From arull@... Tue Feb 26 18:38:23 2002
Return-Path:
Received: (qmail 38405 invoked from network); 27 Feb 2002 02:38:23 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 02:38:23 -0000
Received: from unknown (HELO n16.groups.yahoo.com) (216.115.96.66) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 02:38:23 -0000
X-eGroups-Return: arull@...
Received: from [216.115.96.139] by n16.groups.yahoo.com with NNFMP; 27 Feb 2002 02:38:11 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 27 Feb 2002 02:38:21 -0000
X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 27 Feb 2002 00:53:31 -0000
Received: (qmail 50825 invoked from network); 27 Feb 2002 00:53:30 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 00:53:30 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 00:53:29 -0000
Received: from tm.net.my (sja-179-59.tm.net.my [202.188.179.59]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GS6003EQ2H35S@...> for agathiyar@yahoogroups.com; Wed, 27 Feb 2002 08:53:28 +0800 (SGT)
Date: Wed, 27 Feb 2002 08:50:56 +0800
Subject: திருமுறைத் தியானம்
To: "agathiyar@yahoogroups.com"
Message-id: <3C7C2D70.6A6CEDE4@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: 8BIT
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார்
X-Yahoo-Group-Post: member; u=21400202
X-Yahoo-Message-Num: 16258

திருச்சிற்றம்பலம்

திருமுறைத்தியானம்

ஸ்ரீமடம் ஆஸ்தான வித்வான் புலவர்.
பு.மா.ஜய செந்தில்நாதன்

பிப்ரவரி 27

திருநாவுக்கரசர்

விசயமங்கை

விஜயநாதர் - மங்களாம்பிகை

"விசயமங்கை வேதியா போற்றி"

பாண்டுவின் மகன் பார்த்தன் பணி செய்து
வேண்டு நல்வரம் கொள் விசயமங்கை
ஆண்டவன் அடியே நினைந்து ஆசையால்
காண்டலே கருத்தாகி இருப்பானே.

இறைவா! உளமாரத் தியானித்துத் தவம் செய்த பாண்டு
மன்னனின் மகனாகிய அருச்சுனனுக்குப் பாசுபதத்தையும்,
மற்றும் வேண்டிய வரங்களையும் தந்தருளினாய். அப்பெயராகவே
திருவிசயமங்கைத் தலத்தில் எழுந்தருளியுள்ளாய். எம்பெருமானே!
எப்போதும் உன்னையே நினைந்து, காணும் பெருவிருப்பையே
என் வாழ்வின் நோக்கமாகக் கொண்டு அச்சிந்தையாகவே காலம்
கழிப்பேன்..

என்கண் உனையன்றி மற்றொன்றும் காணற்க

என்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க.

திருச்சிற்றம்பலம்

ஓதுவார்
பினாங்கு.