From naga ganesan@... Tue Feb 26 18:38:24 2002
Return-Path: Received: (qmail 1372 invoked from network); 27 Feb 2002 02:38:24 -0000
Received: from unknown (216.115.97.172) by m5.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 02:38:24 -0000
Received: from unknown (HELO n15.groups.yahoo.com) (216.115.96.65) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 02:38:23 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [216.115.96.144] by n15.groups.yahoo.com with NNFMP; 27 Feb 2002 02:37:19 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 27 Feb 2002 02:38:02 -0000
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 27 Feb 2002 00:43:21 -0000
Received: (qmail 30930 invoked from network); 27 Feb 2002 00:43:20 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 00:43:20 -0000
Received: from unknown (HELO n14.groups.yahoo.com) (216.115.96.64) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 00:43:20 -0000
Received: from [216.115.96.158] by n14.groups.yahoo.com with NNFMP; 27 Feb 2002 00:45:21 -0000
Date: Wed, 27 Feb 2002 00:43:16 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: mAsum Cantiranum (Re: For Chandra SEkaran..and others:-))
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1995
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 216.88.65.200
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16259
சந்திரன் களங்கம் ஈதென்று நம் புராணங்கள்
சொல்வது யாதெனில் அவன் தன் வாத்தியார்
மனைவியைக் களவாடிப் புதனைப் பெற்றெடுத்தான்
என்பதாகும். வேலியில் கிடக்கும் வெள்ளெருக்கு,
சுடலையில் கிடைக்கும் வெள்ளோடு போல அடாதது
செய்த சந்திரனைத் தலையில் தாங்கிக் கொண்டாடும்
பித்தன் பரமசிவனை "பித்தா! பிறை சூடீ!" என விளித்தார்
முப்போதும் திருமேனி தீண்டும் சுந்தரமூர்த்தி நாயனார்.
எதுகை நோக்கி அமைக்கையில் "மாசறு திங்கள்"
என்று இதைச் சுட்டுகிறார் என்றும் கொள்ளலாம்.
" சந்திரன் ஒஷதிகளுக்கு இறைவனாய் அநேக
இராசசூயஞ் செய்த கர்ம பலத்தினால் பிரகஸ்பதியின்
தேவியாகிய தாரையைப் புணர்ந்தனன். இந்தக் காரணத்தால்
தேவாசுர யுத்தம் உண்டாயிற்று. அவ்யுத்தத்தில் பிரமன்
தாரையைப் பிரகஸ்பதிக்குக் கொடுத்தனன்.
தாரையிடம் இவனுக்குப் புதன் பிறந்தனன்"
(அபிதான சிந்தாமணி).
தாரா சசாங்கம் பழைய திரைப்படம் DVD
VCD கிடைக்குமா?
சந்திரன் செயலைச் செயங்கொண்டார் தனது
காராணை விழுப்பரையன் வளமடலில் குறிக்கிறார்:
24-27:
போதனைகள் செய்து புதனைஅவள் போய்ப்பெற்ற
சூதகமும் நீக்கிச் சுதாரமெனக் கைக்கொண்ட
பீதகனார் இந்திரனார்க்கென்றும்ப்ர தானராய்
மேதைகளின் மேம்பட்டார் அல்லரோ?"
(வானகலா = வான் + அகலா, அன்றி, வானக் கலைகள் என்றும் பிரியும்.)
இதற்கு முன்னர் தான் பீதகன் (=வியாழ பகவான்) உலோகாயதம் போதிக்கும் இந்திரன்
உடலில் 1000 கண்கள்(=யோனிகள்) உண்டாவது சாபமா, இல்லையில்லை அவன்
விரும்பிய ஊதியம்! என்பார் ஜெயங்கொண்டார். "ஊதியம் அன்றோ அஃதொன்று ஆயிரம் ஆனது" - கண்ணி 23
காண்க.
காராணை விழுப்பரையன் வளமடல் 11-ம்
நூற்றாண்டில் எழுந்த தமிழின் அரிய கருவூலம். சமற்கிருதத்தில் ஜெயராசி பாடிய
தத்துவ உபப்ளவ சிம்மம் என்னும் ஒரே நூல்தான் உலகாயதம், தமிழில் ஜெயங்கொண்டார் பாடிய மடல் ஒன்றே
உலகாயத நூல். வலையில் படிக்க:
http://www.tamil.net/projectmadurai/pub/pm0060/valamatal.pdf