From naga ganesan@... Mon Feb 18 10:11:00 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 2); 18 Feb 2002 18:11:00 -0000
Received: (qmail 15915 invoked from network); 18 Feb 2002 18:11:00 -0000
Received: from unknown (216.115.97.171) by m10.grp.snv.yahoo.com with QMQP; 18 Feb 2002 18:11:00 -0000
Received: from unknown (HELO n1.groups.yahoo.com) (216.115.96.51) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 18 Feb 2002 18:11:00 -0000
Received: from [216.115.96.120] by n1.groups.yahoo.com with NNFMP; 18 Feb 2002 18:10:59 -0000
Date: Mon, 18 Feb 2002 18:10:58 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: thalaividhiyaa pOdhaadha kaalamaa? - Re: [agathiyar] (Fwd) Gnanavettiyaan maDal
Message-ID:
In-Reply-To: <3.0.3.32.20020213180342.00712d6c@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 11077
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.24.102
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 15984

--- In agathiyar@y..., jaybee wrote:
>
> நேற்று காலையில் ஒரு புண்ணியவான் வைரஸ் அனுப்பியிருந்தார்.
> அதனை விடுப்பதில் சிரமம். அதன்பின்னர் புதிதாக நிறுவப்பட்ட நார்ட்டன்
> ஈமெயில் ஸ்கான் தொல்லைப்படுத்தியது. யூடோரா செயல்படவில்லை.
> அதை விடுத்தபின்னர் நெட்ஸ்கேப்புக்குள் உட்செல்லமுடியவில்லை.
> சில மணி நேரம் கழித்து tm.net வேலை செய்யவில்லை. இந்த ஊர்
> சர்வர் கோளாறு.
>
> சற்றுமுன்னரே இணையத்தில் பிரவேசிக்கமுடிந்தது.
> அதற்குள் டாக்டர் கணேசனின் கடிதம் மேற்கண்டவாறு:
> தமிழ் உலக மடற்குழுவில் ஞானவெட்டியான் கீழ்க்கண்டவாறு
> எழுதியுள்ளார்.
>
> >
> >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
> >From:
> gnanavettiyaan-jayachandhiran
> >To:
> tamil-ulagam@y..., naga_ganesan@h...
> >Subject: Re:
> [tamil-ulagam] Re: ஞானத் துக்கடா - 1 ( தொடர்ச்சி)
> >Date: Tue, 12 Feb 2002
> 12:22:30 +0530
> >
> >அன்பு நண்பர்களே,
> > வணக்கம். திரு.நா.கணேசன் அவர்களின்
> அறிவுறுத்தலால் நான் அகத்தியர் குழுவுக்கு வி
> >ண்ணப்பித்து>விட்டேன்.
> >
> > அகத்தியர் என்னை
> அங்கீகரிப்பாரோ? இல்லையோ? பொருத்திருந்து பார்ப்போம்.
> >
> - ஞானவெட்டியான்
> >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
>
>
> இரண்டுமே நேற்றே வெளியிடப்பட்ட கடிதங்கள்.
>
> என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தலைவிதியா...
> போதாதகாலமா?
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
>

அன்பு மருத்துவர் அய்யா,

ஞானவெட்டியான் நம் அகத்தியத்தில் உறுப்பினர் ஆகிவிட்டாரா?
அவருக்கு அகத்திய மடற்குழு மடல்கள் செல்கின்றனவா?
தமிழ் உலக மடற்குழுவில் எழுதுகிறார், அங்கெல்லாம்
பெரிதாக வைரஸ் அவரால் செல்வதில்லை போலும்.

அவரை உங்கள் மடல்குழுவில் அனுமதிக்க
வேண்டுகிறேன். அவருக்கும் தத்துவநாட்டம் இருக்கிறது.
அவரது தனிமடல் இக்குழுவில் சேர அவர் விரும்புவதைத்
தெரிவிக்கிறது (இணைப்பு 1).

கடல்மடை திறந்த வெள்ளமெனத் தமிழ்நாட்டுத் தமிழர்
இணையத்தில் பங்குகொண்டால் நாம் அனைவரும் பயன்பெறுவோம்.

