From ramnrom@... Wed Feb 27 23:22:37 2002
Return-Path:
X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 28 Feb 2002 07:22:36 -0000
Received: (qmail 21538 invoked from network); 28 Feb 2002 07:22:36 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 28 Feb 2002 07:22:36 -0000
Received: from unknown (HELO web14206.mail.yahoo.com) (216.136.173.70) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 28 Feb 2002 07:22:36 -0000
Message-ID: <20020228072236.55335.qmail@...>
Received: from [4.35.187.102] by web14206.mail.yahoo.com via HTTP; Wed, 27 Feb 2002 23:22:36 PST
Date: Wed, 27 Feb 2002 23:22:36 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Re: Fwd: Thyagaraja's Kritis in Tamil?
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20020228142912.0072315c@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram
X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Message-Num: 16310

நண்பர்களே,

இந்த இழை ஆரம்பத்தில் நான் கேட்டிருந்த கேள்வி ஒரு மாதிரியாகத் திசை
திருப்பப்பட்டுவிட்டது! தியாகையரின் தெலுங்கு உசத்தியா மட்டமா என்பதல்ல
என் கேள்வி. என் தெலுங்கை விட அவர் தெலுங்கு ஆயிரம் மடங்கு உயர்ந்தது
என்பதில் சந்தேகம் இல்லை!

எனக்குத் தெலுங்கே தெரியாததாலும், என்னை விட இன்னமும் குறைவாகத்
தெரிந்தவர்கள் அந்த கீர்த்தனைகளுக்கு 'சொந்த சாகித்தீயமாக'
வியாக்கியானம் கொடுப்பதால் ஏற்படும் எரிச்சல்/ஏக்கத்தாலும் தான் இந்தக்
கேள்வியை நான் தொடுத்தது.

ஜேபி அவர்களின் விளக்கம் சரியான, நிறைவான மட்டுறுத்தல். சங்கத்
தமிழ்ப் பாடல்கள் 'ஒரு மாதிரியான தமிழில்' ஒன்றுமே
புரியாமலிருக்கிறது என்று சொன்னால் நமக்கு எவ்வளவு எரிச்சல் வரும்? ;-)

'30 நாளில் தெலுங்கு' வாங்கி நானே பார்த்துக் கொள்கிறேன் ;-) யார்
கண்டது? தியாகராஜரின் தெலுங்கு கீர்த்தனைகளுக்கு என்னுடைய தமிழ்
மொழியாக்கப் படைப்புக்களையும் நீங்கள் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கலாம்.

விதி சால சுகமா!?

அன்புடன்,

எல்லே ராமுடு

--- jaybee wrote:
>
> அன்புள்ள சந்திரசேகரன்/ஹரி,
>
> At 02:54 AM 2/28/02 +0000, you wrote:
> >
> >அந்தப் பழைய தெலுங்கு கிருதிகளின் தெலுங்கு
> மொழி அவ்வளவு உயர்த்தியில்லை
> >என்று கேள்வி. விசயவாடா வட்டாரமான ஆந்திராத் தெலுங்கு நன்கு
> தெரிந்து அங்கேயே
> >ஆண்டுகள் பல வாழ்ந்த பெரியவர் ஒருவர் சொல்லுவது. திருவாரூர் மூவரின்
> தெலுங்கு
>
> >ஏதோ "இனந்தெரியாத" ஒரு தரத்தைச்சார்ந்ததென்று சொல்லுவார்.
> தெலுங்கர்களை
> >உசாவினாலும்
> அவர்கள் பெரும்பாலோர் தெரிந்தாலும் அதைச் சொல்லவும்
> மாட்டார்களாம்...
> >பெருமை கருதி. அவையோர்
> விளக்கவும்.
> >
> >அன்புடன்
> >பெ.சந்திரசேகரன்
>
>
> தியாகையரின் தெலுங்கு வித்தியாசமானதாகத் தற்கால
> ஆந்திரநாட்டு ஆந்திரர்களுக்குத் தோன்றுவது உண்மையே.
> 15-ஆம் நூற்றாண்டில் தஞ்சையில் நாயக்கர் ஆட்சி
> வேருன்றிவிட்டது. அதனைத் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையில்
> ஆந்திரர்கள் குடிபெயர்ந்து வந்துவிட்டனர். தஞ்சையின்
> ஆட்சி மொழியும் தெலுங்காக இருந்தது.
> 15-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஆந்திர நாட்டுத் தெலுங்கும்
> தஞ்சைத் தெலுங்கும் வெவ்வேறு வழிகளில் பரிணாமம் பெற்றிருக்கும்.
> தஞ்சைத் தெலுங்கு regionalisation என்னும் பிடிமானத்துக்குள்
> அடைபட்டிருக்கும். இலக்கணம், பேச்சு வழக்கு, உச்சரிப்பு,
> colloquialism, slang போன்ற மரபுவழிகள், என்றவாறு
> பலவழிகளில்
> அதனிடம் மாற்றங்களைத் தமிழ்க்கலப்பு ஏற்படுத்தி, அதன் போக்கைத்
> திருப்பிவிட்டிருக்கும். ஆந்திரத்தெலுங்கு வேறு தன்மைகளை
> வேறுவகையில் அடைந்திருக்கும்.
> மேலும், நாயக்கர்களிடமிருந்து மகாராஷ்டிரர்கள் தஞ்சையைக்
> கைப்பற்றியபின்னர், தெலுங்கின் செல்வாக்குக் குறைந்திருக்கும்.
> ஒரு static தன்மையை தஞ்சைத் தெலுங்கு அடைந்துவிட்டிருக்கும்.
> தெலுங்குக் குடியேற்றம், தெலுங்கின் செல்வாக்கு ஆகிய
> காலகட்டத்திலிருந்து தியாகைய்யரின் காலகட்டம் மிகவும் இடைவெளி
> யுடன் கூடியதாக உள்ளது.
> அப்போதிலிருந்து 20-ஆம் நூற்றாண்டுவரைக்கும் இந்த
> இருநூறு ஆண்டுகளில் ஆந்திரத்தெலுங்கு இன்னும் அதிக வளர்ச்சியையும்
> வேறுபாடுகளையும் பெற்றுவிட்டது.
> ஆகவே ஆந்திரர்களுக்கு தியாகைய்யரின் தெலுங்கு
> 'ஒரு தினுசாக'த் தோன்றத்தான் செய்யும்:-)
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
> ======================>
>
>


__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! Greetings - Send FREE e-cards for every occasion!
http://greetings.yahoo.com