From jaybee@... Sat Feb 23 07:44:03 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 23 Feb 2002 15:43:52 -0000
Received: (qmail 54981 invoked from network); 23 Feb 2002 15:43:52 -0000
Received: from unknown (216.115.97.171) by m6.grp.snv.yahoo.com with QMQP; 23 Feb 2002 15:43:52 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 23 Feb 2002 15:43:52 -0000
Received: from user (sp-103-252.tm.net.my [210.186.103.252]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GRZ0049CT115T@...> for agathiyar@yahoogroups.com; Sat, 23 Feb 2002 23:43:51 +0800 (SGT)
Date: Sat, 23 Feb 2002 23:45:45 +0800
Subject: Thamilzh Thaaththaa Vaaram-#10
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020223234545.0073c790@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16132
தாம் அரசராக உள்ள நாட்டுக்கு உரிய மொழியில் கவனம்
செலுத்தாதிருந்தமை ஒரு பெருங்குறை என்பது அதன் பின்னரே
சரபோஜி அரசர் மனதில் பட்டது. இனி அங்ஙனம் இருத்தல் கூடாது.
தமிழ்ச்சுவடிகளைத் தொகுத்து தமிழ்ப் புலவர்களையும் ஆதரித்து வரவேண்டும்
என்ற உறுதியை அவர் மேற்கொண்டார். ஆதலின் தஞ்சாவூர் சேர்ந்தவுடன்
எங்கெங்கே தமிழ்ப்புலவர்கள் உள்ளார்கள் என்பதை அறிய அவர்
தலைப்பட்டனர்.
தமிழ் ஏட்டுச்சுவடிகளையும் விலை கொடுத்து வாங்கி வாங்கி
தொகுத்தார். அப்பொழுது ஒவ்வொரு நூலிலும் பல பிரதிகள் கிடைத்தன.
திருக்குறளில் எத்தனையோ சுவடிகள் வந்து குவிந்தன.
தமிழ் வித்துவான்களுடைய பரம்பரையில் பிறந்தவர்கள் பலர்,
தங்கள் முன்னோர்கள் சேர்த்துவைத்திருந்த சுவடிகளைப் பயன்படுத்தும்வகை
அறியாமல் இருந்தனர். அவை இடத்தை அடைத்துக்கிடப்பது அவர்களுக்கு
வெறுப்பைத் தந்தது. அதனால் பலர் பதினெட்டாம் பெருக்கில் காவேரி
ஆற்றிலே சுவடிகளை விட்டும், அவற்றை நெய்யில் தோய்த்து விதிப்படி
ஆகுதிப் பண்ணியும் அழித்துவந்தனர். தங்கள் வீட்டில் உள்ள சுவடிக்
குவியல்களை வேறு வகையில் குறைத்து வந்தனர்.
அத்தகைய சமயத்தில் சரபோஜி அரசர் செய்த முயற்சிகளால்
அச்சுவடிகளுக்கு மதிப்பும் உயிரும் உண்டாக ஆரம்பித்தன. தங்கள் வீட்டில்
சுமையாகக் கிடந்த சுவடிகளுக்கு விலை கிடைத்ததென்றால் யார் விடுவார்கள்?
பலர் பல சுவடிகளைக் கொடுத்து விலை பெற்றார்கள். அக்காலத்தில் ஒரு
சுவடியை ஏட்டில் எழுதவேண்டுமானால், நூலின் அளவுக்கு ஏற்றபடி ஒரு
குறிப்பிட்ட கூலி உண்டு. தஞ்சைப் புத்தகசாலைக்கு அரசர் புத்தகங்கள்
வாங்குகிறார் என்று தெரிந்தவுடன் அவற்றின் விலைகள் ஏறின. நான்கு
ரூபாய் விலை மதிப்புள்ள புத்தகம், நாற்பது ரூபாய்க்கு விற்கப்பட்டது.
தமிழ்ப் புத்தகங்களை வாங்கியதோடு அன்றி, அவற்றிற்கு ஏற்ப மற்ற
பாஷைகளிலுள்ள புத்தகங்கள் பலவற்றையும் அரசர் வாங்கி தொகுத்தார்.
இதனால் சரஸ்வதி மகால் ஒரு பெரிய புத்தகசாலையாயிற்று.
