள் செய்துகொண்டிருந்தார். அவர் பெயர் சுப்பிரமணிய ஐயர் (ஆண்டி ஐயர்
என்று சொல்வார்கள்). கடையில் முன்னால் சட்டையெல்லாம் போடாமல் உட்கார்ந்து கொண்டு
வரும் கஸ்டமர்களுக்கு அல்வா காரம் எடுத்துக் கொடுப்பார். தீபாவளி சமயம் அவர் வீட்டிலேயே அல்வா
செய்து தெரிந்த அறிந்தவர்களுக்கு விற்பார். அவர் வீட்டில் கொஞ்ச காலம் என்னை baby
sittingக்கு விட்டு விட்டு அவர் வீட்டு குழந்தைகளாக கருதி எனக்கு இலவசமாக நெளு நெளு
அல்வா கொடுப்பார்.
பல வருடங்களாக அவர் அந்தக் கடையில் வேலை பார்ப்பதில்லை. தனியாக கல்யாண சமையல்
செய்வதற்கு போய் விட்டார். தற்போது வயதாகிவிட்டதால் அதுவும் செய்வதில்லை என்று கேள்வி.
மதுரையில் பெருமளவு பாதிக்கப்பட்டது (என்னைப் பொறுத்தவரை), பழைய புத்தகக்கடைகள்தாம்.
மேலச்சித்திரை வீதியும், தெற்கு சித்தரை வீதியும் சேரும் இடம் நிறைய கடைகள் இருக்கும்.
ரொம்ப இருட்டாக இருக்கும். கடையில் போய் கேட்டால் கன்னா பின்னா என்று பழைய புத்தகமாக
இருந்தாலும் உள்ளே போய் சிறிது நேரத்திலேயே கொண்டு வந்து கொடுப்பார்கள். என்ன மாதிரி
catalog வைத்திருந்தார்கள் என்பது தெரியாது. அதற்கு பக்கத்தில் ஒரு மடம் உண்டு. எனது
பெரியப்பாவின் in-laws தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்ப அந்த மடமும் இல்லை.
நிறைய ஜவுளிக்கடைகள் தான் இருக்கின்றன.
தெற்கு ஆவணிமூல விதி, தெற்கு மாசி வீதிகளில் இருக்கும் ஜவுளிக்கடைகள் (சின்னாளப்பட்டு
இத்தியாதிகள்), கன்னிகா பரமேஸ்வரி கோயில், அப்புறம் நகைக் கடைகள், இவை இன்னும் இருக்கின்றன. தெற்கு
ஆவணி மூல வீதியில் தான் இரமண மகரிஷியின் உறவினர்கள்/அவரது மடமும் இருந்தது. இன்னும் இருக்கிறதா
என்று தெரியவில்லை. அவர்கள் என் அப்பாவின் அம்மா வழிச் சொந்தம். என் அப்பா இருந்தவரை
போய் வந்து கொண்டு இருந்தோம். தெற்கு சித்திரை/கிழக்கு சித்திரை வீதியில் பிளாட்பாரம்
கடைகளாக நேபாளிகள் மாதிரி இருப்பவர்கள் ஸ்வெட்டர் விற்றுக் கொண்டிருப்பார்கள்.
இப்போதைக்கு ஜகா வாங்கிக் கொள்கிறேன்.
குமார் மல்லிகார்ஜுனன்.
பி.கு. நீங்கள் அனுப்பிய இணையப் பக்கம்இல்லை என்று யாகூ சொல்கிறது.
Kumar Mallikarjunan, Ph.D.
Assistant Professor
Biological Systems Engineering Department
312 Seitz Hall, Virginia Tech
Blacksburg, VA 24060
Ph: 540-231-7937 Fax: 540-231-3199
email: kumar@...