From perichandra@... Wed Feb 27 20:00:53 2002
Return-Path: Received: (qmail 33966 invoked from network); 28 Feb 2002 04:00:53 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 28 Feb 2002 04:00:53 -0000
Received: from unknown (HELO n9.groups.yahoo.com) (216.115.96.59) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 28 Feb 2002 04:00:52 -0000
X-eGroups-Return: perichandra@...
Received: from [216.115.96.44] by n9.groups.yahoo.com with NNFMP; 28 Feb 2002 04:00:37 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 28 Feb 2002 04:00:28 -0000
X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 28 Feb 2002 02:44:41 -0000
Received: (qmail 104 invoked from network); 28 Feb 2002 02:44:40 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 28 Feb 2002 02:44:40 -0000
Received: from unknown (HELO n13.groups.yahoo.com) (216.115.96.63) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 28 Feb 2002 02:44:40 -0000
Received: from [216.115.96.118] by n13.groups.yahoo.com with NNFMP; 28 Feb 2002 02:25:10 -0000
Date: Thu, 28 Feb 2002 02:44:39 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Thamilzh Thaaththaa vaaram-#11
Message-ID: In-Reply-To: <3.0.3.32.20020228074931.00721a2c@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3142
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra" X-Originating-IP: 66.56.78.233
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 16295
--- In agathiyar@y..., jaybee wrote:
>..
>
> >
> >> ஆனால் மற்றவை எங்கே?
> >> தியாகைய்யரின் பஞ்சரத்தினத்தைப்போன்றே தமிழில்
> >>
> சிவபரமான பஞ்சரத்தினக் கீர்த்தனைகள் இருந்திருக்கின்றன.
> >> விட்டுவிட்டோம்.
> >
> >இப்போது
> இருப்பதைக் காத்தாலே பெரிய விசயம்.
>
>
> நீங்கள் அடிக்கடி இப்படி எழுதுகிறீர்கள்.
குறைவாக ஏதும் எழுதவில்லை; குறையாக, வருத்தமாக, எழுதினேன்.
ஆமாம் நம் மக்கள் இப்போது இருப்பதன் அருமையே தெரிவதில்லை:
தங்கள் கண்படக் காதுபட இருப்பதன் அருமையை உணராதபோது அவையெல்லாம்
வந்த மூலத்தை எங்கே அறிவார்கள்?
அதன் மறுபக்கம்தான் பழையதென்று கேட்பவற்றிற்கும் இப்போதையவற்றிற்கும்
தொடர்பு தொடர்ச்சி என்ன வென்று சிந்திப்பதில்லை.
நல்ல சான்று: தமிழிசை என்பது.
முத்தமிழ் முத்தமிழ் என்று பேசுவார்கள். ஆனால் அதன் வரையறை என்ன?
அதன் இந்நாளைய தொடர்ச்சி என்ன வென்று சிந்திப்பதில்லை.
தமிழக அரசின் பாடநூல் பத்தாம்(?) வகுப்பு; அதில் தமிழிசை என்று ஒரு படலம்.
1999-2000 இல் வந்த நூல். சரி ஆபிரகாம் பண்டிதர், விபுலர், சாம்பமூர்த்தி,
இராமநாதன், வீபகா சுந்தரம் என்று எத்தனைபெயர் அதை அலசியிருக்கிறார்கள்;
அதைக் கொஞ்சமாவது கோடிகாட்டுகிறார்களா என்றூ பார்த்தேன்.
எல்லாம் பிதற்றல்: யாழ் இருந்தது, முரசு இருந்தது; ஆயிரந் தந்தி யாழ், சகோட
யாழ் என்று வழக்கமான பேச்சுகளும் வறட்டுக் கௌரவ எழுத்துகளுந்தான்.
ஓரிடத்திலாவது கர்நாடகை இசைதான் அந்தத் தமிழிசை என்று காணோம்.
பண்டைய ராகப் பெயர்கள் மாறியதொன்றுதான் மாற்றம்; அடிப்படையில் வேறொன்றுமில்லை
என்று ஒரு பேச்சுமூச்சுக் காணோம். எல்லாம் முத்தமிழ் வித்தகர் என்று பட்டம் சூடிக்கொள்ளும்
அரசியல்வாதியின் ஆட்சியில் வரும் தமிழ்ப்பாடநூலில் காண்பது; இதைக் கவனியாமல்
அன்பழகனின் கட்டுரை அவர்களுக்குத் தெரிந்த சொல்வீச்சாளரின் கவிதை என்று பாடநூலில்
புகுத்தமட்டும் கவலையுண்டு.
இதைத்தான் சொன்னேன், அங்கே.
இசை என்றால் அதற்கு வரையறை உண்டு என்று தெரிவிப்பதில்லை நம் கல்வியாளர்கள்.
அதனாலேயே இசைக்கும் மொழிப்பாட்டுக்கும் வேறுபாடு தெரியாதவர்களாய் நம் மக்களாகவே
ஆகிவிட்டார்கள்.
இந்த அழகில் அவர்களுக்கு எதை இழந்தோம் என்று தெரியும்? எதை வைத்திருக்கிறோம் என்று
தெரிந்தால்தானே கவனிக்காவிட்டால் எதை இழந்துவிடுவோம் என்று தெரியும்? பிறகுதானே
இழந்ததென்று சொல்வதைக் கேட்டுத் தானாகவே தேடி மீட்கமுடியும்?
இப்போது இருக்கும் கர்நாடக இசையை வைத்து நாம் இளங்கோவடிகள் காலத்துக்குப்
போகமுடியும். வேண்டியன வுள்ளன. மக்கள் பரவலாகக் கேட்கத் தொடங்கி இரகுமான்களையும்
இளையராசாக்களையும் கடந்து திரைகளில் தமிழிசை இசைத்தால் தமிழ்ச்சமுதாயம் மாறும்.
அடிப்படைத் தீர்வு: தமிழர்கள் தமிழ்மொழியை மட்டும் கவனிப்பதைவிட்டுத் தமிழ்ப்பண்பாடு
என்றால் என்னவென்று உணர்ந்து அந்த முழுமையையும் கவனிக்கவேண்டும். இல்லாவிட்டால்
மொழியை மட்டும் காக்கமுடியாது. மொழி நம் பண்பாட்டின் ஒரு பகுதியே.
மொழியைப் புரையோட விடக்கூடாதென்று மற்றபகுதிகளைப் புரையோடுவிக்கின்றனர்;
பிறகு உடல்முழுதும் அழுகவேண்டியதாகும்.
தமிழ்ப்பண்பாடு என்ற முழுமையையும் பார்த்தால் தனிமனிதனுக்குள்ளும் குடும்பத்திற்குள்ளும்
அன்றாடம் நிகழவேண்டிய பங்கு தெரியும்: பொதுப் பிரச்சினை இல்லை; இது
குடும்பப்பிரச்சினை என்று. அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கும் கூறுகள் தெரியும்; அவர்கள்
கடைப்பிடிப்பார்கள். எல்லாம் திருந்தும்.