From sadayan50@... Tue Feb 26 00:46:25 2002
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 26 Feb 2002 08:46:21 -0000
Received: (qmail 18806 invoked from network); 26 Feb 2002 08:46:20 -0000
Received: from unknown (216.115.97.172) by m8.grp.snv.yahoo.com with QMQP; 26 Feb 2002 08:46:20 -0000
Received: from unknown (HELO web13802.mail.yahoo.com) (216.136.175.12) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 26 Feb 2002 08:46:20 -0000
Message-ID: <20020226084620.18521.qmail@...>
Received: from [213.42.0.247] by web13802.mail.yahoo.com via HTTP; Tue, 26 Feb 2002 00:46:20 PST
Date: Tue, 26 Feb 2002 00:46:20 -0800 (PST)
Subject: Re: [agathiyar] uDaipaDum punithangaL
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To:
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 16246

--- naga_ganesan wrote:

>
> நண். சாபு ஒரு நல்ல மடல் தந்தார், அதையும் களரியில் தேடவேண்டும்.
> தலித் இலக்கிய, மற்றும் முற்போக்கு
> இலக்கியங்களைப் படிப்போர் அதன் பிரமாண வெளியீடுகள்
> பெயர்களைத் தாருங்கள். படித்துப் பார்க்கிறேன்.
>


தாய்மண் - ஆசிரியர் திருமாவளவன். அரசியலும் இலக்கியமும் கலந்த
மாதயிதழ்
புதிய கோடங்கி - தலித் இலக்கிய இதழ்
மண் - ஆசிரியர் கவிஞர் அறிவுமதி தமிழிலக்கியமும் தலித் இலக்கியமும்
கலந்த கலவை
நந்தன் - ஆசிரியர் அருணாசலம். அரசியல் தலித் இலக்கியம் மாதமிருமுறை
பெரியார் முழக்கம் - திங்களிதழ்
தென்மொழி, தென்செய்தி, தமிழ்தேசம், தமிழர் கண்னோட்டம், வள்ளுவம்.
முதலியன.

இதோ கபிலன் எழுதிய தலித் கவிதை.
===============================

எங்கே இருக்கிறோம்
தலித் ?

எரிக்கப்பட்டதிலிருந்து
சுடப்பட்டதிலிருந்து மீண்ட
ஒரு
தலித்தின் சவடாலாய்
இது தொடரும்

எங்கே இருக்கிறோம்
தலித் ?

உங்கள் சிகரெட்டில்
புகைஇலுயாய்
உங்கள் குடலில் மலமாய்
இருந்தோம் இருக்கிறோம்
இருக்கமாட்டோம்

பாசறையிலிருந்து சிதறி
கூழாங்கற்களாய்
எம் தலைவர்கள்
குழுக்களாய்
அதிக எண்ணிக்கையில்
இருந்தும்
அனாதைகளாய்
நாம்

எல்லா தலித்துகளையும்
சுட்டுவிட்டால்
உங்கள் பிணத்தை எரிப்பவன்
எவன் ?
உங்கள் மலத்தை அள்ளுபவன்
எவன் ?
உங்கள் தோட்டத்தில்
பூச்செடிகளை வளர்ப்பவன்
எவன் ?

சினிமாக் கொட்டகையில்
அரசியல் கூட்டங்களில்
திருவிழாக்களில்
ஓட்டுக்கு விலைவைத்து
பயணம் போகும் லாரியில்
சாராய முதலையின்
அக்குளில்
மலிவுவிலையில் சாம்பலாகும்
மனித வைக்கோல்
பொம்மைகளாய்
மூத்திர நெடியில் துங்கும்
பன்றிகளாய்
இருந்தோம் இருக்கிறோம்
இருக்கமாட்டோம்

ஒரு துப்பாக்கி ரவை
ஒருவனை அழிக்கட்டும்
ஒரு வெடிகுண்டு
ஆயிரம் பேரை அழிக்கட்டும்
தலித்தின் போர்குணம்
ஒன்றைவிடவும் ஆயிரத்தை விடவும்
பெரியது

முதலில் தோன்றியது போலவே
உலகத்தின் கடைசியிலும்
அவன்தான் மிஞ்சுவான்

தலித் இது எழுத்துக்களால் ஆன
சொல் அன்று
ஆயுதங்களால் ஆன
ஒரு
போராட்டக் குழு


=====
அன்புடன்

சாபு
துபாய்

__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! Sports - Coverage of the 2002 Olympic Games
http://sports.yahoo.com