From ganapathi s@... Mon Feb 25 21:55:58 2002
Return-Path: X-Sender: ganapathi s@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 26 Feb 2002 05:55:58 -0000
Received: (qmail 88774 invoked from network); 26 Feb 2002 05:55:58 -0000
Received: from unknown (216.115.97.172) by m11.grp.snv.yahoo.com with QMQP; 26 Feb 2002 05:55:58 -0000
Received: from unknown (HELO mailweb9.rediffmail.com) (203.199.83.21) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 26 Feb 2002 05:55:57 -0000
Received: (qmail 27054 invoked by uid 510); 26 Feb 2002 05:55:02 -0000
Date: 26 Feb 2002 05:55:02 -0000
Message-ID: <20020226055502.27053.qmail@...>
Received: from unknown (12.235.67.33) by rediffmail.com via HTTP; 26 Feb 2002 05:55:02 -0000
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: [agathiyar]Ramanar
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
Content-Disposition: inline
From: "Madhurabarathi" Reply-To: "Madhurabarathi" X-Yahoo-Group-Post: member; u=83645613
X-Yahoo-Message-Num: 16239
பிறருக்குச் செய்யப்படும் தொண்டு வைராக்கியத்தோடு "நான் செய்கிறேன்" என்ற அகந்தையின்றிச் செய்யப்பட்டால், மற்றவர் துன்பத்தை அது குறைக்கிறதோ இல்லையோ, நம் முயற்சி வெற்றி பெறுகிறதோ இஇல்லையோ, நமக்கு ஆன்மிக முன்னேற்றம் உண்டாகும்.
துறவு என்பது எப்போதும் மனத்தில் இருக்கிறதே தவிர, காட்டுக்கு அல்லது தனிமையை நாடி செல்வதிலோ, கடமையைத் தவிர்ப்பதிலோ இஇல்லை. மனம் வெளியே செல்லாமல் உட்புறம் திரும்புவதே முக்கியம்.
---பகவான் ரமணர்
ஒரு ஒளிப்புள்ளியை விரைந்து சுழற்றினால் ஒரு ஒளிவட்டம் இஇருப்பது போலத்தோற்றம் அளிக்கும். மனமும் அதுபோலவே ஒரு சமயத்தில் பார்த்தல், கேட்டல், நுகர்தல் என்ற ஏதாவதொன்றை மட்டுமே செய்தாலும் எல்லாவற்றையும் ஒருங்கச் செய்வதுபோல நாம் நம்பிவிடுகிறோம். ஏனெனில், மனம் வெகுவிரைந்து இஇத்தொழில்களை அடுத்தடுத்துச் செய்வதில் ஒரே சமயத்தில் செய்யும் தொழில்போல நமக்குத் தோன்றுகிறது.
---பதஞ்சலி யோக சூத்திரம் (IV-20) விளக்கத்தில் சுவாமி சிவானந்தர்.
-------------------------------
ரமணமகரிஷி - 9
"உன்னுடைய பற்கள் தவறிப்போய் நாவைக் கடித்துவிட்டால், பற்களைத் தட்டிவிடுவாயா?" என்று ஒருமுறை ரமணர் தன்னுடனிருந்த ராமகிருஷ்ணசுவாமியைக் கேட்டார்.அந்தச் சந்தர்ப்பத்தைச் சற்று விவரமாகப் பார்ப்போம்.
தற்போதிருக்கும் ஆசிரமத்துக்கு சுவாமி வந்துவிட்ட சமயம் அது. வருடம் 1924. ஓரிரவு சில திருடர்கள் ரமணருடைய தாயின் சமாதி இஇருந்த கொட்டிலுக்குள் நுழைந்து சில பொருள்களை எடுத்துச் சென்றனர். அதற்குச் சில வாரங்களுக்குப் பின் 3 திருடர்கள் ஆசிரமத்திலே திருட வந்தனர். ஜூன் மாதம் 26ம் தேதி, இஇரவு மணி பதினொன்றரை. மிகவும் இஇருள். தாயார் சமாதிமுன் இஇருந்த நீளறையில் ரமணர்தனது திண்டின்மேல் படுத்துக்கொண்டிருந்தார். சன்னலருகில் தரையில் நான்கு பக்தர்கள் படுத்திருக்கிறார்கள். குஞ்சு சுவாமி (பணியாளர்), மஸ்தான் இஇருவரின் காதிலும் "ஆறுபேர் உள்ளே படுத்திருக்கிறார்கள்" என்று சொல்லுவது காதில் விழுந்தது. "யார் அங்கே" என்று குரல் கொடுத்தார் குஞ்சு சுவாமி.
