From naga ganesan@... Wed Feb 27 19:59:27 2002
Return-Path: Received: (qmail 14798 invoked from network); 28 Feb 2002 03:59:27 -0000
Received: from unknown (216.115.97.171) by m10.grp.snv.yahoo.com with QMQP; 28 Feb 2002 03:59:27 -0000
Received: from unknown (HELO n24.groups.yahoo.com) (216.115.96.74) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 28 Feb 2002 03:59:27 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [216.115.96.127] by n24.groups.yahoo.com with NNFMP; 28 Feb 2002 03:59:27 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 28 Feb 2002 03:59:26 -0000
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 28 Feb 2002 02:12:45 -0000
Received: (qmail 59160 invoked from network); 28 Feb 2002 02:12:45 -0000
Received: from unknown (216.115.97.172) by m9.grp.snv.yahoo.com with QMQP; 28 Feb 2002 02:12:45 -0000
Received: from unknown (HELO n29.groups.yahoo.com) (216.115.96.79) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 28 Feb 2002 02:12:44 -0000
Received: from [216.115.96.145] by n29.groups.yahoo.com with NNFMP; 28 Feb 2002 02:12:32 -0000
Date: Thu, 28 Feb 2002 02:12:29 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: bEjAr: collAyvu
Message-ID: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2522
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 209.144.226.135
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16294
வேசறுதல் என்னும் வினைச்சொல்லை
வேசறவு, வேசறிக்கை போன்ற தமிழ் இலக்கிய ஆளுமைகளுக்கு
அடிப்படை என்கிறது DED 4544.
கன்னட `பேஜாரு, உருது பேசார் போன்றன
தொல்திரவிடக் கூறுகளாக இருக்கும்.
விசை = வலிக்கை, விசைகொள்ளல் = பலங்கொளல், விசைத்தல் = வேகமுறல்
(யாழ்ப்பாணத் தமிழகராதி).
இவற்றோடு விசையறல்/வேசறல் என்பதையும்
சிந்திக்கலாம்.
வேசறவு வேசறை என்றும் வரும்.
ஒப்பு: தொந்தரை/தொந்தரவு, புலை/புலவு,
களை/களவு, வளை/வளவு . . .
மனவலி, உளைச்சல், சலிப்பு, மனவருத்தம்
என்ற சொல்லில் வலி/வருத்தம் இவற்றின்
வேர் வல்- என்பதாம். வலி = இழுத்தல்.
வண்டியை வலிக்கிறான் என்பது இழுக்கிறான்
என்ற பொருளிலாம். வலி = pain, தசையை
இழுப்பதால். வடமொழி பலம் தமிழிலிருந்து
சென்ற வலம்/வல்லமை என்பர் அறிஞர்.
கண்ணறை, மூக்கறை, வாயறை, காதறை
என்பது ஒரு உறுப்பை இழப்பது. இவை
இலக்கிய ஆட்சி பெற்ற சொற்கள்.
அதுபோலவே, வேசறை என்பது
வல்லமை/வலியை இழப்பது.
வேசறை விசை/வெசை+ அறை என்று பிரியும்.
விசை (= வலி(மை)) > வெசை.
வேசறை = விசையை இழப்பது என்ற
பொருள் எனத் தோற்றுகிறது.
கம்பரும் வேசறுதல் என்னும் வினைச்சொல்லை
இந்திரசித்தன் இறந்துபட்டபோது அவன் தாய்
கதறலில் பயன்படுத்துகிறார்:
அம்புலி! அம்ம வா! என்று அழைத்தலும் அவிர் வெண் திங்கள்
இம்பர் வந்தானை அஞ்சல் என இருகரத்தின் ஏந்தி
வம்புறும் மறுவைப் பற்றி முயல் என வாங்கும்
எம் பெருங்களிறே! காண வேசற்றேன், எழுந்திராயோ!
17-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் அபிராமி பட்டர் பாடுகிறார்:
நீடு உலகங்களுக்கு ஆதாரமாய் நின்று,
. . . நித்தமாய், முத்தி வடிவாய்,
. நியமமுடன் முப்பத்து இரண்டு அறம் வளர்க்கின்ற
. . . நீ மனைவியாய் இருந்தும்,-
வீடு வீடுகள் தோறும் ஓடிப் புகுந்து, கால்
. . . வேசற்று, லச்சையும் போய்,
. வெண் துகில் அரைக்கு அணிய விதியற்று, நிர்வாண
. . . வேடமும் கொண்டு, கைக்கு ஓர்
ஓடு ஏந்தி, நாடு எங்கும் உள்ளம் தளர்ந்து நின்று,
. . . உன்மத்தன் ஆகி, அம்மா!
. உன் கணவன் எங்கெங்கும் ஐயம் புகுந்து, ஏங்கி,
. . . உழல்கின்றது ஏது சொல்வாய்?
ஆடு கொடி மாடமிசை மாதர் விளையாடி வரும்
. . . ஆதி கடவூரின் வாழ்வே!
. அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
. . . அருள் வாமி! அபிராமியே! (7)
இரண்டு அபிராமி பதிகங்கள்:
http://groups.yahoo.com/group/agathiyar/message/4144