From nswaminathan@... Mon Feb 25 16:38:58 2002
Return-Path: X-Sender: nswaminathan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 26 Feb 2002 00:38:58 -0000
Received: (qmail 61411 invoked from network); 26 Feb 2002 00:38:58 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 26 Feb 2002 00:38:58 -0000
Received: from unknown (HELO orngca-mls02.socal.rr.com) (66.75.160.17) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 26 Feb 2002 00:38:58 -0000
Received: from default.socal.rr.com (sc-66-27-189-161.socal.rr.com [66.27.189.161]) by orngca-mls02.socal.rr.com (8.11.4/8.11.3) with ESMTP id g1Q0b8o17824 for ; Mon, 25 Feb 2002 16:37:08 -0800 (PST)
Message-Id: <5.1.0.14.0.20020225163220.00ac8260@...>
X-Sender: nswaminathan@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 5.1
Date: Mon, 25 Feb 2002 16:33:01 -0800
To: agathiyar@yahoogroups.com
Subject: Dowry
Mime-Version: 1.0
From: Narayan Swaminathan X-Yahoo-Group-Post: member; u=65016889
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 16224
வரதட்சிணை
===========
மடத்து ஹாலில் நல்ல கூட்டம்.
மேடையில் காவி உடையில் கருணைவடிவமாக அமர்ந்திருந்த பெரியவர்
பேசிக்கொண்டிருந்தார்.
"இப்ப நான் சொல்றதை இந்தக்காதில வாங்கி அந்தக்காதுல வெளியில
விட்டுடக் கூடாது. எனக்கு சொல்றதுக்கு சித்த சங்கடமா இருக்கு.
இருந்தாலும் இதைச் சொல்றது என்னோட கடமை. நீங்களும் இதைக்
கேட்டு சிந்திச்சு உங்களை மாத்திக்கணும்"
கூட்டம் அவர் பீடிகையைக் கேட்டு ஆர்வத்துடன் பார்த்தது.
அவர் தொடர்ந்தார்.
"நான் சொல்லப்போறது இந்த வரதட்சிணை சமாசாரத்தைப்பத்தி.
பெற்றோர்கள் தங்கள் பிரியப்பட்டு கொடுத்தது போக, இப்ப கொடுத்தே
ஆகணும்னுங்கிற கட்டாயம் வந்திருக்கு. வளர்த்த செலவு, படிக்க வெச்ச
செலவுன்னு சேத்து வட்டியும் முதலுமா வசூல் பண்ரா. பி ஏ ன்னா ஒரு ரேட்டு,
எம் ஏ ன்னா ஒரு ரேட்டுன்னு ஆயிடுத்து"
கூட்டத்தில் மெல்லிய சிரிப்பலை எழுந்தது.
"இது சிரிக்கற விஷயம் இல்ல. மகா தப்பு. இதுக்குக் கொஞ்சங்கூட
சாஸ்திர அங்கீகாரம் கிடையாது. இதனால பல பேருக்கு கல்யாணம் ஆகாத
நெலமை ஏற்பட்டிண்டிருக்கு. இதை மாத்தறது உங்க கடமை. உங்கள்
குழந்தகள் பெரிசாப் போய் கல்யாணம் பண்றச்சே வரதட்சிணை
வாங்கமாட்டோம்னு உறுதியா இருக்கணும்,செய்வேளா"
"சத்யமான வார்த்தை. பளிச்சினு சொல்லிட்டார் பாருங்கோ" என்று
வியந்தார் சிவராமன் அருகிலிருந்தவரிடம்.
கூட்டம் தலையை அசைத்தது.
சிறிய பிரார்த்தனைக்குப் பிறகு கூட்டம் கலைந்தது.
சிவராமன் எழுந்து பெரியவர் அருகே போனார்.
மடத்து உத்யோகஸ்தர் சிவராமனைத் தடுத்தார்.
"எங்கே வரேள்"
"பெரியவாள்கிட்ட ஒரு சமாசாரம் பேசணும்"
"பெரியவாள் பூஜைக்கு போகணும். இப்ப பேசமுடியாது. நாளைக்கு வாங்கோ"
என்று இன்னொருவர் அதட்டினார்.
"இல்ல, ஒரு நிமிஷம் அவாள்கிட்ட பேசிட்டு போயிடறேன்"
"சார், சொன்னா கேளுங்கோ. உங்களை இப்ப கிட்ட விட்டா அவர் புரொகிராம்
லேட்டா ஆயிடும். உங்களைப் பாத்து மத்தவாளும் பேச வருவா.."
