From jaybee@... Mon Feb 25 20:48:31 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 26 Feb 2002 04:48:31 -0000
Received: (qmail 85596 invoked from network); 26 Feb 2002 04:48:29 -0000
Received: from unknown (216.115.97.172) by m4.grp.snv.yahoo.com with QMQP; 26 Feb 2002 04:48:29 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 26 Feb 2002 04:48:29 -0000
Received: from user (sp-103-13.tm.net.my [210.186.103.13]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GS400FA3IOQ8W@...> for agathiyar@yahoogroups.com; Tue, 26 Feb 2002 12:48:28 +0800 (SGT)
Date: Tue, 26 Feb 2002 12:47:34 +0800
Subject: Re: MaasaRu and AasaRu
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020226124734.0071a2dc@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16238

At , ChandraSekaran wrote:
>At 02:35 PM 2/25/02 +0000, you wrote:
>>அன்பர்களே
>>வேயுறு தோளி பங்கனில்
>>மாசறு திங்கள் கங்கை என்னும் தொடரில் நிலவை மாசறு என்று
சம்பந்தர் பாடுவதை
>>எந்தப் பொருளில் கொள்வது?


சிவனுடைய முடிமீது திங்கள் ஏறிய பின்னணியைச் சற்று
நினவுகூருவோம்.
தக்கனுடைய இருபத்தேழ்வராகிய மகளிரைச் சந்திரன்
மணந்துகொண்டான். ஆனால் அவனுடைய காதலெல்லாம் ரோகிணியின்
மீதே இருக்கிறது. ஆகவே ஏனைய இருபத்தறுவரும் தக்கனிடம்
சென்று முறையிட்டனர்.
கோபம்கொண்ட தக்கன், சந்திரனுடைய அழகும் பிரகாசமும்
தேய்ந்துபோகுமாறு சாபம் கொடுத்துவிட்டான்.
அச்சாபத்துக்கேற்றவண்ணம், சந்திரனுடைய தேஜஸ் ஒவ்வொரு
கலையாகக் குறைந்து கொண்டு வந்தது. இன்னும் மூன்றே கலைகள்
பாக்கியிருக்கும்போது, சிவனிடம் சந்திரன் சரணடைந்தான்.
சந்திரனுடைய எஞ்சிய மூன்றாம் பிறை வடிவத்துடன் சந்திரனைப்
பிறைச்சந்திரனாக அணிந்துகொண்டு 'பிறையணிந்த சீமானாக' சிவபெருமான்
விளங்கினார். மேலும் சிவன் அவனுடைய சாபத்தை மாற்றி தேய்ந்து வளரும்
வண்ணம் அருளினார்.
சிவனுடைய திருமுடிமேல் வீற்றிருப்பதால் 'மாசறு' என்று
குறிப்பிட்டார்.
சிவன் தம்முடைய திருமுடிமேல் அணிந்தவை - எலும்பு,
மண்டையோடு, ஊமத்தை, எருக்கு, கங்கை, திங்கள், பாம்பு ஆகியவை.
இரண்டாம் பாடலில் ஊமத்தையை 'பொன்பொதி மத்தம்' என்று
குறிப்பிடுகிறார்.
இன்னொரு பாடலில் 'ஒப்பிள மதியும் அப்பும்' என்றும்
குறிப்பிடுகிறார்.
சிவனால் அணியப்பட்டது என்பதால் 'மாசறு' என்று கொள்ளல்
தகும்.
அதே திங்கள், கோள்களின் வரிசையில் வரும்போது,அது
கோள்களுக்குரிய செயல்கள், கடமைகள், தன்மைகள் முதலியவற்றைக்
கொண்டதாகிறது. ஆகவே அவ்வரிசையில் வைத்துப் பாடும்போது
கோள்களையெல்லாம் பொதுநிலைப்படுத்தி, அவற்றுடன் திங்களும்
வற்றைப்போலவே அடியார்களுக்குத் தீதேதும் செய்யாமல்
ஆசு அற்று நல்லதாக விளங்கும் என்று சொல்கிறார்.
'நல்ல நல்ல' என்று இருமுறையோ அதற்கும் மேலோ
சொல்வது பிரயோக முறையைச் சேர்ந்தது. அதற்கு அழுத்தமும்
அவ்வாறு கொடுக்கிறார். திருக்கடைக்காப்பில் இன்னும் அதிக
அழுத்தத்தை....'ஆணை நமதே'...என்ற தீர்மானத்துடன் சாப்புக்
வைக்கிறார்.
'ஸ்தப்ம்பய, ஸ்தம்பய...., மோஹய, மோஹய..... ,
குரு குரு ஸ்வாஹா....' போன்றவை பிரயோகத்தில் வரும் சொற்கள்.
காக்க காக்க கனகவேல் காக்க...., குத்து குத்து கூர்வடிவேலால்...,
பற்று பற்று பகலவன் தணலெறி.... முதலியவையும் அவ்வாறே.

அன்புடன்

ஜெயபாரதி


மாசு என்றால் உடனே களங்கம் என்று கொள்ளத்தோன்றும்;
>>ஆனால் அதில் கறையுண்டு. எந்தப் பொருளில்
கொள்வது? அந்தப் பாட்டின் சூழலுக்குப்
>>பொருந்தக் கோள் என்ற முறையில் தீங்கு ஏதும் செய்யாதது என்று
கொள்வதா?
>>ஆனால் அவை நல்ல நல்ல என்றும் சொல்வதால் கூறியதுகூறலாகாதா? கூறியடுகூறலை
>>உடனே
அடுத்தடுத்துச் சொன்னால் குற்றமாகாது என்று தொல்காப்பியம் சொல்லதிகாரம் என்று
>>நினைவு.
>>இங்கே
மிகவும் சில அடிகள் விலத்திச் சொல்வதால்
கூறியதுகூறலாகுமே?
>>
>>அன்புடன்
>>பெ.சந்திரசேகரன்
>>
=============>>