From harikris@... Sun Feb 24 09:35:51 2002
Return-Path: X-Sender: harikris@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 24 Feb 2002 17:35:51 -0000
Received: (qmail 99699 invoked from network); 24 Feb 2002 17:35:51 -0000
Received: from unknown (216.115.97.172) by m11.grp.snv.yahoo.com with QMQP; 24 Feb 2002 17:35:51 -0000
Received: from unknown (HELO webmail1.maa.sify.net) (202.144.76.17) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 24 Feb 2002 17:35:49 -0000
Received: (qmail 18133 invoked from network); 24 Feb 2002 22:50:03 +0530
Received: from unknown (HELO prashanth) (210.214.128.48) by 202.144.76.17 with SMTP; 24 Feb 2002 22:50:03 +0530
Message-ID: <005701c1bd5a$2500cbc0$3080d6d2@prashanth>
To: Subject: Thamilzh Thaaththaa Vaaram - thirumaNam 1
Date: Sun, 24 Feb 2002 22:09:38 +0530
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2314.1300
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
From: "Hari Krishnan" X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Profile: harikrishnan61
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 16177
தமிழ்நாட்டில் பெண்களின் நிலையைக் குறித்து விவாதித்திருக்கிறோம். இன்றைய சூழல் அக்காலத்துச் சூழலின்றும் எவ்வளவு தூரம் மாறுபட்டது என்பதற்கு ஒரு சான்று உவேசா அவர்கள் செய்திருக்கும் இந்தப் பதிவு. தன்னுடைய திருமணத்தைப் பற்றிச் சொல்கிறார். (என் சரித்திரம்) உவேசா அவர்களுக்கு 16.6.1868 அன்று திருமணம் நடந்தது. 134 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. நூறு ஆண்டுகளுக்குள் நம் கலாசாரம் எத்தகைய மாறுதல்களுக்கு உட்பட்டிருக்கிறது என்பதையும், வரதட்சிணை போன்ற விஷயங்கள் எப்படி உருமாறியிருக்கின்றன போன்றவற்றையும் ஒத்திட்டுப் பார்க்க ஒருஅருமையான குறிப்பு.
கல்யாணக் கவலை
வர வர எனது கல்வி அபிவிருத்தியடைந்து வருவதை என் தந்தையார் கவனித்து வந்தார். என்னைப் பற்றிய ஞாபகமே அவருக்கு நாளுக்கு நாள் அதிகமாயிற்று. என் கல்வியைப் பற்றிய முயற்சிகளைச் செய்துகொண்டு வந்த அவருக்கு என் விவாகத்தைப் பற்றிய எண்ணமும் உண்டாயிற்று. பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் இளம் பருவத்திலேயே கல்யாணம் செய்துவிடும் வழக்கம் அக்காலத்தில் அதிகமாகப் பரவியிருந்தது. ஒரு குறிப்பிட்ட பிராயத்திற்குள் கல்யாணமாகாவிட்டால் பெரிய அகெளரவமென்று கருதி வந்தார்கள்.
எனக்குப் பதின்மூன்றாம் பிராயம் நடந்தபோதே என் தந்தையாருக்கு என் விவாகத்தைப் பற்றிய கவலை உண்டாகி விட்டது. அக்காலத்தில் பெண்ணுக்காகப் பிள்ளையைத் தேடும் முயற்சி பெரும்பாலும் இல்லை; பிள்ளைக்காகப் பெண்ணைத் தேடும் முயற்சியே இருந்தது. "பெண்ணுக்கு வயசாகிவிட்டதே" என்ற கவலை பெற்றோர்களுக்கு இருப்பதில்லை; "எங்கே இருந்தாவது ஒருவன் வந்து கல்யாணம் பண்ணிக்கொண்டு போவான்" என்ற தைரியம் இருந்தது. பிள்ளையைப் பெற்றவர்களோ தங்கள் பிள்ளைகளுக்குத் தக்க பருவம் வருவதற்கு முன்பே நல்ல இடத்தில் பெண் தேடி விவாகம் செய்விக்கவேண்டுமென்ற கவலையுடன் இருப்பார்கள்.
இத்தகைய கால நிலையில் என் தந்தையாரும் எனக்கு ஏற்ற பெண்ணைத் தேடத் தொடங்கினர். கல்யாணத்தில் பிள்ளை வீட்டினருக்கே செலவு அதிகம். குன்னத்தில் பெற்ற ஆதரவினால் ஊக்கமடைந்த என் தந்தையாருக்கு முன்பெல்லாம் குடும்பக் கடனைஅடைக்க வேண்டுமென்ற நோக்கம் இருந்து வந்தது. நாளடைவில் அந்த நோக்கம் மாறி, "நிலத்தையேனும் விற்றுக் கடனை அடைத்து விடலாம்; இவனுக்கு எப்படியாவது கல்யாணத்தைப் பண்ணி வைத்துவிடவேண்டும்"என்ற எண்ணமே வலியுற்றது. ஒருபால் பெண்த் தேடும் முயற்சியும், ஒருபால் என் கல்யாணத்திற்குரிய பொருளைத் தேடும் முயற்சியும் நடைபெற்று வந்தன. இந்த முயற்சிகளில் என் சிறிய தந்தையாரும் சேர்ந்து கொண்டனர்.
======================
உவேசா அவர்கள் இதனை எழுதிய காலத்திலேயே இந்த வழக்கங்கள் மாறி விட்டதை 'அந்தக் காலத்தில்' என்று அவர் அவ்வப்போது சொல்வதை வைத்து உணர்ந்துகொள்ளலாம்.
தொடர்கிறது.
[Non-text portions of this message have been removed]