From harikris@... Sun Feb 24 09:36:03 2002
Return-Path: X-Sender: harikris@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 24 Feb 2002 17:36:03 -0000
Received: (qmail 92871 invoked from network); 24 Feb 2002 17:36:03 -0000
Received: from unknown (216.115.97.167) by m5.grp.snv.yahoo.com with QMQP; 24 Feb 2002 17:36:03 -0000
Received: from unknown (HELO webmail1.maa.sify.net) (202.144.76.17) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 24 Feb 2002 17:36:01 -0000
Received: (qmail 18166 invoked from network); 24 Feb 2002 22:50:10 +0530
Received: from unknown (HELO prashanth) (210.214.128.48) by 202.144.76.17 with SMTP; 24 Feb 2002 22:50:10 +0530
Message-ID: <005901c1bd5a$298e9140$3080d6d2@prashanth>
To: Subject: Thamilzh Thaaththaa Vaaram - thirumaNam 2
Date: Sun, 24 Feb 2002 22:30:39 +0530
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2314.1300
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
From: "Hari Krishnan" X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Profile: harikrishnan61
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 16178
உவேசா அவர்களின் என் சரித்திரத்திலிருந்து....
என் கல்யாணம்
கல்யாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் மாளாபுரத்தில் நிகழ்ந்தன. பந்து fனங்கள் பல ஊர்களிலிருந்து வந்து கூடினர்.ரெயில் வண்டியின் வேகம், பS.ன் (bus-இன்)வேகம் முதலியவற்றைக் கண்டறியாத அந்நாட்களில் கல்யாண ஏற்பாடு விரைவில் நடைபெறாது; மெல்ல மெல்ல நடைபெறும். கல்யாணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே வேண்டிய காரியங்கள் ஆரம்பமாகிவிடும். ஒரு மாதத்துக் மேல் குடும்பம்கல்யாண முயற்சியில் ஈடுபட்டிருக்கும்.
இன்றும் அன்றும்
இக்காலத்திலோ எல்லாம் வேகம். முதல் நாள் கல்யாணம் நிச்சயமாவதும் மறுநாள்கல்யாணம் நடைபெறுவதும் மூன்றாம் நாள் கல்யாணம் நடைபெற்ற அடையாளமே மறைவதும் இந்த நாட்காட்சிகள். முகூர்த்த பத்திரிகையில் சம்பிரதாயத்திற்குக் கூட நான்கு நாள் முன்னதாக வரவேண்டுமென்று எழுதுவதில்லை. கல்யாணமே ஒரு நாளில் நிறைவேறும்போது விருந்தினர்கள் நான்கு நாள் வந்து தங்கி என்ன செய்வது?
அக்காலத்தில் ஒரு குடும்பத்தில் கல்யாணம் நடப்பதாயிருந்தால் ஒரு மாதத்துக் முன்பே சில பந்துக்கள் வந்து விடுவார்கள். ஒரு வாரத்துக்கு முன்பு பலர் வருவார்கள். வந்தவர்கள் தாங்கள் உபசாரம் பெறுவதில் கருத்துடையவர்களாக இருக்க மாட்டார்கள். தங்கள் தங்களால் இயன்ற உதவிகளைவலிந்து செய்வார்கள். பந்தற்கால் நடுவது, பந்தல் போடுவது, பந்தலை அலங்கரிப்பது முதல் கல்யாணம் ஆனபிறகு பந்தல் பிரிக்கும் வரையில் நடக்கும் காரியங்களில் ஊரினரும் கல்யாணத்திற்காக வந்தவர்களும் கலந்து உதவி புரிவார்கள். கல்யாண வீட்டின் அகலத்திற்குத் தெருவையடைத்துப் பந்தல் போடுவார்கள். பெண்மணிகள் சமையல் செய்தல், பரிமாறுதல், ஒருவரையொருவர் அலங்கரித்தல் முதலிய உதவிகளைச் செய்வார்கள். ஆதலின் வேலைகளைச் செய்வதற்காக வேறு மனிதர்களைத்தேடி அலைய வேண்டிய சிரமம் இராது. எல்லோரும் சேர்ந்து ஈடுபடுவதனால் எவரும், "எனக்கு உபசாரம் செய்யவில்லை" என்ற குறை கூற இடமிராது. ஆயினும் சம்பந்திகளுக்கிடையே மனSதாபம் நேர்வது எங்கும் இருந்தது. கல்யாணமென்றால் சம்பந்திச் சண்டையும் ஒரு நிகழ்ச்சியாக ஏற்பட்டு விட்டது.
கிராமத்தாருடைய ஒற்றுமையும் உபகார சிந்தையும் கல்யாணத்தைப் போன்ற விசே" காலங்களில் நன்றாக வெளிப்படும். பணச்செலவு இந்தக் காலத்திற் போல அவ்வளவு அதிகம் இராது. இக் காலத்தில் செலவுகளுக்குப் புதிய புதிய துறைகள் ஏற்பட்டிருக்கின்றன. உணவு வகைகளில் இப்போது நடைபெறும் செலவைக் கொண்டு அக்காலத்துக் கல்யாணங்கள் பலவற்றை நடத்தி விடலாம். கிராமங்களில் விளையும் காய்கறிகளும், பழவகைகளும் விருந்துக்குஅக்காலத்தில் உபயோகப்பட்டன. இப்போதோ இங்கிலீ? பெயரால் வழங்கும் காய்கறிகளும், ?ந்துSதானிப் பெயரால் வழங்கும் ப?ய வகைகளும் மேல் நாட்டிலிருந்து தகரப் பெட்டிகளில் அடைத்து வரும் பழங்களும் கல்யாண விருந்துக்கு இன்றியமையாத பொருள்களாகிவிட்டன. மற்ற வி"யங்களில் பல தேச ஒற்றுமை தெரியாவிட்டாலும் பணம் செலவிட்டு வாங்கும் பொருள்களில் பல நாடுகளும் சம்பந்தப்படுகின்றன.
===============
உவேசா அவர்களின் திருமணம் நடைபெற்ற ஆண்டு 1886. என் சரித்திரம் பதிப்பிக்கப்பட்டது 1933/34ஆம் ஆண்டுகளில். அதாவது இந்த மாறுதல்கள் ஐம்பதாண்டு காலத்துக்குள் நிகழ்ந்திருக்கின்றன....
தொடர்கிறது...
[Non-text portions of this message have been removed]