From jaybee@... Sun Feb 24 16:10:04 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 25 Feb 2002 00:10:04 -0000
Received: (qmail 17567 invoked from network); 25 Feb 2002 00:09:49 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 25 Feb 2002 00:09:49 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 25 Feb 2002 00:09:44 -0000
Received: from user (sp-103-78.tm.net.my [210.186.103.78]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GS200H6EB44BX@...> for agathiyar@yahoogroups.com; Mon, 25 Feb 2002 08:09:43 +0800 (SGT)
Date: Mon, 25 Feb 2002 08:11:43 +0800
Subject: Re: [agathiyar] Thamilzh Thaaththaa Vaaram -#12
In-reply-to: <3.0.3.32.20020224233537.00707960@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020225081143.00736150@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16190


அன்பர்களே,

கீழ்க்கண்ட 'தடிகொண்ட ஐயனார்' கட்டுரை தமிழ்த்
தாத்தாவின் 'நல்லுரைக் கோவை' 3-ஆம் பாகத்தில் உள்ளது.
அதனைக் குறிப்பிட விடுபட்டுப்போயிற்று. <அர்த்தராத்திரியில்
கண்விழித்து டைப் அணித்தால் இப்படித்தான்>.

புதுக்கோட்டை திவான் சேஷையா சாஸ்திரிகள்
சம்பந்தமான சில மடல்கள் அகத்தியத்தில் ஏற்கனவே வந்திருக்கின்றன.

புதுக்கோட்டையில் உள்ள புதுக்குளத்தில்ரசம் வைத்த
சம்பவம் ஒன்று அந்த இழையில் இருக்கிறது. Indian Express,
அல்லது The Hindu-வில் சேஷைய சாஸ்திரிகள் பற்றிய கட்டுரை
வெளிவந்தபோது, அதன் தொடர்பாக வந்த கட்டுரை இழைகள் அவை.
தேடிப்பாருங்கள்.

