From eramurug@... Mon Feb 25 18:06:55 2002
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 26 Feb 2002 02:06:54 -0000
Received: (qmail 66525 invoked from network); 26 Feb 2002 02:04:09 -0000
Received: from unknown (216.115.97.167) by m5.grp.snv.yahoo.com with QMQP; 26 Feb 2002 02:04:09 -0000
Received: from unknown (HELO web14803.mail.yahoo.com) (216.136.224.219) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 26 Feb 2002 02:04:09 -0000
Message-ID: <20020226020409.90438.qmail@...>
Received: from [210.214.130.1] by web14803.mail.yahoo.com via HTTP; Mon, 25 Feb 2002 18:04:09 PST
Date: Mon, 25 Feb 2002 18:04:09 -0800 (PST)
Subject: maththaLa rAyan pAttu
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To:
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 16227

மன்ற மையத்தில் 'ஆசுதுரையை வீழ்த்திய' அன்பு நண்பருக்கும் ஆசுகவி
(இஸ்பேட் கவி -டைமண்கவி) மத்தளராயருக்கும் சம்வாதம் ..


>வெள்ளரிசி இஇட்டாலும் வெந்தால் பழுப்பாகும்
>தெள்ளியது என்னிடம் தீந்தமிழே --- உள்ளபடி
>கூறுகின்றேன் எம்மூர்க் கொடுமையிது பூமியில்
>ஊறுநீர் எந்நாளும் உப்பு

உம்பாடு தேவலைவேய் வெள்ளையோ பழுப்போ
ஊதிப் பிசைந்திடவே சாதம்சம் பாரமுண்டு
அம்மாவோ அய்யாவோ ஆர்வந்து போயென்ன
சும்மாடு தான்மிச்சம் காண்.

ஆபீசர் ஜீப்பில் மடியில்கம் பூட்டரோடு
ஆரெல்லாம் பாவர்ட்டி லைன்கீழே - ஜாப்தா
எடுக்கணும் நில்லுமென ஆணையோடு ஏப்பம்
கடுக்கென்று மென்றாராம் பீடா.

உப்புபுளி யில்லே அரிசி வரகுமில்லே
குத்தவச்சு வந்தாக்கத் தண்ணியில்லே கால்கழுவ
சொன்னாச் சிரிக்கறார் சாப்பிடாம குத்தவைக்க
என்னய்யா முக்கியம் சொல்.

தமிழெல்லாம் புத்தகத்தில் மிச்சசொச்சம் கடைத்தெருவில்
வழிகிறது மைக்வழியே காதில் - உமிழ்நீரும்
காஞ்சிங்கே நிக்கறவர் கேட்ப தெலாமிங்கே
கஞ்சி வரதாப்பா சொல்.




__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! Sports - Coverage of the 2002 Olympic Games
http://sports.yahoo.com