From harikris@... Sun Feb 24 09:36:11 2002
Return-Path:
X-Sender: harikris@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 24 Feb 2002 17:36:11 -0000
Received: (qmail 72127 invoked from network); 24 Feb 2002 17:36:11 -0000
Received: from unknown (216.115.97.171) by m12.grp.snv.yahoo.com with QMQP; 24 Feb 2002 17:36:11 -0000
Received: from unknown (HELO webmail1.maa.sify.net) (202.144.76.17) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 24 Feb 2002 17:36:10 -0000
Received: (qmail 18253 invoked from network); 24 Feb 2002 22:50:26 +0530
Received: from unknown (HELO prashanth) (210.214.128.48) by 202.144.76.17 with SMTP; 24 Feb 2002 22:50:26 +0530
Message-ID: <005e01c1bd5a$32ebb920$3080d6d2@prashanth>
To:
Subject: Thamilzh Thaaththaa Vaaram - thirumaNam 3
Date: Sun, 24 Feb 2002 23:07:09 +0530
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2314.1300
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
From: "Hari Krishnan"
X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Profile: harikrishnan61
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 16179

உவேசா அவர்களின் என் சரித்திரத்திலிருந்து....


ஊர்வலம் நடத்துவதில் எத்தனை செலவு! மோட்டார் வாகனத்தையே புஷ்ப வாகனமாக மாற்றி விடுகின்றனர்! சில மணி நேரம் புறத் தோற்றத்தை மாத்திரம் தரும் அந்த வாகனத்திற்கு எவ்வளவு அலங்காரங்கள்! எவ்வளவு பேருடைய உழைப்பு! கோவில்களில் உத்ஸவ மூர்த்திகளுக்குச் செய்யும் புஷ்பாலங்காரம் கல்யாணத்திற்கு செய்யப்படுகின்றது! அதற்கு மேலும் செய்கிறார்கள்.

இவ்வளவு செலவு செய்து நடைபெறும் கல்யாணத்தில் விருந்தினர்கள் வருவதும் போவதும் வெறும் சம்பிரதாயமாகிவிட்டன.கல்யாணம் எல்லாம் நிறைவேறிய பிறகு கணக்குப் பார்க்கும்போதுதான் வயிறு பகீரென்கிறது. சந்தோஷத்தை மேலும் மேலும் உண்டாக்க வேண்டிய கல்யாணமானதுசில இடங்களில் கண்ணை மூடிக்கொண்டு செய்யும் பணச் செலவு காரணமாகக் கடனையும் அதனால் துன்பங்களையும் விளைவிக்கின்றது. கல்யாணத்தாற் கஷ்டத்தை விலைக்கு வாங்கிக் கொண்ட குடும்பங்கள் இத்தமிழ் நாட்டில் எவ்வளவோ இருக்கின்றன.

அக்காலத்தில் சிலவகையான செலவுகள் குறைந்திருந்தன. முதல் நாள் நிச்சய தாம்பூலம் வழங்கப்பெறும். முதல்நாள் இரவு கல்யாணம் சொல்வதும், மாப்பிள்ளையயை அழைப்பதும் அவை காரணமாக நேரும் செலவுகளும் பெரும்பாலும் இல்லை. கல்யாணத்திலும் பந்தற் செலவு, @@பூரி தக்ஷணை@@, மேளம் முதலிய செலவுகளில் பிள்ளை வீட்டாரும் பெண்வீட்டாரும் பாதிப்பாதி ஏற்றுக் கொள்வார்கள். நான்காம் நாள் நடைபெறும் கிராமப் பிரதக்ஷணச் செலவு முழுவதும் பிள்ளை வீட்டாருடையது.

போஜனக் கிரமம்

காலையில் காப்பி என்பது அக்காலத்தினர் அறியாதது. துவரம் பருப்புப் பொங்கலும், பரங்கிக்காய் குழம்புமே காலை ஆகாரம். கருவடாம், அப்பளம், வற்றல்கள் இலை ஆகாரத்துக்குரிய வியஞ்சனங்கள். **சிலர் பழையதும் உண்பதுண்டு.** ஆண்டில் இளைய பெண்மணிகளும் அவற்றை உண்பார்கள். பிற்பகலில் இடைவேளைச் சிற்றுண்டி உண்ணும் வழக்கமும் அக்காலத்தில் இல்லை. குழந்ததைகள் பசித்தால் அன்னம் உண்பார்கள். மத்தியான விருந்துக்குப் பின் இராத்திரிப் போஜனந்தான். பன்னிரண்டு மணிக்குப் பிறகே பகற் போஜனம் நடைபெறும். பெரியவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய பூஜை முதலியவற்றை நிறைவேற்றிய பிறகே இலை போடுவார்கள். எல்லோரும் ஒருங்கே உண்பார்கள். இக்காலத்தைப் போல வந்தவர்கள் தங்கள் தங்கள் மனம் போனபடி எந்த நேரத்திலும் வருவதும் உள்ளே சென்று இலைபோடச் செய்து அதிகாரம் பண்ணுவதும் இல்லை. அப்பளம், ஆமவடை, போளி என்பவைகளே அக்காலத்துப் பக்ஷியங்கள்.

கல்யாணம் நடைபெறும் நான்கு நாட்களில்ஒவ்வொரு வேளையிலும் போஜனத்திற்குஊரிலுள்ள எல்லோரையும் அழைப்பார்கள். யாவரும் குறித்த நேரத்தில் வந்துவிடுவார்கள்.


====================

தாத்தா இந்நாளில் இருந்திருந்தால் என்ன சொல்வாரோ!

@@பூரி தக்ஷணை என்றால் என்ன?

** கல்யாணத்தன்று பழையது உண்ணும் பழக்கம்இருந்திருக்கிறது! போளி அப்போதே தலைகாட்டியாயிற்று. இட்டிலி, தோசை ஆகியவற்றைப் பற்றிய குறிப்பொன்றையும் காணோம். இட்டிலி திருமணத்தின் முக்கிய உணவு வகைகளிலொன்று. கட்டுசாதக் கூடை என்று திருமணம் முடிந்து கிளம்பும் போது இட்டிலியைத்தான் பெரும்பான்மையும் வைத்துக் கட்டுவார்கள். அதாவது என்னுடைய 'அந்தக் காலத்திலங்கோ'.


தொடர்கிறது...


[Non-text portions of this message have been removed]