அன்புடன்

ஜெயபாரதி


At 11:35 PM 2/24/02 +0800, you wrote:
>
> தடி கொண்ட ஐயனார்.
>
> புதுக்கோட்டையில் மார்த்தாண்ட பைரவபுரம் என்ற
>பெரிய தெரு ஒன்று இருக்கிறது. அது சேஷையா சாஸ்திரிகளால்
>உண்டாக்கப்பட்டது. (சேஷையா சாஸ்திரிகள் பற்றிய இழை
>அகத்தியத்தில் இருக்கின்றது. கொஞ்சம் தேடிப் பார்த்தால்
>அம்புடும். சேஷையா சாஸ்திரிகள் புதுக்கோட்டை சமஸ்தானத்தின்
>திவானாக இருந்தவர்.)
> அங்கே, முன்பு ஓர் ஆலமரமும் அதன்கீழே ஐயனார்
>கோயிலொன்றும் இருந்தன. அவ்வையனாருடைய பெயர்
>'தடிகொண்ட ஐயனார்' என்பது. மார்த்தாண்ட பைரவபுரத்தை
>உண்டாக்குவதற்கு முன் அங்கே சாலையை அமைக்கவேண்டியிருந்தது.
>சாலைக்கு முற்கூறிய ஆலமரமும் கோயிலும் தடையாக இருந்தன.
>ஆலமரத்தை வெட்டிவிட்டு, தடிகொண்ட ஐயனாரை வேறிடத்திற்குக்
>கொண்டுசென்று பிரதிஷ்டை செய்துவிட்டால் தாம் உத்தேசித்த
>காரியம் நன்றாக நிறைவேறுமென்று சாஸ்திரியார் எண்ணினார்.
>உடனே வேறிடத்தில் அழகிய கோயிலொன்றைக் கட்டுவித்தார்.
>ஐயனாரை அங்கே எழுந்தருளச் செய்விப்பதற்கு வேண்டிய
>முயற்சிகளைச் செய்தார். சிலர் அங்ஙனம் செய்தல் தகாதென்று
>தடுத்தனர்.
> சாஸ்திரியார், "நான் நல்ல காரியத்தை உத்தேசித்துத்தான்
>இதைச்செய்கிறேன். ஐயனாரிடத்தில் மற்றவர்களுக்கு இருக்கும்
>பக்திக்கு என்பக்தி சிறிதேனும் குறைந்ததல்ல. என்னுடைய
>முயற்சியை ஐயனார் அங்கீகரித்து அருள்வார் எண்ற உறுதி
>எனக்குண்டு", என்று அவர்களைப் பார்த்துக்கூறினார். பிறகு
>ஐயனாருக்கு ஒரு விண்ணப்பம் எழுதி அவர் முன்பு வைக்கச்செய்து
>நமஸ்காரம் செய்தார்.
> அதன் சாரம் வருமாறு:
> 'கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகிய ஸ்ரீஐயனாருடைய
>பாதாரவிந்தங்களில் அடியேன் சேஷையா சாஸ்திரிகள் பலகோடி
>நமஸ்காரங்கள் செய்து சமர்ப்பிக்கும் விண்ணப்பம்.
> நகரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு எழுந்தருளியிருக்கும்
>தேவரீர் இந்த நகரத்தைப் பாதுகாக்கும் கடமையை வகிக்கும்
>அடியேன், தேவரீருடைய ஆக்ஞையை எதிர்பார்த்துச் சில காரியங்கள்
>செய்துவருகிறேன். இந்த இடத்தில் ஒரு தெருவையும் சாலையையும்
>உண்டாக்க எண்ணியுள்ளேன். அந்தச் சாலை நேராகச் செல்வதற்கு
>இந்த ஆலமரம் தடையாக இருக்கிறது. தேவரீருக்குத் தனியாக ஓர்
>அழகிய கோயிலைக் கட்டச்செய்திருக்கிறேன். நெடுங்காலமாக
>இந்தப்பழைய கோயிலில் மழையால் நனைந்தும் வெயிலால் உலர்ந்தும்
>எழுந்தருளியிருக்கும் சிரமம் நீங்கி அக்கோயிலில் எழுந்தருள வேண்டும்.
>இந்த ஆலமரத்தையும் வெட்டுவதையும் அங்கிகரித்து அருளி
>வழிவிடல் வேண்டும்.'
> இந்த விண்ணப்பத்தை வைத்த பிறகு, நல்ல நாளொன்றில்
>ஐயனாரை அவ்விடம் விட்டு எழுந்தருளச்செய்து புதுக்கோயிலில்
>பிரதிஷ்டை செய்வித்து சிறப்பாகக் கும்பாபிஷேகமும் நடத்திப்
>பூஜை முதலியன நன்கு நடைபெறச் செய்தார். அப்பால் ஆலமரத்தை
>வெட்டுவதற்குரிய முயற்சிகளைச் செய்யத் தொடங்கினார். அதை
>வெட்டினால் ஐயனாரின் கோபம் ஏற்படுமென்று பயந்து கூலியாள்
>யாரும் அதனை வெட்டத்துணியவில்லை.
> "ஐயனாருடைய அருளை எதிர்பார்த்துத்தான் நான் இதைச்
>செய்கிறேன். ஒருவரும் வெட்ட முன்வராவிட்டால் நானே முதலில்
>வெட்ட ஆரம்பிக்கிறேன்", என்று சொல்லிவிட்டு, சாஸ்திரியார் தம்
>கையில் கோடரியை எடுத்துக்கொண்டார். அவர் மிகப்பருத்த
>தேகமுடையவர். அவர் வெட்டும் காட்சியைப் பார்ப்பதற்காக
>அளவற்ற ஜனங்கள் வந்து கூணி நின்றனர்.
> நாஸ்திரியார் "தடிகொண்ட ஐயனார் துணை", என்று
>சொல்லிக்கொண்டு கோடரியை ஓங்கினார்.
> ஐயனாரிடத்தில் பயங்கொண்ட பல ஜனங்களும்
>சாஸ்திரியாருக்கு ஏதேனும் அபாயம் நேரிடுமென்றே எண்ணினார்கள்.
>சிலர், அவர் ஓங்கிய கோடரி அவர் காலிலேயே விழுந்து துன்பத்தை
>விளைவிக்கும் என்று நினைத்தார்கள். வேறு சிலரோ ஆலமரத்திலிருந்து
>குபீரென்று இரத்தம் சாஸ்திரிகளின் முகத்தில் பீரிட்டு அடிக்கும்
>என்று கருதினர். கூட்டத்தினர் கண்கள் அத்தனையும் சாஸ்திரியார்
>ஓங்கிய கோடரியின் பால் இருந்தன.
> சொத்தென்று பச்சை ஆலமரத்தின்மீது கோடரி பாய்ந்தது.
>அபாயமான நிகழ்ச்சி ஒன்றும் நேரவில்லை. சாஸ்திரியாருக்குப்
>பின்னும் உற்சாகம் உண்டாயிற்றேயன்றிச் சிறிதும் சோர்வு
>உண்டாகவில்லை.
> 'பெரிய பக்திமானும் குணவானுமாகிய சாஸ்திரிகளிடத்தில்
>ஐயனாருக்குக் கோபம் வர நியாயம் இல்லை. சாஸ்திரிகள் தெய்வ
>சம்மதமான காரியத்தையே செய்கிறார்', என்று தம்முள்ளே கூறிக்
>கொண்டனர். 'இவர் வெட்டிவிட்டார். ஐயனார் இவருக்கு உத்தரவு
>கொடுத்திருப்பதால்தான் கோடரி மரத்தில் பாய்ந்தது. இனிமேல்
>இந்த மரத்தை வெட்டத்துணியலாம்.', என்று சிலர் கூறினர். உடனே
>அருகிலிருந்த வேலையாட்கள் சிறிதும்அச்சமின்றி ஆலமரத்தை
>வெட்டிச்சாய்த்தனர்.
> ஆலமரம் வெட்டப்பட்டது. அதனால் உத்தேசித்திருந்த
>சாலை ஒழுங்காக அமைந்தது. ஐயனார், புதுக் கோயிலில் பின்னும்
>சிறப்பாக வீற்றிருக்கிறார். அவர் முன்பு இருந்த இடத்தில் ஒரு
>பீடம் மட்டும் இருக்கிறது. அதையும் இப்பொழ்து நகர்வாசிகள்
>பயபக்தியோடு பூசித்து வருகிறார்கள்.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
======================