From sadayan50@... Tue Feb 26 01:03:15 2002
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 26 Feb 2002 09:03:14 -0000
Received: (qmail 32266 invoked from network); 26 Feb 2002 09:03:14 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 26 Feb 2002 09:03:14 -0000
Received: from unknown (HELO web13804.mail.yahoo.com) (216.136.175.14) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 26 Feb 2002 09:03:14 -0000
Message-ID: <20020226090314.54147.qmail@...>
Received: from [213.42.0.249] by web13804.mail.yahoo.com via HTTP; Tue, 26 Feb 2002 01:03:14 PST
Date: Tue, 26 Feb 2002 01:03:14 -0800 (PST)
Subject: Poem from Dalit Magazine
To: tamil-ulagam@yahoogroups.com
Cc: agathiyar@yahoogroups.com
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 16247
நிசும்ப சூதனி - ராகு கால காளி
===========================
அண்ணாந்து பார்க்கும்
கோபுரத்தில்
அமர்ந்திருக்கிறான்
சிவன்
அகழிகளில்
நடந்து கொண்டிருப்பதோ
விபச்சாரம்
ஆடற்கலை செழித்த
ஆரண்மனை
திட்டுகளில்
ஊனக் கால்களோடு
பிச்சைக்காரிகள்
வெட்ட வெளி பொட்டல்
வேகாத வெய்யில்
நட்டநடு நிசியில்
கொட்டும் மழையில்
கூரையற்ற காளி
குடையாகிக் காக்கிறாள்
பூஜை புனஸ்காரமோ
அங்காள பரமேஸ்வரிக்கு
கர்நாடக கரையில்
கமண்டலம்
கவிழ்த்த காக்கை
சோழ எல்லலையில்
பறக்காமலில்லை
காவிரியோரம்
கொக்கு சுடுவதை
நிறுத்தி விட்டு
காக்கைக்கு குறி
வைக்கும் உழவர்கள்
சூலமேந்தும் காளியின்
சுடர் விழியில்
நீட்டும் நாக்கில்
மன்னிப்பெழுதிப் போன
மாறவர்மன்
வரகை நட்டு
வம்சமழிந்தும்
பிழைத்துக் கொண்டது
சோழ வம்சம்
நானுறு வருட
சோழ குலம்
நாசமாப் போக
அக்ரஹாரத்துக்குள்
இப்போதும்
காற்சிலம்போசை
நீயும் நானும்
யாருடைய பிள்ளைகள்
தாலிக்கேங்கும்
பூப்பெய்திய பெண்கள்
பூக்கொண்டு போய்
காளிக்குச் சூட்ட
தீக் கண்களில்
தேதி சொல்கிறாள்
கர்ப்பம் தரிக்க
மணமான மங்கை
கற்பூரம் ஏற்றுகிறாள்
மூன்றாவது மாசமே
முதல் பேறின் அறிகுறி
ஊர் காக்கும் காளி
உலவுகிறாள் வெளியே
நீயோ ஊருக்குள்
கட்டுகிறாய்
அம்பாள் சந்நிதி
கவிஞர் யுகபாரதி
=====
அன்புடன்
சாபு
துபாய்
__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! Sports - Coverage of the 2002 Olympic Games
http://sports.yahoo.com