From naga ganesan@... Sat Feb 23 15:58:49 2002
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 23 Feb 2002 23:58:49 -0000
Received: (qmail 72105 invoked from network); 23 Feb 2002 23:58:49 -0000
Received: from unknown (216.115.97.167) by m9.grp.snv.yahoo.com with QMQP; 23 Feb 2002 23:58:49 -0000
Received: from unknown (HELO n2.groups.yahoo.com) (216.115.96.52) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 23 Feb 2002 23:58:49 -0000
Received: from [216.115.96.119] by n2.groups.yahoo.com with NNFMP; 23 Feb 2002 23:58:48 -0000
Date: Sat, 23 Feb 2002 23:58:48 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: bEjAr: collAyvu
Message-ID: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1043
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 209.223.28.40
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16153
தமிழுலக அன்பர்காள்,
வேசறுதல் என்னும் வினைச்சொல்லை
வேசறவு போன்ற தமிழ் இலக்கிய ஆளுமைகளுக்கு
அடிப்படை என்கிறது DED 4544.
கன்னட `பேஜாரு, உருது பேசார் போன்றன
தொல்திரவிடக் கூறுகளாக இருக்கும்.
வேசறவு வேசறை என்றும் வரும்.
ஒப்பு: தொந்தரை/தொந்தரவு, புலை/புலவு,
களை/களவு, வளை/வளவு . . .
மனவலி, உளைச்சல், சலிப்பு, மனவருத்தம்
என்ற சொல்லில் வலி/வருத்தம் இவற்றின்
வேர் வல்- என்பதாம். வலி = இழுத்தல்.
வண்டியை வலிக்கிறான் என்பது இழுக்கிறான்
என்ற பொருளிலாம். வலி = pain, தசையை
இழுப்பதால். வடமொழி பலம் தமிழிலிருந்து
சென்ற வலம்/வல்லமை என்பர் அறிஞர்.
கண்ணறை, மூக்கறை, வாயறை, காதறை
என்பது ஒரு உறுப்பை இழப்பது.
அதுபோலவே, வேசறை என்பது
வல்லமை/வலியை இழப்பது.
வேசறை வேச்(உ)+ அறை என்று பிரியும்.
விசை = வலி(மை) > வேச்.
வேசறை = விசையை இழப்பது என்ற
பொருள் எனத் தோற்றுகிறது.
வெசை/வேச்- இந்த மாதிரி தொடங்கும்
வலி(மை) தொடர்பான சொற்கள் உளவோ?
(என்று பார்க்கணும்).
என் ஈடு ஒரு சிந்தனையே. முன்னிடுகை
தவறெனில் தெருட்டுக.