From jaybee@... Tue Feb 26 20:29:14 2002
Return-Path:
Received: (qmail 38530 invoked from network); 27 Feb 2002 04:29:13 -0000
Received: from unknown (216.115.97.171) by m6.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 04:29:13 -0000
Received: from unknown (HELO n12.groups.yahoo.com) (216.115.96.62) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 04:29:13 -0000
X-eGroups-Return: jaybee@...
Received: from [216.115.96.168] by n12.groups.yahoo.com with NNFMP; 27 Feb 2002 04:29:13 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 27 Feb 2002 04:29:12 -0000
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 27 Feb 2002 04:24:30 -0000
Received: (qmail 99459 invoked from network); 27 Feb 2002 04:22:56 -0000
Received: from unknown (216.115.97.171) by m5.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 04:22:56 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 04:22:56 -0000
Received: from user (sp-103-3.tm.net.my [210.186.103.3]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GS600022C658J@...> for agathiyar@yahoogroups.com; Wed, 27 Feb 2002 12:22:55 +0800 (SGT)
Date: Wed, 27 Feb 2002 12:23:29 +0800
Subject: Re: [agathiyar] Re: Thamilzh Thaaththaa vaaram-#11
In-reply-to:
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020227122329.00760078@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References:
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16272


கோபாலகிருஷ்ணபாரதியார்

தியாகைய்யரைச் சந்தித்த பின்னர், பாரதியார் இன்னும்
அதிக எண்ணிக்கையில் கீர்த்தனைகளை இயற்றினார்.
தியாகைய்யருடைய கீர்த்தனைகளைப்போலவே தமிழிலும் பலரின்
வேண்டுக்கோளுக்கிணங்க இயற்றித்தந்தார். தியாகைய்யருடைய
'பஞ்சரத்தினம்' என்னும் அமைப்பில் ஐந்து கீர்த்தனங்களை நாட்டை,
வராளி, கௌளை, ஆரபி, ஸ்ரீராகம் என்னும் ஐந்து இராகங்களில்
பாரதியார் ஒரு பஞ்சரத்தினத்தை இயற்றினார். ஆனால் அவற்றை
அவர் சிவபரமாகவே இயற்றினார்.

தியாகைய்யரின் பஞ்சரத்தினத்தின் முதற்பாட்டாகிய
'ஜகத் ஆனந்த காரகா' என்னும் பாட்டுக்கு இணையாக அதே
நாட்டையில் எழுதிய பாட்டு இது -

இராகம்:நாட்டை

பல்லவி

ஹரஹரசிவ சங்கரகரு ணாகரபர மேச்வர
ஆனந்த தாண்டவ ராயா (ஹரஹர)

அனுபல்லவி

புரஹரவ்ருஷ பத்வஜபரி பூர்ணகாம (ஹரஹர)

சரணம்

பரமானந்த கூபமும் பஞ்சாட்சரப்படியும் கொடியும்
வரமருள் சந்நிதியும் சிவகங்கையும் மதிலும்
பரவிடுங் கோபாலகிருஷ்ணன் பாடியகுஞ் சிதபதமும்
தரிசனம்பண்ணித் தெளிந்திடாத ஜன்மம் மனிதஜன்மமல்ல
(ஹரஹர)

இவற்றிற்கு அக்காலத்தில் நல்ல மதிப்பு இருந்திருக்கிறது.
உ. வே. சாமிநாதய்யரவர்களின் வாக்கிலிருந்து கேட்போம்.
"ஸ்ரீதியாகைய்யர் இயற்றியவை இராமபிரான் விஷயமானவை.
பாரதியாரின் பஞ்சரத்தினத்தைப் பாடக்கேட்ட சிவபக்திச்செல்வம்
வாய்ந்தவர்களுக்கு, இவர் சிவபரமாக இயற்றிய கீர்த்தனங்கள்
அளவற்ற மகிழ்ச்சியை அளித்தன. அன்றியும் தமிழில் எளிய நடையில்
அமைந்திருத்தலின் இக்கீர்த்தனங்களை வருத்தமின்றி யாவரும்
மனனம் செய்து பாடுவாராயினர்.
இதை எழுதிய காலகட்டத்தில் ஐயரவர்களே இந்த
பஞ்சரத்தினத்தின் நான்கு கீர்த்தனைகளை மட்டுமே கேட்டிருக்கிறார்.
வராளியில் அமைந்த அந்தப் பாட்டைக் கேட்டதில்லை. அப்படியானால்
அது அப்போதே மறைந்துவிட்டிருக்கவேண்டும்.
இன்று இதை இங்கே மின்னெழுத்துக்களில் பொறிக்க
எனக்குக் கொடுத்துவைத்தது. ஏனெனில் அப்பாட்டு எனக்குக்
கிடைத்தது.
ஆனால் மற்றவை எங்கே?
தியாகைய்யரின் பஞ்சரத்தினத்தைப்போன்றே தமிழில்
சிவபரமான பஞ்சரத்தினக் கீர்த்தனைகள் இருந்திருக்கின்றன.
விட்டுவிட்டோம்.

அன்புடன்

ஜெயபாரதி

=============================