சன்னல் கண்ணாடி உடையும் சத்தம் பதிலாக வந்தது, உள்ளிருப்பவர்களை அச்சுறுத்துவது அவர்கள் எண்ணமாக இருக்கவேண்டும். இஇருவரும் எழுந்து ரமணரின் திண்டருகே சென்றனர். அதனருகில் இஇருக்கும் சன்னல் கண்ணாடியை உடைத்தனர் கள்ளர். ரமணர் அமைதியாக உட்கார்ந்திருந்தார். தெற்குக்கதவருகே திருடர் இஇருக்கவே, வடக்குக் கதவு வழியாகச் சென்று ராமகிருஷ்ணசுவாமியை உதவிக்கு அழைத்துவந்தார் குஞ்சுசுவாமி. கதவைத் திறந்ததும் ஜாக் மற்றும் கருப்பன் என்ற பெயர்கொண்ட இஇரண்டு ஆசிரம நாய்களும் வெளியே ஓடின. திருடர்கள் அடிக்க ஜாக் ஓடிமறைந்தது, கருப்பன் மீண்டும் அறைக்குள்ளேயே வந்தது.
உள்ளே வந்து எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம், ஆனால் அங்கு எதுவும் இல்லை என ரமணர் திருடர்களை நோக்கிக் கூறினார். தங்களைப் பிடிக்க இஇது ஒரு தந்திரம் என நினைத்தோ என்னமோ அவர்கள் சன்னலைப் பெயர்த்து உள்ளே நுழைவதிலேயே குறியாக இருந்தனர். இஇதன் நடுவில் குஞ்சு சுவாமி மெல்ல நழுவி ஊருக்குள்ளிருந்து ஆட்களை அழைத்துவரப் போய்விட்டார்.
நாங்கள் வெளியே போய்விடுகிறோம்,எதைவேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள் என்றார் ரமணர். சரி என்று சொல்லி வாசலில் நின்றுகொண்டனர் திருடர். கருப்பன் என்ற நாய், தங்கவேலு, மஸ்தான், ஆசிரமத்தில் பூசை செய்யும் முனிசாமி ஆகியோருடன் வெளியே வந்தார் ரமணர். வெளியே வருகையில் ஒவ்வொருவரையும் தடியால் அடித்தனர். இஇடது தொடையில் அடி வாங்கிக்கொண்ட ரமணர், "ஒருவேளை உங்களுக்குத் திருப்தி ஆகவில்லை என்றால் இஇந்தக் காலில் அடிக்கலாம்" என்று வலது காலைக் காட்டினார். நல்லவேளையாக ராமகிருஷ்ணசுவாமி அவரைச் சரியான நேரத்தில் மறு அடி விழுமுன் அழைத்துக்கொண்டு நகர்ந்தார்.
சுமார் பத்து ரூபாய் மதிப்புள்ள பூஜைக்கான வெள்ளிப்பொருட்களும், தங்கவேலுப் பிள்ளையின் ஆறு ரூபாய்ப் பணமும்தான் கிடைத்தன திருடர்களுக்கு. கோபத்துடன் தடியைச் சுழற்றியபடி "காசெல்லாம் எங்கே வைத்திருக்கிறீர்கள்?" என்று கேட்டனர். "நாங்கள் சன்னியாசிகள். எங்களிடம் ஏதப்பா காசு?" என்றார் பகவான். திருடர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை, நகர்ந்தனர்.
எல்லோரையும் போய் மருந்துக் களிம்பு போட்டுக்கொள்ளச் சொன்னார் பகவான்."உங்களுக்கு?" என்றார் ராமகிருஷ்ணசுவாமி. "எனக்கும்தான் பூசை ஆயிற்றே" என்றார் பகவான் சிரித்துக்கொண்டே. அவர் தொடையில் இஇருந்த தடிப்பைப் பார்த்ததும் ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது ராமகிருஷ்ணசுவாமிக்கு. ஒரு இஇரும்புத் தடியைத் தூக்கிக்கொண்டு நான் போய் அந்தப் பசங்களை ஒரு வழி பண்ணிவிட்டு வருகிறேன் என்றார் அவர்.
"நாம் சன்னியாசிகள். அந்தத் தர்மத்தை நாம் கைவிடக்கூடாது. நீ போய் அவர்களை அடித்தால் நீ சாகக்கூடும். அவர்களை யாரும் பழிக்கமாட்டார்கள், உன்னைத்தான் குற்றம் சொல்வார்கள். அறியாமையால் குருடராகி வழிதவறியவர்கள் அவர்கள். நமக்கு எது சரியென்று தெரியும், அதை நாம் பின்பற்றுவோம். உன்னுடைய பற்கள் தவறிப்போய் நாவைக் கடித்துவிட்டால், பற்களைத் தட்டிவிடுவாயா?" என்று அப்போதுதான் பகவான் சொன்னார்.
குஞ்சு சுவாமி ஊராரையும் போலீசையும்அழைத்துக்கொண்டு வந்து சேர்ந்தார். அப்போது பகவான் கொடுத்த வாக்குமூலம் என்ன?
அந்த அஹிம்சாமூர்த்தியின் கருணையில் மேலும் தொடரும்...