From jaybee555@... Sat Feb 23 08:49:21 2002
Return-Path: X-Sender: jaybee555@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 23 Feb 2002 16:49:21 -0000
Received: (qmail 37220 invoked from network); 23 Feb 2002 16:49:20 -0000
Received: from unknown (216.115.97.167) by m2.grp.snv.yahoo.com with QMQP; 23 Feb 2002 16:49:19 -0000
Received: from unknown (HELO smtp018.mail.yahoo.com) (216.136.174.115) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 23 Feb 2002 16:49:19 -0000
Received: from jaybee555 (AUTH poptime) at unknown (HELO user) (210.186.103.252) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 23 Feb 2002 16:49:16 -0000
Message-Id: <3.0.3.32.20020224005104.0171a2ac@...>
X-Sender: jaybee555@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Sun, 24 Feb 2002 00:51:04 +0800
To: agathiyar@yahoogroups.com
Subject: Adagil SankaraabaraNam - Thamilzh Thaaththaa -#11
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=26960409
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16139
சங்கராபரணம் நரஸையர்
சங்கராபரணம் நரஸைய்யர் என்ற சங்கீத வித்துவான் கும்பகோணத்தில்
வசித்து வந்தார். ஒரு சமயம் அவர் கபிஸ்தலம் சென்று அக்காலத்தில் இருந்த
ராமபத்திர மூப்பனார்(கருப்பையா மூப்பனாரின் மூதாதையார்) என்பவரிடத்தில்
தமக்குப் பணம் கடனாக வேண்டுமென்று சொல்லி அதற்கு ஈடாக ஓர்
ஆபரணத்தைத் தாம் வைப்பதாகக் கூறினார். மூப்பனார் ஆபரணத்தைக் காட்டுமாறு
சொல்லியபோது,
"சங்கராபரணத்தை நான் அடகு வைக்கிறேன். இந்தக் கடனைத்
திருப்பிக்கொடுக்கும்வரையில் நான் சங்கராபரணத்தை எங்கும் பாடமாட்டேன்",
என்று கூறிப் பணம் வாங்கிக்கொண்டார்.
சில தினங்களுக்குப்பின் கும்பகோணத்திலிருந்த தனிகரான
ஸ்ரீவாலிஸ் அப்புராயர் வீட்டில் கல்யாணத்துக்குச் சங்கீத வினிகைக்காக வந்த
அவரைப் பலரும் சங்கராபரணம் பாடவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
அவர் தாம் அதனை அடகு வைத்திருப்பதாகச்சொன்னார். உடனே அப்புராயர்
தக்க பொருளுதவி செய்து அந்தக் கடனிலிருந்து அவரை மீட்டுச் சங்கராபரண
ராகத்தைப் பாடச் சொல்லிக்கேட்டு ஆனந்தமடைந்தார்.
தமிழ்த் தாத்தா
'கும்பகோணம்'
நினைவு மஞ்சரி #2
_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com