From lsrinivas@... Sat Feb 23 10:39:11 2002
Return-Path:
X-Sender: lsrinivas@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 23 Feb 2002 18:39:11 -0000
Received: (qmail 31688 invoked from network); 23 Feb 2002 18:39:10 -0000
Received: from unknown (216.115.97.172) by m10.grp.snv.yahoo.com with QMQP; 23 Feb 2002 18:39:10 -0000
Received: from unknown (HELO n25.groups.yahoo.com) (216.115.96.75) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 23 Feb 2002 18:39:10 -0000
Received: from [216.115.96.142] by n25.groups.yahoo.com with NNFMP; 23 Feb 2002 18:37:12 -0000
Date: Sat, 23 Feb 2002 18:39:10 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: bEjAr (Re: idhu grantham check)
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1444
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "lsrinivas"
X-Originating-IP: 152.163.194.184
X-Yahoo-Group-Post: member; u=6032604
X-Yahoo-Profile: lsrinivas
X-Yahoo-Message-Num: 16141

> அன்பு லட்சுமிசீனிவாசு அய்யா,
>
>
> பேஜார் கன்னடத்தில்
> இருந்து உருது ஆகியிருக்கும்.

இந்த கூற்றிற்கு அறிவியல் முறை அடிப்படை? தமிழ் அகராதியை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை
என்றால் நீங்கள் தான் 'பேஜாரு' என்ற சொல் உருதுக்கு எவ்வாறு போயிற்று என்றும் அங்கிருந்து
பாரசீகத்திற்கு எவ்வாறு போயிற்று என்றும் நிரூபிக்க வேண்டும் - இது என்னுடைய தாழ்மையான
கருத்து.

தமிழ் அகராதியில் உள்ள மேற்கோள்களை கவனித்தால் ஒன்று தெரிகிறது. திருவாசகத்தில் ஒரு இ
டத்தில் 'வேசறுதல்' என்ற சொல் 'வருந்துதல்' என்று பொருள்படும்படி வருகிறது. இதை விட்டால்
பழந்தமிழ் பாடல்களிலோ, சாசனத்தமிழிலோ இந்த வார்த்தையின் சுவடே இல்லை என்றே
சொல்லலாம். இதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். மேலும், மனச்சோர்வு, துக்கம் போன்ற
பொருள் இந்த சொல்லிற்கு எங்கிருந்து வந்தன என்றும் பல கேள்விகள் எழுகின்றன. சொல்லமைதி
நோக்கிலும் சில கேள்விகள் வருகின்றன: வேசறு - பேஜாரு எப்படி ஆயிற்று? அதாவது, மெல்லினம்
(வ) இடையினம் (ப, அதுவும் 'b") ஆயிற்று, வல்லினம் (ற) இடையினம் (ர) ஆயிற்று, ச - ஜ
ஆயிற்று. இந்த மாறுதல்களுக்கெல்லாம் மொழியியற்படி விளக்கம் தேவை.

சுருக்கமாக சொன்னால், பாரசீகத்தில் திராவிடமொழி இரவல் சொற்கள் இருக்கலாம் என்பதை நான்
மறுக்கவில்லை. ஆனால் தமிழ் அகராதி என்பது ஒரு அத்தாரிட்டி. அதை மோதினால் burden of
proof நம் தலையில் வந்து விழும் :-)

அன்பர் கணேசனை படாத பாடு படுத்தி விட்டேன். இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்,

Lakshmi Srinivas