From jaybee@... Sat Feb 23 07:39:36 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 23 Feb 2002 15:39:36 -0000
Received: (qmail 28405 invoked from network); 23 Feb 2002 15:39:36 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 23 Feb 2002 15:39:36 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 23 Feb 2002 15:39:35 -0000
Received: from user (sp-103-252.tm.net.my [210.186.103.252]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GRZ00HE5STW8T@...> for agathiyar@yahoogroups.com; Sat, 23 Feb 2002 23:39:34 +0800 (SGT)
Date: Sat, 23 Feb 2002 23:41:29 +0800
Subject: Thamilzh Thaaththaa Vaaram -#9
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020223234129.0073c790@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16130
கட்டுரையாளர் தமிழ்த் தாத்தா
தமிழ்த் தாத்தா உவேசாமிநாதய்யரவர்கள் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.
அவற்றை 1941-க்கு முன்னால் கலைமகள், ஆனந்தவிகடன் போன்ற
பத்திரிக்கைகள் வெளியிட்டன. அவற்றையெல்லாம் பின்னர் தொகுத்து சிறு
நூல்களாக வெளியிட்டார்கள்.
1.பழையதும் புதியதும்
2.நான் கண்டதும் கேட்டதும்
3.நினைவு மஞ்சரி
4.நல்லுரைக் கோவை
அந்தக் கட்டுரைகளில் ஒன்றை இங்கே தருகிறேன். தஞ்சையில்
சரஸ்வதி மகால் நூலகம் ஏற்பட்ட கதை.
திருக்குறளால் வந்த பயன்
தஞ்சாவூர் அரண்மனையில் ஸ்ரீசரஸ்வதி மகால் என்ற பெயர் கொண்ட
பழைய புத்தகசாலை ஒன்று உண்டு. அங்கே உள்ள ஏட்டுச்சுவடிகளையும்
அச்சுப்புத்தகங்களையும் பார்க்கும்பொருட்டு ஒவ்வொருநாளும் பலர் சென்று
வருவார்கள்.
சரஃபோஜி அரசர் அமைத்த பல தர்மங்களுள் இப்பொழுது மிக்க
பயனுடையதாக விளங்குவது, அந்தப் புத்தகசாலை. அதில் அம்மன்னர்
காலத்தில் பல்லாயிரக்கணக்கான சுவடிகள் இருந்தன. தென்தமிழ், வடமொழி,
தெலுங்கு, மகாராஷ்டிரம் முதலிய பாஷைகளில் உள்ள சுவடிகள் அங்கே
உண்டு. சங்கிதம், பரதசாஸ்திரம், வைத்தியம், சோதிடம், கஜ சாஸ்திரம்,
அசுவ சாஸ்திரம், முதலிய பலவகைக் கலைக்குரிய நூற்சுவடிகளும் இருந்தன.
அந்தந்த வகையில் தேர்ச்சிபெற்ற புலவர்களைக்கொண்டு அந்நூல்களை
வருவித்து சரபோஜி மன்னர் தொகுத்து வைத்தார். அப்புத்தக சாலையில்
தமிழ் நூல்கள் பல சேகரிக்கப்பட்டதற்குக் காரணமான ஒரு நிகழ்ச்சியை
நான் சிலர் சொல்லக்கேட்டிருக்கிறேன்.
அது வருமாறு:
சரபோஜி மன்னர் ஒருமுறை காசி யாத்திரை சென்றார். அப்பொழுது
கல்கத்தா நகரத்தில் இருந்த ராஜப்பிரதிநிதியை அவர் காண எண்ணினார்.
அவரைப் பார்க்கவேண்டியதற்குரிய அனுமதியை முன்னரே பெற்று ஏற்ற
கையுறைகளுடன் கண்டார்.
அந்த ராஜப்பிரதிநிதி தமிழ்நாட்டிலுள்ள ஓர் அரசர் தம்மைப் பார்க்க
வருவதை அறிந்து தமிழ்நாட்டின் சிறப்புகளை விசாரித்து வைத்திருந்தார். அவர்
திருக்குறளின் ஆங்கில மொழி பெயர்ப்பைப் படித்து இன்புற்றவர். அது
தமிழ்நாட்டில் உண்டான சிறந்த நூலாதலின் தமிழ் மூல நூலைப் பற்றி
சரபோஜி அரசரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தார்.
சரபோஜியும் ராஜப்பிரதிநிதியும் வழக்கம்போல ஒருவர்க்கொருவர் செலுத்தவேண்டிய
மரியாதைகளைச் செலுத்திவிட்டு, பிறகு சம்பாஷணை செய்தனர்.
அப்பொழுது ராஜப்பிரதிநிதி தஞ்சைஅரசரைப் பார்த்து, "தமிழ்நாட்டில்
உண்டான திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பை நான் படித்து
இன்புற்றதுண்டு. அதன் தமிழ் மூலத்தைப் பற்றி கேட்கவேண்டுமென்ற ஆவல்
எனக்கு இருக்கிறது. ஆதலின் சில செய்யுட்களைச் சொல்லவேண்டும்", என்றார்.
அரசர் அதுகாறும் தமிழின்பால் சில புத்தகங்கள் அடங்கிய ஒரு சிறிய
புத்தகசாலை இருப்பதை மட்டும் அறிந்திருந்தனர். பிரயாண காலத்திலும் வடமொழி,
மகாராஷ்டிரம் முதலிய பாஷைகளில் தேர்ச்சி பெற்ற வித்துவான்களையே உடன்
வைத்திருந்தார். அவருடைய தாய்பாஷை மகாராஷ்டிரம் ஆதலின், திருக்குறளைப்
பற்றி அந்தச் சமயத்தில் தாமாகவேனும், அருகிலுள்ள வித்துவான்களின்
வாயிலாகவேனும் அறிந்து சொல்லும் நிலையில் அவர் இல்லை. இன்னது
செய்வது என்று அவருக்கு முதலில் தோன்றவில்லை.
மிகவும் கூரிய அறிவுடையவர் ஆதலின், அரசர் அப்பால் ராஜப்பிரதிநிதியை
நோக்கி, "என்னுடைய புத்தகசாலையில் இதைப்போல ஆயிரக்கணக்கான
தமிழ் நூல்கள் இருக்கின்றன. ஆனால் எல்லாவற்றையும் நான் தெரிந்து வைப்பது
முடியாத காரியம். தாங்கள் உத்தரவு கொடுத்தால் நான் ஊர் போய்ச் சேர்ந்தவுடன்
அந்தப் புத்தகத்தை அனுப்புகிறேன்", என்றார்.
ராஜப்பிரதிநிதி, "இதைப்போல எவ்வளவு தமிழ்ப்புத்தகங்கள்
இருக்கின்றன?" என்று கேட்டார்.
"எவ்வளவோ இருக்கின்றன. ஊர் போனவுடன் அவற்றின்
நாமாவளியையும் அனுப்புகிறேன்", என்றார் அரசர்.
ராஜப்பிரதிநிதி, "அங்ஙனமே செய்யலாம்", என்று விடைகொடுத்து
அனுப்பினார்.