From ganapathi s@... Wed Feb 27 23:59:54 2002
Return-Path:
X-Sender: ganapathi s@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 28 Feb 2002 07:59:53 -0000
Received: (qmail 17687 invoked from network); 28 Feb 2002 07:59:53 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 28 Feb 2002 07:59:53 -0000
Received: from unknown (HELO mailFA9.rediffmail.com) (202.54.124.178) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 28 Feb 2002 07:59:52 -0000
Received: (qmail 13464 invoked by uid 510); 28 Feb 2002 05:22:22 -0000
Date: 28 Feb 2002 05:22:22 -0000
Message-ID: <20020228052222.13463.qmail@...>
Received: from unknown (12.235.67.33) by rediffmail.com via HTTP; 28 Feb 2002 05:22:22 -0000
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar]Peace in Eelam
Content-type: text/plain; charset=iso-8859-1; format=flowed
Content-Transfer-Encoding: 8bit
Content-Disposition: inline
From: "Madhurabarathi"
Reply-To: "Madhurabarathi"
X-Yahoo-Group-Post: member; u=83645613
X-Yahoo-Message-Num: 16311
அன்புள்ள கவிமாமணி வேதம்,
பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்
மதுரபாரதி
>On Wed, 27 Feb 2002 Veeraraghavan wrote
> > ஈழத்தில் சமாதானம்
> > ------------
> >
> >
> > அந்த ஒளிக்கீற்று
> > மின்னலா, உதயமேதானா?
> >
> > நள்ளிரவுக் கதவுத்தட்டல்களில்
> > வெளிப்போந்து
> > வாராமல் மறைந்தவர் எத்தனை பேர்.
> >
> > ஆனாலும் கண்களின் கதவைத்
> > திறந்து வைத்துக்கொண்டு
> > வருவார் வருவார் என
> > நம்பிக்கையே விளக்காகக் காத்திருக்கும்
> > தாய்மார், மனைவிமார் எத்தனை பேர்.
> >
> > புதைத்த கண்ணிவெடிகள் உயிர்பெற்றபோது
> > எத்தனை உயிர்கள் புதைந்தன.
> >
> > வெடிப்பதுதான் நின்றிருக்கிறதா,
> > போரேவா?
> >
> > எழுதுகோல் ஏந்தித் திருவாசகமும் திரிகோணமிதியும்
> > கற்கவேண்டிய சிறாரின் கைகளில் தானியங்கி
> > விமானம் வீழ்த்தும் துப்பாக்கிகள்.
> >
> > என் செல்வங்களே வாருங்கள்,
> > வாழ்க்கையை மீண்டும் துவக்க
> > அவகாசம் உண்டு.
> >
> > என் தாய்மார்களே
> > வற்றிப் போனது கண்ணீர்தான்
> > முலைப்பால் மீண்டும் சுரக்கும்.
> >
> > நம்பிக்கையின் வெள்ளம் பாய்ந்து
> > மீண்டும் துளிர்க்கவேண்டும் மனிதம்.
> >
> > அடுத்த முறை இஇரவில்
> > கதவு தட்டப்படும்போது
> > தாழ் திறக்கக் கைநடுங்கும்
> > பழகிப்போன அச்சத்தினால்.
> >
> > திறவுங்கள்,
> > தட்டுவது அமைதித் தேவதையாகவும் இருக்கலாம்.