From jaybee@... Wed Feb 27 01:39:24 2002
Return-Path:
Received: (qmail 78628 invoked from network); 27 Feb 2002 09:39:23 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 09:39:23 -0000
Received: from unknown (HELO n30.groups.yahoo.com) (216.115.96.80) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 09:39:23 -0000
X-eGroups-Return: jaybee@...
Received: from [216.115.96.175] by n30.groups.yahoo.com with NNFMP; 27 Feb 2002 09:39:23 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 27 Feb 2002 09:39:23 -0000
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 27 Feb 2002 09:38:05 -0000
Received: (qmail 48733 invoked from network); 27 Feb 2002 09:38:05 -0000
Received: from unknown (216.115.97.171) by m11.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 09:38:05 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 09:38:05 -0000
Received: from user (sp-103-22.tm.net.my [210.186.103.22]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GS6002EQQK74S@...> for agathiyar@yahoogroups.com; Wed, 27 Feb 2002 17:33:45 +0800 (SGT)
Date: Wed, 27 Feb 2002 17:34:32 +0800
Subject: Re: [agathiyar] Re: Thamilzh Thaaththaa vaaram-#14
In-reply-to: <3.0.3.32.20020227142455.00780504@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020227173432.00788588@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020227122329.00760078@...>
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16276


கோபாலகிருஷ்ணபாரதியார்

பாரதியார் சன்னியாச மனப்பான்மை கொண்டவர்.
ஆகையால் அவர் செல்வந்தர்களிடத்தே வலியச்சென்று
பழகுவதில்லை. மாயூரத்தில் இருக்கும்போது அவர் ம்கவும்
ஏழ்மையான நிலையிலிருந்த கணபதி ஐயர் என்னும் மாணாக்கர்
வீட்டினில் தங்குவதுதான் வழக்கம். அவருடைய வீட்டில் ஒரு
திண்ணையில்தான் தங்கியிருந்தார்.
தலயாத்திரையும் செய்தார். அவர் திருவண்ணாமலையில்
கிரிவலம் வந்தார். அந்தச்சமயத்தில் அங்கே இருந்த அன்பர்களின்
செயல்களும் பிறகாட்சிகளும் அவருடைய மனதில் பதிந்தன.
திருவண்ணாமலை கிரிவலத்தையே சித்தரித்து ஒரு கீர்த்தனையாக
உருவாக்கிவிட்டார்.

இராகம் - நாதநாமக்கிரியை

பல்லவி

கண்ணாலே கண்டேன் - வேறொன்றும்
எண்ணாமலே நின்றேன்

அனுபல்லவி

பண்ணாத புண்ணிய பரிபாகமே திரு
அண்ணா மலையானை உண்ணாமுலையுடன்
(கண்ணாலே)

சரணங்கள்

காட்டுத்தழைகளைப் பந்தலாயலங்காரம்
செய்திடும் ஒருபுறம்
கால்கள் கண்கள் இல்லாத பேதைகள்
கைவி ரித்திடும் ஒருபுறம்
மாட்டுக் கிடைகள் மந்தை மந்தையாய்
வந்து வழங்குவதொரு புறம்
வாயிலாதவோர் ஊமை நாடகம்
காட்டி மறைந்திடும் ஒருபுறம்
பாட்டுப்பாடுவார் தாளம்போடுவார்
பசிக்கு தின்றொரு காசுதாருமென்று
ஆட்டம் கொள்ளுவார் நின்று வருந்துவார்
(கண்ணாலே)

ஹரஹரா வென்பர் சிவசிதம்பரம் என்பர்
அம்பலப் பரதேசிகள்
அருணகிரியின் மகிமையைக் கொண்
டாடுவார் ஸ்தலவாசிகள்
அரிய தவங்களைப் புரிந்து மூலத்
தழலெ ழுப்புவர் நேசிகள்
ஆனந்தாம்ருதம் கொண்டு தம்மை
அறிவர் ஞானப்ரகாசிகள்
பெரிய கோபுர மும்திரு வீதியும்
பிறங்கு சீர்த்திருத் தேரும் தீர்த்தமும்
பிரியராம் குகை நமச்சிவாயராம்
பெரிய பக்தர்தம் மடமும் ஜோதியும்
(கண்ணாலே)

புந்தி மகிழவே உக்காக் குடித்திடும்
புகையினால் ஆமோதமும்
புரையில்லாதவவ் வந்தணர் கூடிப்
புகழ்ந்திடும் சதுர்வேதமும்
பந்திபந்தியாய்த் தேவதாசிகள்
பாடிவரும் சங்கீதமும்
பார் அளந்த கோபாலகிருஷ்ணன்
பணிந்திடு திருப்பாதமும்
அந்தி வேளையும் மண்டபங்களில்
ஆரத்தி கற்பூரம் புகைந்திடச்
சிந்தை மகிழவே மலைமுகட்டினில்
தீப தரிசன்ம் தாபம் தீரவே
(கண்ணாலே)

பாரதியாரின் கீர்த்தனங்களின் எண்ணிக்கைப் பெருகப்
பெருக, தமிழ்நாட்டினில் தமிழ் கீர்த்தனங்களுக்கு இருந்த பஞ்சம்
நீங்கியது.
அடுக்கடுக்காக அடுத்தடுத்து பாரதியார்இயற்றிய
கீர்த்தனங்கள் ஒவ்வொன்றாக வெளிவரலாயின. இயற்றிய
சிலநாட்களுக்குளாகவே அவை பாடகர்களால் தமிழ்நாடு
முழுமையும் பரவி பெயர் பெற்றன. வேற்றிடங்களிலிருந்து
அந்தப் பக்கமாய் வந்த பாடகர்கள், பாரதியாரைக் கண்டு
தங்களுக்கென கீர்த்தனங்களைக் கேட்டு வாங்கிச்செல்வார்கள்.

அன்புடன்

ஜெயபாரதி