From jaybee@... Wed Feb 27 02:42:34 2002
Return-Path:
Received: (qmail 48221 invoked from network); 27 Feb 2002 10:42:33 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 10:42:33 -0000
Received: from unknown (HELO n4.groups.yahoo.com) (216.115.96.54) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 10:42:33 -0000
X-eGroups-Return: jaybee@...
Received: from [216.115.96.23] by n4.groups.yahoo.com with NNFMP; 27 Feb 2002 10:42:33 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 27 Feb 2002 10:42:31 -0000
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 27 Feb 2002 10:40:39 -0000
Received: (qmail 3128 invoked from network); 27 Feb 2002 10:40:39 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 10:40:39 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 10:40:38 -0000
Received: from user (sp-103-39.tm.net.my [210.186.103.39]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GS600C13T2SVW@...> for agathiyar@yahoogroups.com; Wed, 27 Feb 2002 18:28:06 +0800 (SGT)
Date: Wed, 27 Feb 2002 18:28:57 +0800
Subject: Re: [agathiyar] Re: Thamilzh Thaaththaa vaaram-#15
In-reply-to: <3.0.3.32.20020227173432.00788588@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020227182857.0077df4c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020227142455.00780504@...> <3.0.3.32.20020227122329.00760078@...>
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16277


கோபாலக்கிருஷ்ண பாரதியார்

பாரதியாரின் புகழ் ஓங்கியது. அவ்வப்போது இசை
நிகழ்ச்சிகளைச் செய்யுமாறு அழைப்பார்கள். அங்கெல்லாம்
தம் சீடர்களுடன் சென்று தமிழிசை பாடுவதுடன் இந்துஸ்தானி
மார்க்கத்திலுள்ளவற்றையும் பாடினார். அந்நிகழ்ச்சிகளில்
துணைக்கதைகளையும் விந்தைச் செய்திகளையும், நகைச்
சுவையான விஷயங்களையும் சொல்வார். அவருக்கென்று
பெருங்கூட்டம் கூடலாயிற்று.
"சிவகதையாக ஏதேனும் தங்கள் வாக்கினால் வெளிவந்தால்
பெரிய உபகாரமாக இருக்கும். தங்களுக்கு மகாராஷ்டிரம்
இந்துஸ்தானி முதலியவற்றிலுள்ள பாணியெல்லாம் தெரியுமே?
அந்த மார்க்கங்களையெல்லாம் தமிழில் கொண்டுவந்து
அமைக்கத்தக்கவர்கள் தங்களையன்றி வேறு யாரிருக்கிறார்கள்?",
என்று பலர் கேட்டுக்கொண்டார்கள்.
"நீங்கள் சொல்வது நல்ல காரியம்தான்.ஒரு பக்தருடைய
சரித்திரத்தை இயற்றினால் ஜன்மசாபல்யமும் உண்டு.
ஸ்ரீநடராஜமூர்த்தியின் திருவருள் கிடைத்தால் அப்படியே செய்யலாம்
என்று எண்ணியிருக்கிறேன்", என்று பாரதியார் கூறினார்.
ஆகவே பாரதியார் சிவகதைகளை இசையுரைகளாகச்
செய்து வந்தார்.
நாகைப்பட்டினத்தில் கப்பல் வாணிகம் செய்துவந்த சிவபக்தி
மிகுந்த கந்தப்பச்செட்டியார் என்னும் வணிகர் ஒருவர் இருந்தார்.
அவர் பாரதியாரை ஒருமுறை அழைத்திருந்தார். நாகைப்பட்டினத்தில்
சில சிவகதைகளைச் சொல்லச்செய்தார்.
ஒருநாள், கந்தப்பச்செட்டியார், " ஒரு நாயனார் சரித்திரத்தை
நீங்கள் கீர்த்தனை ரூபமாக இயற்றவேண்டும். இந்த விருப்பம் எனக்கு
நெடுநாளாக உண்டு. உங்களுடைய புகழைக் கேட்ட காலமுதல் இந்த
எண்ணம் எனக்குத் தோன்றி வளர்ந்து வருகிறது. நீங்கள் இங்கே
இப்பொழுது செய்து வரும் சிவகதைகளைக்கேட்டபின்னர் அந்த
எண்ணம் இன்னும் அதிகரித்துள்ளது. உங்கள் திருவாக்கால் அப்படி
ஒரு சரித்திரம் வெளிவருமாயின் என்னால் இயன்ற உதவியை நான்
செய்கிறேன். என்னுடைய நண்பர்கள் சிலரிடமும் சொல்லி அந்தச்
சரித்திரத்தை எங்கும் பரவும்படி செய்வேன். சிவபெருமானுடைய
புகழையும் சிவபக்தர்களுடைய சிறப்பையும் அறிந்த நீங்கள், சாதாரண
ஜனங்களும் கேட்டு உருகும்வண்ணம் செய்யக்கூடுமென்ற நம்பிக்கை
எங்களுக்கெல்லாம் உறுதியாக இருக்கிறது", என்று வேண்டிக்கொண்டார்.
இதேபோல் எத்தனையோ பேர்கள் முன்னரேயே கேட்டுக்
கொண்டுமுள்ளனர். ஆகவே பாரதியார் ஒரு நாயனார் சரித்திரத்தைக்
கதை வடிவில் விரைவிலேயே இயற்றவேண்டும் என்று நிச்சயித்தார்.
இறைவன் அருளைத் துணையாகக்கொண்டு ஒருவாறு தொடங்கிவிட்டால்
பிறகு எளிதில் நிறைவேறுமென்ற நம்பிக்கை இவருக்கு உண்டாயிற்று.
எந்தச் சரித்திரத்தை இயற்றலாம் என்ற யோசனை பாரதியாருக்கு
அடுத்து ஏற்பட்டது.

அன்புடன்

ஜெயபாரதி