From jaybee@... Sat Feb 23 15:57:17 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 23 Feb 2002 23:57:17 -0000
Received: (qmail 89389 invoked from network); 23 Feb 2002 23:57:17 -0000
Received: from unknown (216.115.97.172) by m12.grp.snv.yahoo.com with QMQP; 23 Feb 2002 23:57:17 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 23 Feb 2002 23:57:16 -0000
Received: from user (sp-103-44.tm.net.my [210.186.103.44]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GS000J6UFV9XC@...> for agathiyar@yahoogroups.com; Sun, 24 Feb 2002 07:57:10 +0800 (SGT)
Date: Sun, 24 Feb 2002 07:59:07 +0800
Subject: A qualifying explanation - Re: [agathiyar] Aanaal UuRukaayE uNavaaginaal....?
In-reply-to: <3.0.3.32.20020224003132.007122b4@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020224075907.00714fa0@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16152
அன்பர்களே,
பேட்டை மொழியை ஆராய்தலையோ, அந்த மொழியின்
வழக்குகளையோ, அதில் வழங்கும் சொற்களின் மூலத்தையோ
ஆராய்வதில் தடையேதும் இல்லை.
அதிலேயே மடல்களை அடிக்கடி எழுதுவதை மட்டுமே
குறிப்பிட்டேன்.
'யின்னாடா யிது பேஜாரா கீது? மொதல்ல ஒண்ண
எய்திக்கினு, அப்பாலே ஜக்கரிச்சு ஜகா வாங்குறானே யிந்த ஆளு'
என்று நினைத்து விடாதீர்கள்.
நல்ல தமிழிலேயே அச்சொற்களை ஆராயலாம்தானே.
அன்புடன்
ஜெயபாரதி
At 12:31 AM 2/24/02 +0800, you wrote:
>
>அன்பர்களே,
>
> இந்த இடத்தில் சிறிது கவன ஈர்ப்புச் செய்யவேண்டியுள்ளது.
>உங்களில் மிக நல்ல எழுத்தாளுமை படைத்தவர்கள் இருக்கின்றீர்கள்.
> மின்னஞ்சல்/மடற்குழு என்பது புதியதோர் ஊடகம். இதில்
>உங்கள் திறனைக் காட்டி தமிழ் இலக்கியத்துறையில் புதிய பாதை
>போடுவீர்கள் என்று பலரும் எதிர்பார்ப்பது இயல்பானதொன்று.
> ஆனாலும் இப்போதெல்லாம் நிறைய பேட்டை பாஷை
>புழங்குகிறது. நடைமுறைத் தமிழோ செட்டிநாட்டுத்தமிழோ அல்லது
>கொங்குநாட்டுத் தமிழோ சலிப்புத் தட்டுவதில்லை. ஆனால் இந்த
>பேட்டை மொழி அதிகமாகிப் போனால் படிப்பதற்கு ஒரு மாதிரியாக
>இருக்கிறது. ஹாஸ்யமாக எழுதவேண்டியதுதான். நிறைய எழுதலாம்.
>ஆனால் அளவுக்கு மீறிய பேட்டைத் தமிழ், ஹாஸ்ய உணர்ச்சியைத் தராது.
> சாப்பாட்டில் ஊறுகாய் சேர்வது உணவை இன்னும் ருசியாக்கும்.
>பசியைத் தூண்டிவிடும். செரிமானத்தையும் கூட்டுவிக்கும்.
> ஆனால் ஊறுகாயே உணவாகினால்....?
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
>=======================================
>