From jaybee@... Sat Feb 23 08:29:44 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 23 Feb 2002 16:29:43 -0000
Received: (qmail 91534 invoked from network); 23 Feb 2002 16:29:43 -0000
Received: from unknown (216.115.97.167) by m8.grp.snv.yahoo.com with QMQP; 23 Feb 2002 16:29:43 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 23 Feb 2002 16:29:43 -0000
Received: from user (sp-103-252.tm.net.my [210.186.103.252]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GRZ004DFV5BF5@...> for agathiyar@yahoogroups.com; Sun, 24 Feb 2002 00:29:37 +0800 (SGT)
Date: Sun, 24 Feb 2002 00:31:32 +0800
Subject: Aanaal UuRukaayE uNavaaginaal....?
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020224003132.007122b4@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16137


அன்பர்களே,

இந்த இடத்தில் சிறிது கவன ஈர்ப்புச் செய்யவேண்டியுள்ளது.
உங்களில் மிக நல்ல எழுத்தாளுமை படைத்தவர்கள் இருக்கின்றீர்கள்.
மின்னஞ்சல்/மடற்குழு என்பது புதியதோர் ஊடகம். இதில்
உங்கள் திறனைக் காட்டி தமிழ் இலக்கியத்துறையில் புதிய பாதை
போடுவீர்கள் என்று பலரும் எதிர்பார்ப்பது இயல்பானதொன்று.
ஆனாலும் இப்போதெல்லாம் நிறைய பேட்டை பாஷை
புழங்குகிறது. நடைமுறைத் தமிழோ செட்டிநாட்டுத்தமிழோ அல்லது
கொங்குநாட்டுத் தமிழோ சலிப்புத் தட்டுவதில்லை. ஆனால் இந்த
பேட்டை மொழி அதிகமாகிப் போனால் படிப்பதற்கு ஒரு மாதிரியாக
இருக்கிறது. ஹாஸ்யமாக எழுதவேண்டியதுதான். நிறைய எழுதலாம்.
ஆனால் அளவுக்கு மீறிய பேட்டைத் தமிழ், ஹாஸ்ய உணர்ச்சியைத் தராது.
சாப்பாட்டில் ஊறுகாய் சேர்வது உணவை இன்னும் ருசியாக்கும்.
பசியைத் தூண்டிவிடும். செரிமானத்தையும் கூட்டுவிக்கும்.
ஆனால் ஊறுகாயே உணவாகினால்....?

அன்புடன்

ஜெயபாரதி

=======================================