அன்புடன்,
நா. கணேசன்

ஞானவெட்டியான் ஜெயச்சந்திரனிடமிருந்து எனக்குவந்த மடல்:
<<<
From: ஞானவெட்டியான்
To: naga_ganesan@hotmail.com
Subject: Re: வழிநடாத்துங்கள்
Date: Mon, 18 Feb 2002 13:17:33 +0530

அன்பு நண்பர் திரு.நாக கணேசன் அவர்கட்கு,
வணக்கம். 16.02.2002ம் திகதியிட்ட மின்னஞ்சலின் மூலம் என்னை அகத்தியர் தன்குழுவுக்குள்
அனுமதித்து விட்டார். ஆயினும், என்னை அறிமுகப் படுத்தி நான் அனுப்பிய மின்னஞ்சல்கள்(3) திரும்பி
வந்துவிட்டன. ஏனெனத் தெரியவில்லை. நான் அனுப்பிய மின்னஞ்சலின் பிரதி கீழே :

ஞானவெட்டியானைத் தெரியுமா?

பெயர் ..........................:
அ.ந.ஜெயச்சந்திரன்
புனைப்பெயர்.................: ஞானவெட்டியான்
கல்வி............................:
B.Sc.,A.M.I.E.R.E(LOND)
முகவரி..........................: 4/118-1,
N.S.நகர், தண்ணீர்பந்தல்,திண்டுக்கல்-624001.
தொலை பேசி எண்........: 0451/46 00 64
வேலை..........................: ஓய்வு பெற்ற
துணை மேலாளர் - பாரத ஸ்டேட் வங்கி
மடலாடுங் குழுக்கள் : மெய்கண்டார், தமிழ்-உலகம்,
எரும்புகள்(தற்போது எரும்புகள் ஞானத்தைப் பின்
பார்த்துக்கொள்ளலாமென எண்ணியுள்ளது போலும்.)
விருப்பக் களங்கள்..........:
ஆன்மீகம்,யோகம்,ஞானம்,இலக்கியம்,கலை,கவிதை
கற்க மறந்தது.................: இணைய தளங்கள்
உருவாக்கல், தட்டெழுத்துப் பயிற்ச்சி
மிகவும் பிடித்தது : மேற்கண்ட துறைகளிலுள்ள
ஆன்றோருடன் எனது கருத்துக்களப் பகிர்ந்துகொள்ளல்.
நமக்குச் சம்பந்தமில்லாதவற்றிலும், தெரியாதவைகளிலும்
மூக்கை
நுழைக்காமலிருப்பது.

பிடிக்காதது : செய்த்தித் துகள்களை (பெயர்,புகழுக்கு
ஆசைப்பட்டு)என்னுடையதென சொந்தம் கொண்டாடாமை.
மனு தனக்கு விதிக்கப் பட்டவைகளை மறந்து மற்ற
நிலையில்லாதவைகளை உண்மை என நம்பி
வீணாகிக்கொண்டிருக்கும் நிலைமை.
குறிக்கோள் : எனக்குத் தெரிந்த ஆன்மீகக்
கருத்துக்களை(படித்து அறிந்ததால் பலருடைய கருத்துக்களும்
இருக்கும்), உள்ளதை உள்ளபடிக்கும் கண்டதை
கண்டபடியும்( கண்ட
படி=நினைத்தபடி அல்ல) எடுத்துக் கூறும் ஒரு
வாய்க்காலாக (வாய்+கால்= வாயின்வழி வெளிவரும் ஆன்மக்
காற்றாக) இருப்பது.
பொருள்கொள்ளும் முறை : நான் அங்கத்தினனாக உள்ள
மடலாடுங்குழுக்களிலுள்ள நண்பர்கள் விநோதமாகப் பொருள்
கொள்கிறீர்கள் என்பர்.
ஒலியடிப்படையிலே(phonetic) பகுபதம்,பகாப்பதம் பிரித்துப்
பொருள் கொள்ளல்.
yahoo profile..................:
gnanavettiyaan
home page......................:
http://www.geocities.com/jayachandhiran
e - mail...........................:
netranger@eth.net
என் செய்தித் தொகுப்பின் ஒருபகுதி கீழே :


