From arull@... Mon Feb 25 19:35:32 2002
Return-Path:
X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 26 Feb 2002 03:35:32 -0000
Received: (qmail 75017 invoked from network); 26 Feb 2002 03:35:31 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 26 Feb 2002 03:35:31 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 26 Feb 2002 03:35:31 -0000
Received: from tm.net.my (kmr-188-247.tm.net.my [202.188.188.247]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GS400343FB5BG@...> for agathiyar@yahoogroups.com; Tue, 26 Feb 2002 11:35:30 +0800 (SGT)
Date: Tue, 26 Feb 2002 11:33:00 +0800
Subject: திருமுறைத் தியானம்
To: "agathiyar@yahoogroups.com"
Message-id: <3C7B01EC.6F14FDA4@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: 8BIT
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார்
X-Yahoo-Group-Post: member; u=21400202
X-Yahoo-Message-Num: 16235

Subject:
Date:
Tue, 26 Feb 2002 09:40:00 +0800
From:
arull othuvar/ஓதுவார்




திருச்சிற்றம்பலம்

திருமுறைத்தியானம்

ஸ்ரீமடம் ஆஸ்தான வித்வான் புலவர்.
பு.மா.ஜய செந்தில்நாதன்

பிப்ரவரி 26

சுந்தரர்

திருப்புறம்பியம்
(திருப்பிறம்பியம்)

சாட்சிநாதேஸ்வரர் - இக்ஷுவாணி

"புறம்பயப்பதிவாழ் புண்ணியா போற்றி"

மலமெலாம் அறும் இம்மையே, மறுமைக்கும் வல்வினை சார்கிலா
சலமெலாம் ஒழி நெஞ்சமே, எங்கள் சங்கரன் வந்து தங்கும் ஊர்
கலமெலாம் கடல் மண்டு காவிரி நங்கையாடிய கங்கை நீர்
புலமெலா மண்டிப் பொன் விளைக்கும் புறம்பயந்தொழப் போதுமே.


உன்னைப் பற்றியுள்ள மும்மலங்களும் இப்பிறவியிலேயே
அற்றுப்போகும்; மறுமையிலும் உனை வந்து சேரமாட்டா;
அவற்றால் ஏற்படும் சஞ்சலங்களும் உன்னை விட்டு நீங்கும்.
இதற்காக, நாடொறும் நலத்தை யருளுகின்ற சங்கரனார்
விருப்புடன் தங்கும் பதியாகிய வளமிக்க புறம்பியம் சென்று
சாட்சிநாதேஸ்வரரின் சரணங்களைப் பணிந்து வாழ்வாய்
நெஞ்சமே!

புறம்பியம் தொழுது எழு - புன்மைகள் அகலும்

நலமெலாம் சேரும் - நல்முத்தியும் கூடும்.

திருச்சிற்றம்பலம்

ஓதுவார்
பினாங்கு.