From arull@... Sat Feb 23 19:44:26 2002
Return-Path:
X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 24 Feb 2002 03:44:26 -0000
Received: (qmail 16251 invoked from network); 24 Feb 2002 03:44:26 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 24 Feb 2002 03:44:26 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 24 Feb 2002 03:44:26 -0000
Received: from tm.net.my (kmr-187-72.tm.net.my [202.188.187.72]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GS000LAVQE0CB@...> for agathiyar@yahoogroups.com; Sun, 24 Feb 2002 11:44:25 +0800 (SGT)
Date: Sun, 24 Feb 2002 11:41:57 +0800
Subject: திருமுறைத் தியானம்
To: "agathiyar@yahoogroups.com"
Message-id: <3C786105.267D09DB@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: 8BIT
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார்
X-Yahoo-Group-Post: member; u=21400202
X-Yahoo-Message-Num: 16155

திருச்சிற்றம்பலம்

திருமுறைத்தியானம்

ஸ்ரீமடம் ஆஸ்தான வித்வான் புலவர்.
பு.மா.ஜய செந்தில்நாதன்

பிப்ரவரி 23

திருஞானசம்பந்தர்

சேய்ஞலூர்
(சேங்கனூர்)

சத்தியகிரீஸ்வரர் - சகிதேவியம்மை

"சேய்ஞலூர் உறையும் செல்வா போற்றி"

நூலடைந்த கொள்கையாலே நுன் அடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர் கேட்க நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழல்மேவி அருமறை சொன்னது என்னே
சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே.

செல்கள் துள்ளிப் பாய்கின்ற நீர்வளமிக்க
வயல்களையுடைய திருச்சேய்ஞலூரில் எழுந்தருளியுள்ள
பெருமானே!

அளவற்ற ஞானநூல்களைக் கற்றும், உன் திருவடி
சேர்வதற்கு இடையூறாக எழும் மயக்கத்தால் கட்டுண்டு,
தெளிவற்ற சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் கல்லால
மரத்தின் நிழலிலிருந்து, குருமூர்த்தமாகி, மோனத்தால் -
சின்முத்திரை காட்டி - உபதேசித்த திறத்தை நாங்கள்
எவ்வாறு அறிவோம்? நீயே உணர்த்தியருள்வாயாக!

ஞானத்தால் உனை - நாங்கள் தொழ

ஞானத்தாய் - நல்லறிவைத் தா

திருச்சிற்றம்பலம்

ஓதுவார்
பினாங்கு.