ஓளவைக் குறள்

வேதம் : பாரத நாட்டில் வாழும் மக்கள் கடவுள் பதத்தை
அடையும் வண்ணம், நூல்கள் மஹான்களால் அநுபவ
வாயிலாய் எழுதப்பட்டன. நூல்கள் எழுதுவதற்கு முன்பே,
ஞானமார்க்கத்தின் இரகசியங்களை வாயினால்
ஒருவருக்கொருவர் சொல்லி வந்தார்கள். பின்பு பீஜங்களை
ஏற்படுதிய பிறகு, ஓலையில் அந்த எழுத்துக்களைக்கொண்டு
தாங்கள் அநுபவித்த மகத்தான இரகசியப் பொருளைப்
போதிக்கவேண்டியவர்களைத் தேர்ந்தெடுத்து, சீவர்களிடத்தில்
வைத்திருந்த கருணையினாலேயே உபதேசித்து
வந்தார்கள். அவ்விதமாக வெளிப்பட்ட நூலே வேதமாகும்.

இதுவே முதல் நூலாக விளங்குகிறது. இவ்வேதத்தை
அறிந்தனுபவித்த ஞானிகளும் பெரியோர்களும் இதன்
மூலமாகக் கிடைத்த அனுபவத்தினால் சார்பு நூல்களை
இயற்றினார்கள். வேதசாரம் ஞானிகளால் ஆறு உப
அங்கங்களாகப் பிரிக்கப்பட்டன. அவைகளில், முதலாவதாகிய
சிக்ஷை என்னும் அங்கத்தைத் தழுவியே வேதங்கள்
அனுசரிக்கப்பட்டு வந்தன. கடவுளைக் காண வழி
இரண்டென வகுத்து, அவை சுரம், சரமென உணர்த்தி,
அவைகளை நாதத்தின் மூலமாகவும், பிராணாபான
வயுக்களின்
மூலமகவுமே அடையமுடியுமென்று உணர்த்திப் பாக்களைப்
பாடிவைத்தார்கள்.

அது போலவே, ஓங்கார சொரூபமாகிய நம் நாட்டின்
(இந்தியாவின் மேல் ஓம்மைப் பொருத்திப் பார்க்கவும்)
வடபுலத்தில் உறைந்த ஞானிகளால் சத்தி அம்சமாகிய
சமஸ்கிருதமென்னும் மொழியானது பரவித்தைக்கு மட்டும்
உபயோகப்படுத்தப்பட்டு வந்த்தது. ஆனால் அந்த மொழி
பேசுவதற்கு உபயோகப்படவில்லை என்பதால்,
அம்மொழியினின்றும் இந்தி,மராட்டி,குஜராத்தி முதலிய
வடபுலத்து மொழிகளை உண்டாக்கிக்கொண்டு, ஞான
கர்மாவாகிய ஆத்ம வித்தைக்குச் சமஸ்கிருதத்தையே
தாய்மொழியாக்கிக் கொண்டார்கள். இப்படியிருக்க,
தென்புலத்தில், சிவமொழியான தமிழ் ஓங்காரபீஜமாகத்
தாண்டவமாடிக் கொண்டிருந்தது. அதில் அனேக
மேதாவிகள் பிறந்து உலகுக்குத் தாங்கள் அநுபவித்த
ஆநந்தமாகிய இரகசியத்தை வழிநூலாக்கி வழங்கினார்கள்.