தமிழ் நூல்களைச் சேர்ப்பதற்கும் அவற்றின் சம்பந்தமான காரியங்களைக்
கவனிப்பதற்கும் சில வித்துவான்களையும் அரசர் நியமித்தனர். அங்ஙனம்
நியமிக்கப்பட்டவர்கள் கோடீச்சுரக்கோவை முதலிய நூல்களை இயற்றிய
கொட்டையூர் ஸ்ரீ சிவக்கொழுந்து தேசிகர், காரைக்குறிச்சி வேலாயுத
உபாத்தியாயர், திருவெங்கடாத்தா பிள்ளை, சுப்பராயக் கவிராயர்,
வெங்கடாசலம் பிள்ளை முதலியோர் ஆவர்.
தாம் வாக்களித்தபடியே சரபோஜி அரசர் திருக்குறள் பிரதிகளையும்
தமிழ்நூல் பெயர்களையும் ராஜப்பிரதிநிதிக்கு அனுப்பி மகிழ்வித்தார்.
அந்தக் காலத்தில் தமிழ் வித்துவான்கள் அல்லாத சிலர் ஏட்டுப்பிரதிகளை
ஜாப்தா பண்ணிவைத்திருந்தனர். அதனை நான் பிற்காலத்தில் பார்த்ததுண்டு.
'சிவமயம் நாலடியார்', 'கணபதி துணை நாலடியார்', 'என்றும் நன்றாகக்
குரு வாழ்க குருவே துணை நாலடியார்' என்றும் புத்தகங்களின் பெயர்கள்
எழுதப்பட்டிருந்தன. அதைப் பார்த்த சாதாரண ஜனங்களும் தமிழறிவு இல்லாத
வேறு பலரும் "இத்தனை நாலடியாரா? இவ்வளவையும் எப்படி வித்துவான்கள்
படிக்கிறார்கள்?" என்று ஆச்சாரியமுற்றார்கள். ஏட்டில் எழுதுபவர்கள் தங்கள்
தங்கள் மதக்கொள்கைக்குத் தக்கபடி 'கணபதி துணை' என்றும் 'சிவமயம்',
'ஜினாயநம' என்றும் பிறவாறும் முதலில் எழுதிவிட்டு நூற்பெயரை
எழுதியிருப்பார்கள். இடையே முற்றுப்புள்ளி முதலிய குறியீடுகள் இரா.
ஆதலின் அவற்றைக் கண்டு ஜாப்தா செய்தவர்கள் தமிழறிவு இல்லாமையால்
அவற்றைப் புத்தகப்பெயர்களாக எண்ணிச்சேர்த்து எழுதிவிட்டார்கள்.
பின்னர் தஞ்சையில் நீதிபதியாக இருந்தவரும் வடமொழி
தென்மொழிகளில் பயிற்சி உடையவருமாகிய பர்னல் துரை என்பவர்
இந்த ஜாப்தாவின் விசித்திர அமைப்பை அறிந்து வியப்பும் வருத்தமும்
அடைந்தார். அவர் தக்க வித்துவான்களைக் கொண்டு ஒழுங்கான ஜாப்தா
ஒன்றை எழுதச்செய்தார்.
சில ஏட்டுச்சுவடிகளை காகிதத்தில் பிரதிபண்ணச் செய்துவைத்தார்.
அங்ஙனம் செய்வித்த பிரதிகளைத் தம் நாட்டுக்குச் செல்லுகையின் உடன்
கொண்டு சென்றார்.
சரபோஜி அரசர் காலத்துக்குப் பின்பும் பர்னல் துரை வந்ததற்கும்
முன்பும் ஆகிய காலத்தில் அப்புத்தக்சாலையில் உள்ள நூல்களைப் பலவற்றை
பலர் இரவலாக வாங்கிச்சென்று திருப்பிக்கொடாமலேயே இருந்துவிட்டனர்.
அங்ஙனம் போன நூல்கள் பல. பர்னல் துரையின் கருத்து இதன்பால்
செலுத்தப்பட்ட்ட பிறகே, இத்தகைய குறைபாடு நீங்கி ஒழுங்கு ஏற்பட்டது.
இன்னும் பல அருமையான ஏட்டுச்சுவடிகள் சரஸ்வதி மகாலில்
காணப்படுகின்றன.