From jaybee@... Tue Feb 26 22:25:19 2002
Return-Path:
Received: (qmail 28677 invoked from network); 27 Feb 2002 06:25:18 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 06:25:18 -0000
Received: from unknown (HELO n7.groups.yahoo.com) (216.115.96.57) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 06:25:18 -0000
X-eGroups-Return: jaybee@...
Received: from [216.115.96.169] by n7.groups.yahoo.com with NNFMP; 27 Feb 2002 06:25:18 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 27 Feb 2002 06:24:43 -0000
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 27 Feb 2002 06:24:11 -0000
Received: (qmail 27241 invoked from network); 27 Feb 2002 06:24:11 -0000
Received: from unknown (216.115.97.167) by m8.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 06:24:11 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 06:24:10 -0000
Received: from user (sp-103-28.tm.net.my [210.186.103.28]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GS600B29HS36E@...> for agathiyar@yahoogroups.com; Wed, 27 Feb 2002 14:24:04 +0800 (SGT)
Date: Wed, 27 Feb 2002 14:24:55 +0800
Subject: Re: [agathiyar] Re: Thamilzh Thaaththaa vaaram-#13
In-reply-to: <3.0.3.32.20020227122329.00760078@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020227142455.00780504@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References:
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16275


கோபாலகிருஷ்ணபாரதியார்

பாரதியார் அடிக்கடி சிதம்பரத்துக்குச்சென்று மாதக்
கணக்கில் அங்கேயே தங்கியிருந்து நடராஜ தரிசனம் செய்து
வந்தார். அப்போது அவர் நூற்றுக்கணக்கான கீர்த்தனைகளை
இயற்றினார்.

உ.வே.சாமிநாதய்யரவர்கள் வாக்கிலிருந்து:

சிதம்பரத்தில் இருக்கும் காலங்களில் இவர் ஆலயம் சென்று,
பொன்னம்பலத்துக்குத் தெற்கேயுள்ளதும், கிழக்கு நோக்கி ஊர்த்துவ
தாண்டவமூர்த்தி எழுந்தருளியிருப்பதுமான, நிருத்த சபையின் வெளி
மண்டபத்தில் ஜபம் செய்வார்.
சில சமயங்களில் அதன் தெற்குச் சுவரோரமாக உள்ள
நந்தனார் உருவத்துக்கு அருகிலிருந்து பாடிக்கொண்டிருப்பார்.
நடராஜமூர்த்திக்கு நேரே அம்மூர்த்தியைத் தரிசித்த
வண்ணமாக அத்திருவுருவம் அமைக்கப்பட்டிருக்கிறது. அவ்வுருவத்தின்
கையில் கடப்பாரையும் தோளில் மண்வெட்டியும் உள்ளன. பாரதியார்
நந்தனாருடைய சிறந்த சிவபக்தியை நினைந்து நினைந்து
உருகுவதற்கு அந்த உருவம் ஒரு தூண்டுகோலாக இருந்தது.
இவர் அடிக்கடி நந்தனாரைப் பற்றி வியந்து பாராட்டி உரைப்பார்.

ஒருசமயம் பாரதியார் அங்கிருந்து பாடிக்கொண்டிருந்தபோது
உடனிருந்த அன்பர்கள் சிலர்,
"இந்தச் சன்னிதியிலேயே இருந்து தாம் தரிசனம் செய்ய
வேண்டுமென்று நந்தனார் பிரார்த்திப்பதாக ஒரு கீர்த்தனம் இயற்றித்
தரவேண்டும்", என்று வேண்டினார்கள்.
அவர்கள் விரும்பியபடியே பாரதியார்,
'எந்நேரமும் உன்றன் சன்னிதியில் நான் இருக்கவேண்டுமய்யா',
என்னும் பல்லவியுடைய கீர்த்தனமொன்றை ஆரபி ராகத்தில் இயற்றினார்.

சிதம்பரத்தில் இருந்த பெண்களின் விருப்பப்படி 'சிதம்பரக்கும்மி'
ஒன்றை இயற்றினார்.

அடுத்தாற்போல அவர் தம்முடைய Magnum Opus எனப்படும்
பெருஞ்சாதனையைச்செய்ய இவை வித்தாகவும் கருவாகவும் விளங்கின.

அன்புடன்

ஜெயபாரதி

============================