From harikris@... Thu Feb 28 00:38:38 2002
Return-Path: X-Sender: harikris@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 28 Feb 2002 08:38:38 -0000
Received: (qmail 16799 invoked from network); 28 Feb 2002 08:38:38 -0000
Received: from unknown (216.115.97.167) by m12.grp.snv.yahoo.com with QMQP; 28 Feb 2002 08:38:38 -0000
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (202.144.76.20) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 28 Feb 2002 08:38:36 -0000
Received: (qmail 26228 invoked from network); 28 Feb 2002 13:52:39 +0530
Received: from unknown (HELO harikris) (210.214.131.85) by 0 with SMTP; 28 Feb 2002 13:52:39 +0530
Message-ID: <00aa01c1c033$fae10300$1c83d6d2@harikris>
To: References: <20020228072236.55335.qmail@...>
Subject: Re: [agathiyar] Re: Fwd: Thyagaraja's Kritis in Tamil?
Date: Thu, 28 Feb 2002 14:12:01 +0530
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2314.1300
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
From: "Hari Krishnan" X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Profile: harikrishnan61
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 16312
மன்னிக்க வேண்டும் ராமையா. திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கம் எதுவும் இல்லை. எனக்குத்தான் மடலாடும் வகை சரியாகத் தெரியவில்லை. விவாதங்கள் சாதாரணமாக ஞாயிற்றுக் கிழமை சாயுங்காலம் நண்பர்களைச் சந்தித்து உரையாடுவது போல நடக்கின்றன என்று நான் எண்ணி விட்டேன். கேட்ட கேள்விக்கு மட்டும்தான் பதில் என்பது தெரியாமல் போய்விட்டது. அதுவும் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு மட்டும்தான் பதில் என்பது.
தியாகையருடைய தெலுங்கு எப்படிப்பட்டது என்பதைப் பற்றிச் சொல்வதற்கு எனக்கு எந்த யோக்கியதையும் கிடையாது. எனக்குத் தெரிந்த ஒரு செய்தியைப் பங்கிட்டுக்கொண்டேன் அவ்வளவே. அவரைக் குறைத்துச் சொல்லும் நோக்கம் இருந்திருந்தால் பாரதியைத் துணைக்ழைத்திருக்க மாட்டேன். டாக்டரவர்கள் சொல்லியிருப்பதுதான் நான் சொல்ல விழைந்ததும்.
ஸமயாமிகி தகு மாடலாடென.....
ஸாதிஞ்செனே, ஓமனஸா!
அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.
உங்களுக்கு தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகளுக்குப் பொருள் தெரிந்து கொள்ள வேண்டுமானால், ஏ. கே. கோபாலன் பப்ளிஷர், நெ.2 சேதுப்பிள்ளை தெரு, போஸ்டல் ஆடிட் காலனி, சாலிக்கிராமம், சென்னை 600093 என்ற பதிப்பகத்தார் (தொலைபேசி 483 5055) "ஸத்குரு ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமி கீர்த்தனைகள்" என்று 686 கீர்த்தனைகளுக்குத் தமிழில் பொருளுடன் வெளியிட்டிருக்கிறார்கள். வலைத்தளத்தைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
----- Original Message -----
From: Los Angeles Ram
To: agathiyar@yahoogroups.com
Sent: Thursday, February 28, 2002 12:52 PM
Subject: Re: [agathiyar] Re: Fwd: Thyagaraja's Kritis in Tamil?
நண்பர்களே,
இந்த இழை ஆரம்பத்தில் நான் கேட்டிருந்த கேள்வி ஒரு மாதிரியாகத் திசை
திருப்பப்பட்டுவிட்டது! தியாகையரின் தெலுங்கு உசத்தியா மட்டமா என்பதல்ல
என் கேள்வி. என் தெலுங்கை விட அவர் தெலுங்கு ஆயிரம் மடங்கு உயர்ந்தது
என்பதில் சந்தேகம் இல்லை!
விதி சால சுகமா!?
அன்புடன்,
எல்லே ராமுடு
[Non-text portions of this message have been removed]