From harikris@... Mon Feb 25 02:20:40 2002
Return-Path:
X-Sender: harikris@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 25 Feb 2002 10:20:40 -0000
Received: (qmail 14067 invoked from network); 25 Feb 2002 10:20:40 -0000
Received: from unknown (216.115.97.167) by m3.grp.snv.yahoo.com with QMQP; 25 Feb 2002 10:20:40 -0000
Received: from unknown (HELO webmail1.maa.sify.net) (202.144.76.17) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 25 Feb 2002 10:20:37 -0000
Received: (qmail 22137 invoked from network); 25 Feb 2002 15:04:51 +0530
Received: from unknown (HELO prashanth) (210.214.131.17) by 202.144.76.17 with SMTP; 25 Feb 2002 15:04:51 +0530
Message-ID: <00e701c1bde6$260257a0$dbf0c7cb@prashanth>
To: ,
Subject: Re: [agathiyar] Infanticide among Tamil tribes and castes
Date: Mon, 25 Feb 2002 15:49:53 +0530
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2314.1300
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
From: "Hari Krishnan"
X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Profile: harikrishnan61
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 16203



அன்பு மணிவண்ணன்,

உங்களுடைய இந்தக் கடிதத்தைப் பார்த்தவுடன்தான் பாரதியின் ஒரு கட்டுரை நினைவுக்கு வந்தது. சிசுக்கொலை பற்றியது அல்ல என்றாலும், நேற்று நான் முன்னிட்ட உவேசா அவர்களின் குறிப்புக்குத் தொடர்பானது. "எதிர் fமீன் அல்லது மாப்பிள்ளை விலை" என்ற அந்தக் கட்டுரையிலிருந்து ஒரு பகுதியைத் தருகிறேன்.

"......பணம், பொதுக் கல்வி, விடுதலை மூன்றும் இல்லாவிட்டால் அந்த நாட்டில் மானமேது?

பிராமணருக்குள் விவா? காலங்களிலே எதிர் fமீன் கேட்கும் வழக்கத்தை நிறுத்தி விடவேண்டும் என்று சில வரு"ங்களாகப் பலர் பேசி வருகிறார்கள். மானமுடைய தேசங்களிலே சீதனம் கொடுத்தல் பெண்களின் பெற்றோர் செய்வது சாதாரணமேயாம். ஆனால் மாப்பிள்ளைகளுக்கு விலைத் தரங்கள் போட்டு இன்ன பரீ? தேறினவனுக்கு இத்தனை ரூபாய் கிரயம் என்று முடிவு செய்துவைத்து அதன்படி விவா?ங்கள் நடத்தும் வழக்கமில்லை.

சீனா, fப்பான், நவீன பாரசீகம் முதலிய எல்லா மனு?ய தேசங்களிலேயும் விவா?ம் அன்பையே ஆதாரமாகக் கொண்டு செய்யப்படுகிறது. இங்கே பணத்துக்காக விவா?ங்கள் செய்துகொள்கிறார்கள். சாதாரணமாகப் பெண்களுக்கு விலை கூறி விற்பது வழக்கமாக இருந்தது. இப்போது "பூசுரர்" (பூமண்டலத்திலே தேவர்) ஆகிய பிராமணக் கூட்டத்தார் மாப்பிள்ளைக்கு விலை போட்டு விற்கத் தொடங்கி இருக்கிறார்கள்."

"நிறுத்தி விடவேண்டும் என்று சில வரு"ங்களாகப் பலர் பேசி வருகிறார்கள்" என்ற தொடரையும், "விலை போட்டு விற்கத்**தொடங்கி இருக்கிறார்கள்**" என்ற தொடரையும் வைத்துப் பார்க்கும் போது, 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தப் பழக்கம் ஆரம்பித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. "பெண்களுக்கு விலை கூறி விற்பது வழக்கமாக இருந்தது" என்ற வாக்கியமும் சிந்திக்கத் தக்கதே. பாரதி இந்தக் கட்டுரையை பிராமணர்களை மையமாக வைத்து எழுதியிருக்கிறார். மற்ற இனங்களின் வழக்கத்தைப் பற்றியும் அறிய வேண்டும்.

ஒரு நூறாண்டு நிகழ்வுகளையும், மாற்றங்களையும் அறிந்து கொள்ள ஒண்ணாதவர்களாக இருக்கிறோம்! தேடுவோம். நடு நிலையோடு பார்த்தால் உண்மைகள் புலப்படலாம். இப்போது வரதட்சிணை வாங்காத இனமே இருக்காது போலிருக்கிறது. ஃபாரின் மாப்பிள்ளைக்கு எக்Sட்ரா காசு!

அன்புடன்,
?ரி கிரு?ணன்.

----- Original Message -----
From: Mani M. Manivannan
To: ;
Sent: Monday, February 25, 2002 3:10 AM
Subject: [agathiyar] Infanticide among Tamil tribes and castes


இந்தக் கொடிய பழக்கம் சில குடிகளில் மட்டுமே காணப்படுபவையா? ?ரி முன்னிட்ட உ. வே. சா. வின் குறிப்புப் படி பெண்களைக் கட்டிக் கொடுக்கவேண்டிய துன்பம் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலோ, 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ தொடங்கியிருக்க வேண்டும். பரிசம் போடும் வழக்கம் போய் சீதனம் கேட்கும் வழக்கம் எப்போது துவங்கியது? அது மட்டுமல்லாமல், குறுநிலக் கிழார்கள் பலர் தம் ஆண் பிள்ளைகளுக்கு மணம் முடிக்கும் செலவில் நொடித்துப் போனதான கதைகள் (புதுமைப்பித்தன்?) படித்திருக்கிறேன். அது நீங்கி மணப்பெண் வீட்டார் செலவு செய்யும் வழக்கம் எப்போது தோன்றியது? ஏன்?

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
நூவர்க், கலி., அ.கூ.நா.




[Non-text portions of this message have been removed]