"தயவு செஞ்சு.." என்று கெஞ்சினார் சிவராமன்.
பெரியவரின் பார்வை சிவராமன் மேல்விழுந்தது.
"அவரை இங்க அனுப்பு" என்றார் கண்சாடையால்.
சிவராமன் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு போய் பவ்யமாய்க் குனிந்து வணங்கினார்.
"உங்களுக்கு என்ன வேணும்?" என்றார் பெரியவர்.
"உங்க பிரசங்கத்தைக் கேட்டேன். நீங்க வரதட்சிணை பத்தி
பேசினது எனக்கு ரொம்பப் புடிச்சிது"
"அப்படியா, சந்தோஷம்"
" கொழந்தை கல்யாணத்துக்கு நாள் குறிச்சாச்சு. முப்பது லட்சம் வேண்டிருக்கு.
எப்படியாவது பெரட்டிடலாம்னு ஒத்துண்டேன். பந்துக்கள், சினேகிதாள்
எல்லாரும் கைய விரிச்சிட்டா. நீங்கதான்..."
"அடடா. அப்படிக் கேப்பேனா? எனக்கு சம்பந்தியாரப் போறவருக்கும் உங்க மேல
பக்தி உண்டு. அவர்கிட்ட நீங்க ஒரு வார்த்தை..."
"நான் இதில தலையிட முடியாது. நன்னா இருக்காது. நான் சந்யாசி. "
"அப்படிச் சொல்லிடாதேங்கோ. உங்க ஆசீர்வாதத்துல நடக்கறதா பத்திரிக்கையில
போடப்போறோம். மடத்துலேருந்து " பணம் எதுவும் வாங்காம கல்யாணம் பண்றதுதான்
சிலாக்கியம்"னு மொட்டையா ஒரு கார்டு வந்தாக்கூடா நன்னா இருக்கும். அதை வெச்சு சம்பந்திகிட்ட பேசி
சம்மதிக்க வெச்சிடுவேன்"
"மொதல்ல ஏன் நீங்க இதுக்கு ஒத்துக்கணும்?பையன் என்ன படிச்சிருக்கான்?"
"பையன் பிகாம் படிச்சிட்டு சி ஏ பண்ணிட்டு ஒரு கம்பெனில வேலை பார்க்கறான்.
மாசம் பதினஞ்சாயிரம் ரூபா வாங்கறான்"
" பெரிய வரன்தான். இந்தப் பையனை விட்டூட்டு இன்னொருத்த....."
"இவன் மூத்தவன். இவனுக்கு பண்ணிட்டுதானே இவன் தம்பிக்கு பார்க்கணும்"
" அதைப்பத்தி உங்களுக்கு என்ன? உங்க பெண்ணுக்கு வேற தகுந்த வரன் கிடைக்காதா?"
"எனக்கு பெண்ணே கிடையாதே"
"பின்னே யார் கல்யாணத்தைப்பத்தி பேசறேள்"
"என் மூத்த பிள்ளை கல்யாணத்தைப் பத்தித்தான்"
"அப்ப வரதட்சிணை வாங்காம பண்ணிக்க வேண்டியதுதானே?"
"இல்ல நான் வரதட்சிணை கேட்கலே "
"பின்ன நீங்க எதுக்கு முப்பது லட்சம் செலவழிக்கணும் ?"
"அதானே, பிரச்னை. பொண்ணோட தகப்பனார்னா முப்பது லட்சம் கேக்கறார்.
பொண் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிருக்காள். பெங்களூர்ல இருக்கா. அவ கம்பெனியில
அடிக்கடி அமெரிக்கா, ஆஸ்திரேலியான்னு வெளிநாட்டுக்கு போய் சம்பாதிக்க சான்ஸ்
இருக்காம். என் பிள்ளைக்கு பொண்ணை புடிச்சுப்போய், சொன்னதுக்கெல்லாம் ஒத்துண்டு கல்யாணம் நிச்சயம்
செஞ்சுட்டேன். இப்ப என்னால கொடுக்க முடியாதுன்னு தோணறது. கல்யாணம் நின்னுடுமோன்னு பயம் வந்துடுத்து.
அதான் உங்க உதவி இருந்தா..."
=============================
----------
---
Outgoing mail is certified Virus Free.
Checked by AVG anti-virus system (http://www.grisoft.com).
Version: 6.0.311 / Virus Database: 172 - Release Date: 12/27/01
[Non-text portions of this message have been removed]