From jaybee@... Wed Feb 27 05:36:40 2002
Return-Path: Received: (qmail 88385 invoked from network); 27 Feb 2002 13:36:39 -0000
Received: from unknown (216.115.97.172) by m10.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 13:36:39 -0000
Received: from unknown (HELO n24.groups.yahoo.com) (216.115.96.74) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 13:36:39 -0000
X-eGroups-Return: jaybee@...
Received: from [216.115.96.145] by n24.groups.yahoo.com with NNFMP; 27 Feb 2002 13:36:38 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 27 Feb 2002 13:36:36 -0000
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 27 Feb 2002 13:33:00 -0000
Received: (qmail 22456 invoked from network); 27 Feb 2002 13:33:00 -0000
Received: from unknown (216.115.97.172) by m4.grp.snv.yahoo.com with QMQP; 27 Feb 2002 13:33:00 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 27 Feb 2002 13:32:59 -0000
Received: from user (sp-103-86.tm.net.my [210.186.103.86]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GS700D8A1CRTN@...> for agathiyar@yahoogroups.com; Wed, 27 Feb 2002 21:26:53 +0800 (SGT)
Date: Wed, 27 Feb 2002 21:29:08 +0800
Subject: Re: [agathiyar] Re: Thamilzh Thaaththaa vaaram-#16
In-reply-to: <3.0.3.32.20020227182857.0077df4c@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020227212908.00782b38@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020227173432.00788588@...> <3.0.3.32.20020227142455.00780504@...> <3.0.3.32.20020227122329.00760078@...> From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16278
கோபாலகிருஷ்ணபாரதியார்
பாரதியார் சிதம்பரத்துக்குச் செல்லும்போதெல்லாம்
நடராஜர் சன்னிதியில் நந்தனார் திருவுருக்கு அருகில்
இருந்தவாறு சிவத்தியானம் செய்து வந்த வழக்கமிருந்ததால்
அவருக்கு முதலில் நந்தனாருடைய நினைவே வந்தது.
அத்துடன் மட்டுமல்லாது, அவர் சிதம்பரத்தில் அதிக
ஈடுபாடு உடையவராகையால் நடராஜப்பெருமானைப் பலவகைகளில்
துதிப்பதற்கு ஏற்ற சந்தர்ப்பங்களை உடையதாக அந்தச் சரித்திரம்
இருக்கவேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார்.
'சிதம்பரம் போகவேண்டும்' என்ற ஒருமைஉள்ளத்தோடு
இருந்து, 'நாளைப்போவேன், நாளைப்போவேன்' என்று எப்பொழுதும்
மனமுருகிக் கூறிக்கொண்டேயிருந்ததனால் 'திருநாளைப்போவார்'
என்ற காரணப்பெயரை அடைந்த நந்தனாருடைய சரிதமே
தம்முடைய மனோபாவங்களையும் கொள்கைகளையும் விளக்குவதற்கு
ஏற்றது என்று தெள்ளத்தெளிந்தார்.
ஒரு நல்லநாள் பார்த்துத் தொடங்கத் தீர்மானித்தார்.
அந்நாளும் வந்தது.
ஒருநாள் சரிதத்தைத் தொடங்கவேண்டுமென்ற
எண்ணத்திலேயே மூழ்கியிருந்தபோது கந்தப்பச்செட்டியார்
ஒரு வேலைகாரன் மூலமாக அவருக்குப் பல பழங்களை
அனுப்பிவைத்தார். அவற்றை அந்த வேலையாள் பாரதியார்
முன்னிலையில் வைத்தான். அதனைக் கண்ட பாரதியார்
'இதுவே நல்ல சுபசகுனம்' என்று புளகாங்கிதம் எய்தினார்.
பழம் வந்த அந்த சந்தர்ப்பம் அவருடைய மனதில் ஆழமாகப்
பதிந்துகொண்டது.
'பழம் நம்மருங்கு அணையும்' என்று நினைத்தார்.
அதனையே தாம் இயற்ற நினைத்த சரிதத்தின் தொடக்கமாக
வைத்துக்கொண்டு 'பழனமருங்கணையும்' என்று தொடங்கினார்.
'கீர்த்தனங்களால் ஆகிய சரிதங்களுக்கு முதலில்
பெரும்பாலும் அந்தச் சரிதத்தைச் சுருக்கிக்கூறும் ஒரு பகுதி
உண்டு. காப்பியங்களில், முதலில் கதையைச் சுருக்கிச்சொல்லும்
'பதிகம்' என்னும் பகுதி இருத்தலைப்போல, அச்சுருக்கம்
கீர்த்தனாரூபமாக மகாராஷ்டிரம் முதலிய மொழிகளில்
அமைக்கப்பட்ட கதைகளில் இருக்கும்.
பாரதியார் நந்தனார் சரித்திரத்தைச் சுருக்கமாக
மேற்கூறிய 'பழனமருங்கணையும்' என்பதனை முதலாகக்
கொண்ட சிந்து ஒன்றில் அமைத்து இயற்றினார். அந்தச்
சிந்தை பலர்கூடிய சபையில் படித்துக் காட்டி, அதனையே
விரிவு படுத்தி முழுச்சரித்திரத்தையும் இயற்றப்போவதாகச்
சொன்னார். அவையினர் மகிழ்ச்சியுடன்அதனை வரவேற்றனர்.