தமிழை ஆதாரமாகக் கொண்டு பீஜத்தைத் தமிழிலிருந்தும்
சப்தத்தை சமஸ்கிருதத்திலிருந்தும் எடுத்துக்கொண்டு ஒன்றாய்க்
கூட்டிக் கிரந்தம் என்னும் மொழியை
உண்டாக்கினார்கள். தமிழையே ஆதாரமாகக் கொண்டு
தங்கள் அநுபவங்களை வெளிப்படுத்தியிருக்கும் ஞானிகளின்
போக்குகளை, நாம் அநுபவித்துத்தான் உணரமுடியுமே
தவிர, அநுபவமில்லாமல் சாத்திரங்களைப் படித்து மட்டுமே
முடிவுக்கு வருவது நன்றன்று. அதனால், ஞானிகளின்
போக்குகளைச் சிதைத்து விடுவதினால் ஏற்பட்ட
குற்றத்தையும், கற்றவர்கள் வார்த்தையே எதிர்பார்க்கும்
மற்றவர்கள் கதி(மூச்சோட்டம்)யினாலேற்படும் குற்றத்தையும்
அடைவர்.

வேதாந்த விசாரணை என்பதைச் சத்திர விசாரணையோடு
நிறுத்திக்கொள்ளுகிறார்களே தவிர தம் உற்பத்தியைப் பற்றியும்,
பஞ்சபூதங்களை மானுட உடலில்
சம்பந்தப்படுத்தியிருக்கும் இரகசியங்களையும், நாதபிந்து
கலைகளின் இரகசியங்களையும், இன்னும் மற்றவைகளையும்
ஆராயாமல் விட்டு விடுகின்றனர். சாத்திரங்களைப்
படித்து அறிவதை விட, தன்னை அறியவேண்டி ஆராய்ச்சியின்
மார்க்கத்தில் சென்றால்தான் சூட்சும தத்துவங்களை
அறியமுடியும். கண்ணலே பார்க்காமல் அநுபவத்திற்குக்
கொண்டு வந்துணருவது முடியாத ஒன்று.

"தன்னை யறிந்தால் தலைவனைக் காணமுடியும்"

என்பதை அலசி ஆராயாமல் விட்டதே உண்மை ஞானம்
மறைபட்டதிற்குக் காரணம்.

அதற்கு எடுத்துக்காட்டாக, வீடுகளிலும் ஆலயங்களிலும்
(ஆன்மா லயிக்கும் இடங்களிலும்) கடவுளை
வணங்கும்போதும், கற்பூரம், சாம்பிராணிப்புகை, தேங்காய்
இம்மூன்றையும் உபயொகப்படுத்துவது எதற்கு? கடவுளை
மகிழ்விப்பதற்காக என்று கூறி வாழ்நாளை வீணாக்கி
வருகிறோம். இவைகளுடைய தத்துவங்கள்(உண்மைகள்)
இரகசியமாக மறைக்கப்பட்டு இருக்கின்றன.
மறைக்கப்பட்டிருப்பதால்தான் வேதங்கள் மறைகள்
எனப்பட்டன.
கடவுள் தூபதீபங்களுக்கும் தேங்காய்க்கும் இசைப்படுபவரா?
சர்வ வியாபக மூர்த்திக்கு இச்சையுண்டா? இந்த அற்பப்
பொருள்களைக்காட்டி அவருடைய அருளைப் பெறமுடியுமா?
தேங்காய், மாயையாகிய மட்டையினால் மறைபட்டும்,
பற்றாகிய நாரினால் கட்டப்பட்டும், ஆசையாகிய
சிரட்டையினால் மூடப்பட்டும் இருக்கின்ற உண்மையாகியது
(உள்+மெய்) சிவம். அதனுள் இருக்கும் நீராகிய சத்தியும்,
இரண்டும் சம்பந்தப்பட்டபின் உண்டாகிய உடலில் ஓடும்
சீவன் சாம்பிராணிப் புகை. பிராணண்
ஒளியைப் பிரகாசிப்பதையும், மன அசைவை நிறுத்துவதற்கும்
கற்பூர ஒளியைக் காட்டினார்கள். இவைகளை அறிந்து
உணர்வதே கல்வியின் பயன்.

