From arull@... Sun Feb 24 15:01:38 2002
Return-Path:
X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 24 Feb 2002 23:01:37 -0000
Received: (qmail 32653 invoked from network); 24 Feb 2002 23:01:22 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 24 Feb 2002 23:01:22 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 24 Feb 2002 23:01:22 -0000
Received: from tm.net.my (kmr-184-190.tm.net.my [202.188.184.190]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GS200GCK7Y8X6@...> for agathiyar@yahoogroups.com; Mon, 25 Feb 2002 07:01:21 +0800 (SGT)
Date: Mon, 25 Feb 2002 06:58:53 +0800
Subject: திருமுறைத் தியானம்
To: "agathiyar@yahoogroups.com"
Message-id: <3C79702D.9B8F3895@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: 8BIT
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார்
X-Yahoo-Group-Post: member; u=21400202
X-Yahoo-Message-Num: 16188

திருச்சிற்றம்பலம்

திருமுறைத்தியானம்

ஸ்ரீமடம் ஆஸ்தான வித்வான் புலவர்.
பு.மா.ஜய செந்தில்நாதன்

பிப்ரவரி 25

திருநாவுக்கரசர்

இன்னம்பர்

(இன்னம்பூர்)

எழுத்தறிநாதர் - சுகந்த குந்தளாம்பிகை

"இன்னம்பர் ஈசநின் இனையடி போற்றி"

மன்னுமலைமகள் கையால் வருடின மாமறைகள்
சொன்னதுறை தொறும் தூப்பொருளாயின தூக்கமலத்(து)
அன்ன வடிவின அன்புடைத் தொண்டர்க்கு அமுது அரும்பி
இன்னல் களைவன இன்னம்பரான் தன் இணையடியே.

மலையரசன் மகளாக வந்தவதரித்த உமாதேவியின்
(பார்வதியின்) மெல்லிய திருக்கரங்களால் வருடப்
பெற்றனவும், வேதங்களால் புகழப்பெறும் சாரமாகத்
திகழ்வனவும், தாமரைமலர் போலும் மென்மையும் அழகும்
வாய்ந்தனவும், உள்ளன்போடு தொழும் தொண்டர்க்கு
அமுதமென விளங்கி அல்லல்களைப் போக்கும் பெருமை
வாய்ந்தனவும்,

இன்னம்பர்த் தலத்தில் எழுந்தருளியுள்ள எழுத்தறி
நாதப் பெருமானின் இணையிலாத் திருவடிகளேயாம்.

ஆதலின் மனமே! இணையடி பரவுக இன்னல்கள் தீரும்

இன்னம்பர்த் தலைவன் என்றும் துணையிருப்பான்.

திருச்சிற்றம்பலம்

ஓதுவார்
பினாங்கு.