இதைப்போலவே மறைக்(கப்பட்டுள்ள)கருத்துக்களை, நம்
நாட்டின் உருவமைப்பிலும், நம் சரீர அமைப்பிலும்,
தெய்வமைப்பிலும், உற்சவகிரியைகளின் அமைப்பிலும்,
தெய்வ ஆலயங்களுள்ள ஊர்ப்பெயரின் அமைப்பிலும்,
மனிதர்களின் பெயரமைப்பிலும், வீட்டுச்சுத்தி, தேகசுத்தி,
ஆகாரசுத்தி முதலிய அமைப்பிலும் ஞானிகள் நூல்களின்
சாரங்களாகத் தந்திருக்கின்றனர். இவைகளைப்
புரிந்துகொண்டால் நூல்களின் கருத்துக்கள் எளிதில்
விளங்கும்.

ஆத்மவித்தையானது உலகத்தில் சஞ்சரிக்கவும், யோகம்
என்னும் தந்திரத்தை(தன்+திறத்தை) அறியாமல் மனங்கலங்கும்
சீவப்பிறவியற்க்குப் பேருதவியாக இருக்கும்
என்னும் எண்ணத்துடன் எனக்குப் புரிந்தவரை
விளக்கப்பட்டுள்ளது.

இதைத் தேடுதல் வேட்டையிலுள்ளவர்கள் கண்டால்
ஆநந்தப்படுவர். மற்றவர்கள் படித்தவுடன் தீர்மானிக்காமல்,
பூரணமாகப் படித்துத் தீர்மானிக்கவேண்டுகிறேன்.
நிறையிருப்பின் அடைவீர் ஆநந்தம், குறையிருப்பின் கூறுவீர்
என்னிடம்(திருத்திக்கொள்ள).

மனு வாழ, மானுடம் பயன் பெறட்டும்.


பின்குறிப்பு: இதுவே ஞானத்தின் முதல்படி என்பதால்,
சீவப்பிறப்பெடுக்க முடிவு செய்த நண்பர்கள் அனைவரும்,
இவ்வறிய நூலைப் படிப்பது அவசியம்.

************
அகத்தியர் அவர்களே, மேற்கண்டவற்றை ஆராய்ந்து,
குழுவிலிடம்பெறத் தக்கவன் என்றால் தொடர்ந்து எழுதுவேன்

*** ஞானவெட்டியான்
netranger@eth.net

இன்னும் என்ன செய்வது என்னும் குழப்பமே மிஞ்சியுள்ளது.
முடிந்தால் அகத்தியருக்குத் தாங்களே தந்துவிடலாம்.
சொல்லுங்கள் செய்கிறேன்.கணிணிக் கோளாறுகள் சரியாகிவிட்டது.
- ஞானவெட்டியான்
>>>


>
> >naga_ganesan wrote:
> >
> > > --- In tamil-ulagam@y...,
> gnanavettiyaan-jayachandhiran
> > > wrote:
> > >
> > > அன்பு அறிஞர்
> ஜெயசந்திரனுக்கு,
> > >
> > > வணக்கம். தாங்கள் எழுதுவதை எல்லா மடலையும்
> > > படிக்க நேரம்
> கிட்டவில்லை. அருமையாக
> > > எழுதும் உங்கள் எழுத்தை வருங்காலத்தில் படிப்போம்.
> > >
> > > தத்துவ
> ஆராய்ச்சியில் வல்லவர்கள் கொண்ட இன்னொரு
> > > குழுமம் உள்ளது. அது அகத்தியர் குழுமம் ஆகும்.
> > > அங்கு
> உங்கள் ஆராய்ச்சிகளுக்குச் சில விடைகள்
> > > கிடைக்கலாம்:
> > >
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
> > > இந்தக் குழுவில் சேர்க.
> > >
> >
> > உங்களுக்கு சைவத்தில் பற்றென்றால், நீங்கள்
> > > சேர இன்னொருகுழு உண்டு: மெய்கண்டார் என்னும்
> > >
> குழுவில் தத்துவ விசாரணைகள் டாக்டர் லோகநாதன்
> > > நடத்திவருகிறார். அதிலும் சேர்ந்து
> பயன்பெறுக:
> > > http://groups.yahoo.com/group/meykandar/messages
> > >
> > >
> அன்புடன்,
> > > நா. கணேசன்
> >
> >
> >-------------------------------------------------------------------------
> --------